Author: Farook

Bukhari-5941

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5941. அஸ்மா (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, ‘இறைத்தூதர் அவர்களே! என் மகளுக்குத் தட்டம்மை நோய் ஏற்பட்டு அதன் காரணத்தால் அவளுடைய தலைமுடி கொட்டிவிட்டது. அவளை நான் மணமுடித்துக் கொடுத்திருக்கிறேன்.

அவளுடைய தலை முடியுடன் ஒட்டுமுடி வைக்கலாமா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்)’ என்று கூறினார்கள்.127

Book :77


سَأَلَتِ امْرَأَةٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ابْنَتِي أَصَابَتْهَا الحَصْبَةُ، فَامَّرَقَ شَعَرُهَا، وَإِنِّي زَوَّجْتُهَا، أَفَأَصِلُ فِيهِ؟ فَقَالَ: «لَعَنَ اللَّهُ الوَاصِلَةَ وَالمَوْصُولَةَ»


Bukhari-5940

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 85

ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் பெண்.126

5940. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக் கொள்பவளையும் சபித்தார்கள்.

Book : 77


«لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ، وَالوَاشِمَةَ وَالمُسْتَوْشِمَةَ»


Bukhari-5939

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 84

(அழகிற்காக) முகத்தின் முடியை நீக்கிக் கொள்ளும் பெண்கள்.124

5939. அல்கமா இப்னு கைஸ் (ரஹ்) அறிவித்தார்:

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) பச்சைகுத்திவிடும் பெண்களையும் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்கிக் கொள்ளும் பெண்களையும் அழகிற்காக பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக்கொள்ளும் பெண்களையும் (மொத்தத்தில்) அல்லாஹ் படைத்த உருவ அமைப்பை மாற்றும் பெண்களை சபித்தார்கள்.

(இதைக் கேள்விப்பட்ட) உம்மு யஅகூப் என்ற பெண், ‘என்ன இது (இவ்வாறெல்லாம் சபித்தீர்களாமே)?’ என்று கேட்டதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் யாரை சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான்  ஏன் சபிக்கக் கூடாது?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தப் பெண், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். (நீங்கள்

«لَعَنَ عَبْدُ اللَّهِ، الوَاشِمَاتِ وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ»

فَقَالَتْ أُمُّ يَعْقُوبَ: مَا هَذَا؟ قَالَ عَبْدُ اللَّهِ: «وَمَا لِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللَّهِ، وَفِي كِتَابِ اللَّهِ؟»

قَالَتْ: وَاللَّهِ لَقَدْ قَرَأْتُ مَا بَيْنَ اللَّوْحَيْنِ فَمَا وَجَدْتُهُ، قَالَ: ” وَاللَّهِ لَئِنْ قَرَأْتِيهِ لَقَدْ وَجَدْتِيهِ: {وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا} [الحشر: 7]


Bukhari-5938

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5938. ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்) கூறினார்:

முஆவியா (ரலி) மதீனாவுக்கு இறுதியாக வந்தார்கள். அப்போது எங்களுக்கு உரையாற்றினார்கள். மேலும், முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, ‘இந்த ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் செயலை யூதர்களைத் தவிர வேறெவரும் செய்வதை நான் பார்த்ததில்லை.

நபி (ஸல்) அவர்கள் இதை போலி (‘ஸூர்’) என அழைத்தார்கள்’ என்று ஒட்டுமுடி வைப்பதைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

Book :77


قَدِمَ مُعَاوِيَةُ المَدِينَةَ، آخِرَ قَدْمَةٍ قَدِمَهَا، فَخَطَبَنَا فَأَخْرَجَ كُبَّةً مِنْ شَعَرٍ، قَالَ: مَا كُنْتُ أَرَى أَحَدًا  يَفْعَلُ هَذَا غَيْرَ اليَهُودِ

«إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمَّاهُ الزُّورَ. يَعْنِي الوَاصِلَةَ فِي الشَّعَرِ»


Bukhari-5937

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5937. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்.)

இதை இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்), ‘பல் ஈறுகளிலும் பச்சை குத்தப்படுவதுண்டு’ என்று கூறினார்கள்.

Book :77


«لَعَنَ اللَّهُ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ، وَالوَاشِمَةَ وَالمُسْتَوْشِمَةَ» وَقَالَ نَافِعٌ: «الوَشْمُ فِي اللِّثَةِ»


Bukhari-5936

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5936. அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் (‘அல்லாஹ் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும்’ என்று) சபித்தார்கள்.

Book :77


«لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ»


Bukhari-5935

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5935. அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) கூறினார்:

ஒரு பெண் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் என் மகளுக்கு மணமுடித்து வைத்தேன். பிறகு அவள் (தட்டம்மையால்) நோயுற்றுவிட அதன் காரணத்தால் அவளுடைய தலை முடி கொட்டிவிட்டது. அவளுடைய கணவரோ (அவளை அழகுபடுத்தும்படி) என்னைத் தூண்டுகிறார்.

எனவே, அவளுடைய தலையில் நான் ஒட்டுமுடி வைத்து விடட்டுமா?’ என்று கேட்டார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும், ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் சபித்தார்கள்.

Book :77


أَنَّ امْرَأَةً جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: إِنِّي أَنْكَحْتُ ابْنَتِي، ثُمَّ أَصَابَهَا شَكْوَى، فَتَمَرَّقَ رَأْسُهَا، وَزَوْجُهَا يَسْتَحِثُّنِي بِهَا، أَفَأَصِلُ رَأْسَهَا؟ ” فَسَبَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ


Bukhari-5934

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5934. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு அவர் நோயுற்று விட அதன் காரணத்தால் அவரின் தலைமுடி கொட்டிவிட்டது. எனவே, அவரின் உறவினர்கள் அவருக்கு ஒட்டு முடிவைக்க விரும்பி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘ஒட்டு முடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்’) என்று கூறினார்கள்.

இதே ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.122

Book :77


أَنَّ جَارِيَةً مِنَ الأَنْصَارِ تَزَوَّجَتْ، وَأَنَّهَا مَرِضَتْ فَتَمَعَّطَ شَعَرُهَا، فَأَرَادُوا أَنْ يَصِلُوهَا، فَسَأَلُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَعَنَ اللَّهُ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ» تَابَعَهُ ابْنُ إِسْحَاقَ، عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنِ الحَسَنِ، عَنْ صَفِيَّةَ، عَنْ عَائِشَةَ


Bukhari-5933

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5933. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒட்டுமுடி வைத்துவிடும் பெண்கள், ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் பெண்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள் ஆகியோரை அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்.)

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book :77


«لَعَنَ اللَّهُ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ، وَالوَاشِمَةَ وَالمُسْتَوْشِمَةَ»


Bukhari-5932

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 83

ஒட்டுமுடி (முடியாலான சவுரி) வைத்துக் கொள்வது.

5932. ஹுமைத் இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப் (ரஹ்) அறிவித்தார்:

முஆவியா இப்னு அபீ சுஃப்யான் (ரலி) ஹஜ் செய்த ஆண்டில் சொற்பொழிவு மேடையின் மீது நின்றுகொண்டு (மெய்க்) காலவர் ஒருவரது கையிலிருந்த முடிக்கற்றை (சவுரி முடி) ஒன்றை எடுத்துக் காட்டி, ‘(மதீனாவாசிகளே!) உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இது போன்றதைத் தடை செய்து, ‘பனூஇஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்து போனதெல்லாம் அவர்களின் பெண்கள் இதைப் பயன்படுத்தியபோது தான்’ என்று சொல்ல கேட்டேன்’ எனக் கூறினார்கள்.121

Book : 77


أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، عَامَ حَجَّ، وَهُوَ عَلَى المِنْبَرِ، وَهُوَ يَقُولُ، وَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعْرٍ كَانَتْ بِيَدِ حَرَسِيٍّ: أَيْنَ عُلَمَاؤُكُمْ؟

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ، وَيَقُولُ: «إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَ هَذِهِ نِسَاؤُهُمْ»


Next Page » « Previous Page