Author: Farook

Bukhari-5931

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 82

அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக்கொள்ளும் பெண்கள்.119

5931. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்:

பச்சை குத்திவிடும், பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! .

நபி (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? அல்லாஹ்வின் வேதத்திலும் அது உள்ளதே!

‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதிலிருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கி விலகியிருங்கள்’ (என்பதே அந்த (திருக்குர்ஆன் 59:7 வது) வசனம்).120

Book : 77


«لَعَنَ اللَّهُ الوَاشِمَاتِ وَالمُسْتَوْشِمَاتِ، وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ تَعَالَى»

مَالِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ فِي كِتَابِ اللَّهِ: {وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ} [الحشر: 7]


Bukhari-5930

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 81

(‘தரீரா’ எனும்) வாசனைத் தூள்.118

5930. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜத்துல் வதா) ‘விடைபெறும்’ ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் நான் என் இரண்டு கைகளால் அவர்களுக்கு (‘தரீரா’ எனும்) வாசனைத் தூளைப் பூசிவிட்டேன்.

Book : 77


«طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ بِذَرِيرَةٍ فِي حَجَّةِ الوَدَاعِ، لِلْحِلِّ وَالإِحْرَامِ»


Bukhari-5929

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 80

நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக் கொள்வது.

5929. ஸுமாமா பின் அப்துல்லாஹ் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாகத் தரப்படும்) நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக்கொள்வார்கள். மேலும், அவர்கள் ‘நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட) நறுமணப் பொருளை மறுத்ததில்லை’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 77


أَنَّهُ كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ، وَزَعَمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ»


Bukhari-5928

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 79

விரும்பத்தகுந்த நறுமணப் பொருள்.

5928. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியபோது நான் அவர்களுக்கு என்னிடமிருந்ததிலேயே மிக நல்ல வாசனைப் பொருளைப் பூசிவந்தேன்.116

Book : 77


«كُنْتُ أُطَيِّبُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ إِحْرَامِهِ بِأَطْيَبِ مَا أَجِدُ»


Bukhari-5927

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 78

கஸ்தூரி பற்றிய குறிப்பு.

5927. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அல்லாஹ் கூறினான்:) ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) செயல் ஒவ்வொன்றும் அவனுக்கு உரியது; நோன்பைத் தவிர! ஏனெனில், அது எனக்குரியது. அதற்கு (நான் விரும்பிய அளவிற்கு) நானே பிரதிபலன் அளிக்கிறேன்.

(மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:)

நோன்பாளியின் வாய் வாடையானது, கஸ்தூரியின் வாசனையை விட அல்லாஹ்விடம் நறுமணமிக்கதாகும்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.115

Book : 77


«كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصَّوْمَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ المِسْكِ»


Bukhari-5926

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 77

தலை வாருவதும், அதை வலப் பக்கத்திலிருந்து ஆரம்பிப்பதும்.

5926. ஆயிஷா(ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் தலைவாரிக் கொள்ளும்போதும் சரி, அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்யும்போதும் சரி இயன்ற வரை வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதே அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது.114

Book : 77


«أَنَّهُ كَانَ يُعْجِبُهُ التَّيَمُّنُ مَا اسْتَطَاعَ، فِي تَرَجُّلِهِ وَوُضُوئِهِ»


Bukhari-5925

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 76

மாதவிடாய் ஏற்பட்ட பெண் தன் கணவருக்குத் தலை வாரிவிடுவது.

5925. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலையை நான் வாரிவிட்டிருக்கிறேன்.


இதே ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்தியாயம்: 77


«كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا حَائِضٌ»

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: مِثْلَهُ


Bukhari-5924

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 75

சீப்பினால் தலை வாருதல்.

5924. ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்:

ஒருவர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தம் தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததையறிந்த) நபி (ஸல்) அவர்கள், ‘நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன்.

(வீட்டுக்குள், நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலிருப்பவர்களின் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால் தான்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 77


أَنَّ رَجُلًا اطَّلَعَ مِنْ جُحْرٍ فِي دَارِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحُكُّ رَأْسَهُ بِالْمِدْرَى

فَقَالَ: «لَوْ عَلِمْتُ أَنَّكَ تَنْظُرُ، لَطَعَنْتُ بِهَا فِي عَيْنِكَ، إِنَّمَا جُعِلَ الإِذْنُ مِنْ قِبَلِ الأَبْصَارِ»


Bukhari-5923

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 74

தலைக்கும் தாடிக்கும் நறுமணம் பூசுவது.

5923. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசிவந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களின் தலையிலும், அவர்களின் தாடியிலும் என்னால் காணமுடிந்தது.

Book : 77


«كُنْتُ أُطَيِّبُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَطْيَبِ مَا يَجِدُ، حَتَّى أَجِدَ وَبِيصَ الطِّيبِ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ»


Bukhari-5922

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 73

மனைவி தன் கரங்களால் கணவனுக்கு நறுமணம் பூசுவது.

5922. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ கட்டியபோது நான்அவர்களுக்கு என் கையால் நறுமணம் பூசிவிட்டேன். மேலும், (இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபட்டபோதும்) ‘மினா’வில் வைத்து (அங்கிருந்து) அவர்கள் (தவாஃபுஸ் ஸியாரத் செய்ய) புறப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு நறுமணம் பூசினேன்.

Book : 77


«طَيَّبْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِي لِحُرْمِهِ، وَطَيَّبْتُهُ  بِمِنًى قَبْلَ أَنْ يُفِيضَ»


Next Page » « Previous Page