5921. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.
Book :77
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ القَزَعِ»
5921. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.
Book :77
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ القَزَعِ»
பாடம்: 72
தலைமுடியில் சிறிதளவு மழித்துவிட்டு சிறிதளவு மழிக்காமல் விட்டுவிடுவது (குடுமி வைப்பது).
5920. நாஃபிஉ (ரஹ்) அறிவித்தார்:
இப்னு உமர் (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குடுமி (‘கஸஉ’) வைத்துக் கொள்ளக் கூடாதெனத் தடை விதித்ததை நான் செவியேற்றேன்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் இப்னு ஹஃப்ஸ் (ரஹ்) கூறினார்:
நான், உமர் இப்னு நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் ‘ ‘கஸஉ’ (குடுமி) என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஒருவர் சிறுவனின் தலை முடியை மழிக்கும்போது (சிறிது மழித்துவிட்டு), இங்கு அங்குமாக (சிற்சில இடங்களில் மட்டும்) முடியை (மழிக்காமல்) அப்படியே விட்டுவிடுவதாகும்’ என்று கூறி, தம் நெற்றி முடி மற்றும் தலையின் இரண்டு பக்கங்களையும் எங்களிடம் கட்டிக் காட்டினார்கள்.
உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘சிறுமி, சிறுவன் இருவருக்கும் இதே சட்டம் தானா?’ என்று கேட்கப்பட்டது? அவர்கள் ‘எனக்குத் «سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنِ القَزَعِ» قَالَ عُبَيْدُ اللَّهِ: قُلْتُ: وَمَا القَزَعُ؟ فَأَشَارَ لَنَا عُبَيْدُ اللَّهِ قَالَ: إِذَا حَلَقَ الصَّبِيَّ، وَتَرَكَ هَا هُنَا شَعَرَةً وَهَا هُنَا وَهَا هُنَا، فَأَشَارَ لَنَا عُبَيْدُ اللَّهِ إِلَى نَاصِيَتِهِ وَجَانِبَيْ رَأْسِهِ. قِيلَ لِعُبَيْدِ اللَّهِ: فَالْجَارِيَةُ وَالغُلاَمُ؟ قَالَ: لاَ أَدْرِي، هَكَذَا قَالَ: الصَّبِيُّ. قَالَ عُبَيْدُ اللَّهِ: وَعَاوَدْتُهُ، فَقَالَ: أَمَّا القُصَّةُ وَالقَفَا لِلْغُلاَمِ فَلاَ بَأْسَ بِهِمَا، وَلَكِنَّ القَزَعَ أَنْ يُتْرَكَ بِنَاصِيَتِهِ شَعَرٌ، وَلَيْسَ فِي رَأْسِهِ غَيْرُهُ، وَكَذَلِكَ شَقُّ رَأْسِهِ هَذَا وَهَذَا
பாடம் : 71
தொங்கும் முடிகள்.
5919. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:
(நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) என் சிறிய தாயார் மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்களின் இல்லத்தில் நான் ஓரிரவு தங்கினேன். அந்த இரவில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தார்கள். இரவில் (‘தஹஜ்ஜுத்’ தொழுகை) தொழுவதற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள்.
நான் (எழுந்து) அவர்களுக்கு இடப் பக்கமாக(ப் போய்) நின்றேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என் தொங்கும் முடியைப் பிடித்துத் தம் வலப் பக்கத்தில் என்னை நிறுத்திக் கொண்டார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபூ பிஷ்ர் (ரஹ்) அவர்களின் இந்த அறிவிப்பில், ‘என் தொங்கும் முடியைப் பிடித்து’ அல்லது ‘என் தலையைப் பிடித்து’ என்று (ஐயப்பாட்டுடன்) இடம் பெற்றுள்ளது.112
Book : بِتُّ لَيْلَةً عِنْدَ مَيْمُونَةَ بِنْتِ الحَارِثِ خَالَتِي، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا فِي لَيْلَتِهَا، قَالَ: «فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ» قَالَ: «فَأَخَذَ بِذُؤَابَتِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ» حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ: بِهَذَا، وَقَالَ: بِذُؤَابَتِي، أَوْ بِرَأْسِي
5918. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தபோது அவர்களின் தலை வகிடுகளில் (அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன் பூசியிருந்த) நறுமணப் பொருள் மின்னியதை (இப்போதும்) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
அப்துல்லாஹ் இப்னு ரஜாஉ (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘நபி (ஸல்) அவர்களின் வகிட்டில்’ என்று (ஒருமையாக) வந்துள்ளது.
Book :77
«كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الطِّيبِ فِي مَفَارِقِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْرِمٌ»
قَالَ عَبْدُ اللَّهِ: فِي مَفْرِقِ النَّبِيِّ
பாடம்: 70
தலை முடியில் வகிடு எடுத்தல்.
5917. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) எந்த விஷயத்தில் தமக்கு (இறைக்) கட்டளை ஏதும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப்போவதை விரும்பி வந்தார்கள்.
வேதக்காரர்கள் தங்களின் தலை முடியை (வகிடெடுத்து வாரிவிடாமல் நெற்றியில்) தொங்கவிட்டுவந்தார்கள். இணைவைப்பாளர்கள் தங்கள் தலை(முடி)களை வகிடு எடுத்துப் பிரித்துவந்தார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் (முதலில்) முன் தலைமுடியை (நெற்றியில்) தொங்கவிட்டு வந்தார்கள். பிறகு அதை (வகிடெத்து)ப் பிரித்தார்கள்.
அத்தியாயம்: 77
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ مُوَافَقَةَ أَهْلِ الكِتَابِ فِيمَا لَمْ يُؤْمَرْ فِيهِ، وَكَانَ أَهْلُ الكِتَابِ يَسْدِلُونَ أَشْعَارَهُمْ،
وَكَانَ المُشْرِكُونَ يَفْرُقُونَ رُءُوسَهُمْ،
فَسَدَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاصِيَتَهُ، ثُمَّ فَرَقَ بَعْدُ»
5916. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அறிவித்தார்:
நான் (‘விடைபெறும்’) ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! மக்களின் நிலை என்ன? நீங்கள் உங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து இன்னும் விடுபடாமலிருக்க அவர்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்களே!’ என்று கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள், ‘நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படியவைத்து விட்டேன். மேலும், என் தியாக (குர்பானி)ப் பிராணிக்கு (அடையாள) மாலை தொங்கவிட்டு விட்டேன். எனவே, நான் (ஹஜ் செய்து, அந்தப் பிராணியை) அறுக்கும் வரை இஹ்ராமிலிருந்து விடுபட மாட்டேன்’ என்று பதிலளித்தார்கள்.110
Book :77
قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا شَأْنُ النَّاسِ حَلُّوا بِعُمْرَةٍ وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ؟
قَالَ: «إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي فَلاَ أَحِلُّ حَتَّى أَنْحَرَ»
5915. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோது) தலை முடியைக் களிம்பு தடவிப் படியவைத்தவர்களாக, ‘லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க, லா ஷரீ(க்)க, ல(க்)க லப்பைக்க, இன்னல் ஹம்த வந்நிஅமத்த ல(க்)க வல்முல்(க்)க, லா ஷரீ(க்)க லக்க’ என்று கூற கேட்டேன்.
இந்த வார்த்தைகளை விட அதிகமாக அவர்கள் எதையும் கூறவில்லை.
(பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன். இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன். இணையில்லாதோனே! உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாணவர் எவருமில்லை). 109
Book :77
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهِلُّ مُلَبِّدًا يَقُولُ: «لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ»
لاَ يَزِيدُ عَلَى هَؤُلاَءِ الكَلِمَاتِ
பாடம் : 69
தலைமுடியைக் களிம்பு தடவிப் படிய வைத்தல் (தல்பீத்).107
5914. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், ‘(தலையில்) சடை வளர்த்திருப்பவர் (ஹஜ்ஜின் முடிவில் தலை முடியை) மழித்துக் கொள்ளட்டும். (சடை வளர்ப்பதன் மூலம்) களிம்பு தடவித் தலை முடியைப் படிய வைப்பவர்களுக்கு ஒப்பாகி விட வேண்டாம்’ என்று சொல்ல கேட்டேன்.
(இதை அறிவிப்பவரான சாலிம் இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.)
(என் தந்தை) இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் தலை முடியைக் களிம்பு தடவிப் படிய வைத்துக் கொண்டதை பார்த்தேன்’ என்று கூறுவார்கள்.108
Book : 77
«مَنْ ضَفَّرَ فَلْيَحْلِقْ، وَلاَ تَشَبَّهُوا بِالتَّلْبِيدِ»
وَكَانَ ابْنُ عُمَرَ، يَقُولُ: «لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُلَبِّدًا»
5913. முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:
நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது மக்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர், ‘அவனுடைய இரண்டு கண்களுக்குமிடையே ‘காஃபிர்’ (இறை மறுப்பாளன்) என எழுதப்பட்டிருக்கும்’ என்றார்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘நான் இவ்வாறு கேள்விப்பட்டதில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள், ‘(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (எத்தகைய) உருவ அமைப்பில் இருந்தார் என்று அறிய வேண்டுமென்றால் உங்கள் தோழரை (என்னைப்) பாருங்கள்.
மூஸா (அலை) அவர்கள் எத்தகையவர் என்றால்) அவர்கள் பழுப்பு நிறமுடையவர்கள்; சுருள் முடி கொண்டவர்கள்; ஈச்ச மர நாரினால் மூக்கணாங்க கயிறு இடப்பட்ட சிவப்பு ஒட்டகம் ஒன்றின் மீது பயணம் செய்தபடி இருப்பார்கள். அவர்கள் (ஹஜ் செய்ய) ‘தல்பியா’ கூறியபடி (‘அல்அஸ்ரக்’ எனும்) பள்ளத்தாக்கில் இறங்கியபோது (அவர்களைக் கண்டேன். அந்தக் காட்சியை) நான் (இப்போதும்) பார்ப்பது போன்று உள்ளது’ என்றார்கள் எனத் தெரிவித்தார்கள்.106
كُنَّا عِنْدَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: فَذَكَرُوا الدَّجَّالَ، فَقَالَ: إِنَّهُ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ،
وَقَالَ ابْنُ عَبَّاسٍ: لَمْ أَسْمَعْهُ قَالَ ذَاكَ، وَلَكِنَّهُ قَالَ: «أَمَّا إِبْرَاهِيمُ فَانْظُرُوا إِلَى صَاحِبِكُمْ، وَأَمَّا مُوسَى فَرَجُلٌ آدَمُ جَعْدٌ، عَلَى جَمَلٍ أَحْمَرَ، مَخْطُومٍ بِخُلْبَةٍ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ إِذِ انْحَدَرَ فِي الوَادِي يُلَبِّي»
5911 & 5912. அனஸ் (ரலி), அல்லது ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்கள் பருத்த உள்ளங்கைகளும் பருத்த பாதங்களும் உடையவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப் பின் அவர்களைப் போன்றவர் எவரையும் நான் பார்க்கவில்லை.
Book :77
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَخْمَ الكَفَّيْنِ وَالقَدَمَيْنِ، لَمْ أَرَ بَعْدَهُ شَبَهًا لَهُ»
சமீப விமர்சனங்கள்