5910. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உறுதியான பாதங்களும் (உறுதியான) உள்ளங்கைகளும் உடையவர்களாக இருந்தார்கள்.
அத்தியாயம்: 77
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَثْنَ القَدَمَيْنِ وَالكَفَّيْنِ»
5910. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உறுதியான பாதங்களும் (உறுதியான) உள்ளங்கைகளும் உடையவர்களாக இருந்தார்கள்.
அத்தியாயம்: 77
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَثْنَ القَدَمَيْنِ وَالكَفَّيْنِ»
5908. அனஸ் பின் மாலிக் (ரலி) அல்லது அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பருத்த பாதங்களை உடையவர்களாகவும் அழகிய முகம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களைப் போல் (வேறெவரையும்) நான் பார்க்கவில்லை.
அத்தியாயம்: 77
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَخْمَ القَدَمَيْنِ، حَسَنَ الوَجْهِ، لَمْ أَرَ بَعْدَهُ مِثْلَهُ»
5907. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பருத்த கைகளும் பருத்த பாதங்களும் உடையவர்களாகவும், முகம் அழகானவர்களாகவும் இருந்தார்கள். நான் அவர்களுக்கு முன்போ அவர்களுக்குப் பின்போ அவர்களைப் போன்று (வேறு யாரையும்) பார்க்கவில்லை. அவர்களின் உள்ளங்கைகள் விசாலமானவையாக இருந்தன.
அத்தியாயம்: 77
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَخْمَ اليَدَيْنِ وَالقَدَمَيْنِ، حَسَنَ الوَجْهِ، لَمْ أَرَ بَعْدَهُ وَلَا قَبْلَهُ مِثْلَهُ، وَكَانَ بَسِطَ الكَفَّيْنِ»
5906. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பருத்த கைகள் உடையவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப் பின் அவர்களைப் போன்று (வேறு யாரையும்) நான் பார்க்கவில்லை. நபி (ஸல்) அவர்களின் (தலை) முடி அலையலையானதாக இருந்தது. படிந்ததாகவும் இல்லை; சுருள் முடியாகவும் இல்லை.
அத்தியாயம்: 77
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَخْمَ اليَدَيْنِ، لَمْ أَرَ بَعْدَهُ مِثْلَهُ، وَكَانَ شَعَرُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجِلًا، لاَ جَعْدَ وَلاَ سَبِطَ»
5905. கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (தலை) முடி பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (தலை) முடி அலையலையானதாக இருந்தது. படிந்த முடியாகவும் இல்லை; சுருள் முடியாகவும் இல்லை; அவர்களின் காது மடல்களுக்கும் அவர்களின் தோளுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்தது’ என்று பதிலளித்தார்கள்.
Book :77
سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ شَعَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «كَانَ شَعَرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجِلًا ، لَيْسَ بِالسَّبِطِ وَلاَ الجَعْدِ، بَيْنَ أُذُنَيْهِ وَعَاتِقِهِ»
5904. அனஸ் (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்களின் (தலை) முடி அவர்களின் தோள்களைத் தொட்டுக் கொண்டிருந்தது.
Book :77
«كَانَ يَضْرِبُ شَعَرُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْكِبَيْهِ»
5903. அனஸ் (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்களின் (தலை) முடி அவர்களின் தோள்களில் பட்டுக் கொண்டிருந்தது.
அத்தியாயம்: 77
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَضْرِبُ شَعَرُهُ مَنْكِبَيْهِ»
5902. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இன்றிரவு (இறையில்லம்) கஅபாவின் அருகே எனக்கு(க் கனவில்) என்னைக் காட்டப்பட்டது. அப்போது மனிதர்களில் மாநிறத்தில் நீ பார்த்ததிலேயே மிக அழகான மாநிறமுடைய மனிதர் ஒருவரைக் கண்டேன். தோள்வரை நீண்ட முடிகளில் நீ பார்த்தவற்றிலேயே மிக அழகான முடி அவருக்கு இருந்தது. அதை அவர் வாரிவிட்டிருந்தார். அதிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.
அவர் ‘இரண்டு மனிதர்களின் மீது சாய்ந்தபடி’ அல்லது ‘இரண்டு மனிதர்களின் தோள்களின் மீது சாய்ந்தபடி’ இறையில்லத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.
நான், ‘யார் இவர்?’ என்று கேட்டேன். மர்யமின் குமாரர் மஸீஹ்(ஈசா)’ என்று பதிலளிக்கப்பட்டது. அப்போது அங்கே கடும் சுருள் முடி கொண்ட, வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்கிருந்த கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், ‘யார் இவன்?’ என்று கேட்டேன். ‘மஸீஹுத் தஜ்ஜால்’ என்று பதிலளிக்கப்பட்டது.
أُرَانِي اللَّيْلَةَ عِنْدَ الكَعْبَةِ، فَرَأَيْتُ رَجُلًا آدَمَ، كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ مِنْ أُدْمِ الرِّجَالِ، لَهُ لِمَّةٌ كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ مِنَ اللِّمَمِ قَدْ رَجَّلَهَا، فَهِيَ تَقْطُرُ مَاءً، مُتَّكِئًا عَلَى رَجُلَيْنِ، أَوْ عَلَى عَوَاتِقِ رَجُلَيْنِ، يَطُوفُ بِالْبَيْتِ، فَسَأَلْتُ: مَنْ هَذَا؟ فَقِيلَ: المَسِيحُ ابْنُ مَرْيَمَ، وَإِذَا أَنَا بِرَجُلٍ جَعْدٍ قَطَطٍ، أَعْوَرِ العَيْنِ اليُمْنَى، كَأَنَّهَا عِنَبَةٌ طَافِيَةٌ، فَسَأَلْتُ: مَنْ هَذَا؟ فَقِيلَ: المَسِيحُ الدَّجَّالُ
5901. பராஉ (ரலி) அறிவித்தார்:
சிவப்பு நிற ஆடையில் நபி (ஸல்) அவர்களை விட அழகானவராக வேறெவரையும் நான் பார்க்கவில்லை.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
மாலிக் இப்னு இஸ்மாயீல் (ரஹ்) அவர்களிடமிருந்து என் தோழர்களில் ஒருவர், ‘நபி (ஸல்) அவர்களின் தலைமுடி (நீண்டு வளர்ந்திருக்கும் சமயத்தில்) அவர்களின் தோள்களைத் தொட்டுக்கொண்டிருந்தது’ என்று அறிவித்தார்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ இஸ்ஹாக் அம்ர் இப்னு அப்தில்லாஹ் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை பராஉ (ரலி) அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் அறிவிப்பதை கேட்டிருக்கிறேன். இதை அறிவிக்கும் போதெல்லாம் அவர்கள் சிரிக்காமல் இருந்ததில்லை. அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்களிடமிருந்து ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸில், ‘நபி (ஸல்) அவர்களின் (தலை) முடி அவர்களின் காதின் சோணையை எட்டும் அளவிற்கு இருந்தது’ என்று இடம் பெற்றுள்ளது. 104
«مَا رَأَيْتُ أَحَدًا أَحْسَنَ فِي حُلَّةٍ حَمْرَاءَ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
قَالَ بَعْضُ أَصْحَابِي، عَنْ مَالِكٍ: «إِنَّ جُمَّتَهُ لَتَضْرِبُ قَرِيبًا مِنْ مَنْكِبَيْهِ»
قَالَ أَبُو إِسْحَاقَ: – «سَمِعْتُهُ يُحَدِّثُهُ غَيْرَ مَرَّةٍ، مَا حَدَّثَ بِهِ قَطُّ إِلَّا ضَحِكَ -»
قَالَ شُعْبَةُ: «شَعَرُهُ يَبْلُغُ شَحْمَةَ أُذُنَيْهِ»
பாடம் : 68
சுருள் முடி.
5900. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவிற்கு அதிக உயரமானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. சுத்த வெள்ளை நிறம் உடையவர்களாகவும் இல்லை; மாநிறம் கொண்டவர்களாகவும் இல்லை; கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை; (தொங்கலான) படிந்த முடியுடையவர்களாகவும் இல்லை.(மாறாக, இவற்றில் நடுநிலையாளராக இருந்தார்கள்.)
நாற்பது வயதின் தொடக்கத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் தூதராக நியமித்தான். அதன் பிறகு, அவர்கள் மக்கா நகரில் (வஹீ நின்றுபோன மூன்று ஆண்டுகள் நீங்கலாக) பத்து ஆண்டுகளும் மதீனா நகரில் பத்து ஆண்டுகளும் தங்கியிருந்தார்கள்.
அவர்களின் தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையில் அல்லாஹ் அவர்களை இறக்கச் செய்தான்.103
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ بِالطَّوِيلِ البَائِنِ، وَلاَ بِالقَصِيرِ، وَلَيْسَ بِالأَبْيَضِ الأَمْهَقِ، وَلَيْسَ بِالْآدَمِ، وَلَيْسَ بِالْجَعْدِ القَطَطِ، وَلاَ بِالسَّبْطِ،
بَعَثَهُ اللَّهُ عَلَى رَأْسِ أَرْبَعِينَ سَنَةً، فَأَقَامَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ، وَبِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ،
وَتَوَفَّاهُ اللَّهُ عَلَى رَأْسِ سِتِّينَ سَنَةً، وَلَيْسَ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ عِشْرُونَ شَعَرَةً بَيْضَاءَ»
சமீப விமர்சனங்கள்