Author: Farook

Bukhari-5899

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 67

(நரை முடிக்குச்) சாயமிடுதல்.101

5899. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை; எனவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.102

Book : 77


«إِنَّ اليَهُودَ وَالنَّصَارَى لَا يَصْبُغُونَ، فَخَالِفُوهُمْ»


Bukhari-5898

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5898. உஸ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி மவ்ஹப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:

உம்மு ஸலமா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் முடியை சிவப்பானதாக எனக்குக் காட்டினார்கள்.100

Book :77


أَنَّ أُمَّ سَلَمَةَ، أَرَتْهُ «شَعَرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْمَرَ»


Bukhari-5897

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5897. உஸ்மான் பின் அப்துல்லாஹ் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:

நான் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முடிகளிலிருந்து சாயமிடப்பட்ட ஒரு முடியை எங்களிடம் எடுத்துக் காட்டினார்கள்.

அத்தியாயம்: 77


دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ، « فَأَخْرَجَتْ إِلَيْنَا شَعَرًا مِنْ شَعَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَخْضُوبًا»


Bukhari-5896

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5896. உஸ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி மவ்ஹப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் என்னை என் குடும்பத்தார் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். (உம்மு ஸலமா ஒரு சிமிழைக் கொண்டுவந்தார்கள்.) அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபி (ஸல்) அவர்களின் முடிகளில் ஒரு முடி இருந்தது. (பொதுவாக யாரேனும்) ஒருவருக்கு கண்ணேறு அல்லது நோய் ஏற்பட்டால், அவர் தம் நீர் பாத்திரத்தை உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைப்பார். (அவர்கள் தம்மிடமிருந்த நபியவர்களின் முடியைத் தண்ணீருக்குள் முக்கி அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்.) நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன்.

அறிவிப்பாளர் இஸ்ராயீல் இப்னு யூனுஸ் (ரஹ்) அவர்கள், (சிமிழின் அளவைக் காட்டும் விதத்தில்) தம் மூன்று விரல்களை மடித்துக் காட்டினார்கள்.

Book :77


أَرْسَلَنِي أَهْلِي إِلَى أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَدَحٍ مِنْ مَاءٍ – وَقَبَضَ إِسْرَائِيلُ ثَلاَثَ أَصَابِعَ مِنْ قُصَّةٍ – فِيهِ شَعَرٌ مِنْ شَعَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

وَكَانَ إِذَا أَصَابَ الإِنْسَانَ عَيْنٌ أَوْ شَيْءٌ بَعَثَ إِلَيْهَا مِخْضَبَهُ، فَاطَّلَعْتُ فِي الجُلْجُلِ، فَرَأَيْتُ شَعَرَاتٍ حُمْرًا


Bukhari-5895

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5895. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:

அனஸ் (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் (தம் நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நபி (ஸல்) அவர்களுக்குச் சாயம் பூசுகிற அளவிற்கு நரைக்கவில்லை. அவர்களின் தாடியிலிருந்த வெள்ளை முடிகளை நான் நினைத்திருந்தால் எண்ணிக் கணக்கெடுத்திருக்க முடியும்’ என்று பதிலளித்தார்கள்.

Book :77


سُئِلَ أَنَسٌ، عَنْ خِضَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّهُ لَمْ يَبْلُغْ مَا يَخْضِبُ، لَوْ شِئْتُ أَنْ أَعُدَّ شَمَطَاتِهِ فِي لِحْيَتِهِ»


Bukhari-5894

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 66

நரை பற்றிய குறிப்பு.

5894. முஹம்மத் இப்னு சீரின் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் (தம் நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி (ஸல்) அவர்களுக்குச் சிறிதளவே நரை ஏற்பட்டிருந்தது’ என்று பதிலளித்தார்கள்.99

Book : 77


سَأَلْتُ أَنَسًا: أَخَضَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «لَمْ يَبْلُغِ الشَّيْبَ إِلَّا قَلِيلًا»


Bukhari-5893

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 65

தாடிகளை அப்படியே வளரவிடுதல்.

(7:95 ஆவது இறைவசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஃபவ்’ எனும் சொல்லுக்கு ‘அவர்கள் பெருகினார்கள்; அவர்களுடய செல்வங்களும் பெருகின’ என்று பொருள்.98

5893. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள்.

என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

Book : 77


«انْهَكُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللِّحَى»


Bukhari-5892

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5892. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தம் தாடியைப் பிடித்துப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள்) 

அத்தியாயம்: 77


خَالِفُوا المُشْرِكِينَ: وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ “

وَكَانَ ابْنُ عُمَرَ: «إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ»


Bukhari-5891

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5891. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்தசேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்கக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை.

என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book :77


الفِطْرَةُ خَمْسٌ: الخِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَقَصُّ الشَّارِبِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ، وَنَتْفُ الآبَاطِ


Bukhari-5890

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 64

நகங்களை வெட்டுதல்.

5890. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மர்ம உறுப்பின் முடிகளைக் களைவது, நகங்களை வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது ஆகியன இயற்கை மரபுகளில் அடங்கும்.

என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

Book : 77


مِنَ الفِطْرَةِ: حَلْقُ العَانَةِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ


Next Page » « Previous Page