Author: Farook

Bukhari-5889

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5889. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book :77


الفِطْرَةُ خَمْسٌ، أَوْ خَمْسٌ مِنَ الفِطْرَةِ: الخِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَنَتْفُ الإِبْطِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ


Bukhari-5888

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 63

மீசையைக் கத்தரிப்பது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது சருமத்தின் வெண்மை தெரிகின்ற அளவிற்குத் தமது மீசையை ஒட்ட நறுக்குவது வழக்கம். மீசைக்கும் தாடிக்கும் இடையிலுள்ள (குறுந்தாடி) முடிகளை அகற்றிவிடுவார்கள்.

5888. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மீசையைக் கத்தரிப்பது இயற்கை மரபில் அடங்கும்.97

என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

Book : 77


«مِنَ الفِطْرَةِ قَصُّ الشَّارِبِ»


Bukhari-5887

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5887. (நபியவர்களுடைய துணைவியார் உம்மு ஸலமா (ரலி) அறிவித்தார்:

என் வீட்டில் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) ‘அலி’ ஒருவர் இருந்த போது நபி (ஸல்) அவர்களும் அங்கு இருந்தார்கள். அப்போது அந்த அலி, என் சகோதரர் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம் ‘அப்துல்லாஹ்வே! நாளை உங்களுக்கு தாயிஃப் நகரத்தின் மீது அல்லாஹ் வெற்றியளித்தால் ஃகைலானின் மகளை உனக்கு நான் காட்டுகிறேன்.

(அவளை மணந்துகொள்.) ஏனெனில், அவள் முன்பக்கம் நாலு (சதைமடிப்புகளுட)னும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்’ என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘(அலிகளான) இவர்கள் உங்களிடம் ஒருபோதும் வரவேண்டாம்’ என்றார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:

அவளுடைய வயிற்றுச் சதையின் நான்கு மடிப்புகளின் காரணத்தால் ‘முன்பக்கம் நான்கு மடிப்புகளுடன் காட்சி தருகிறாள்’ என்று அந்த அலி சொன்னார். அந்த நான்கு மடிப்புகளின் ஓரங்கள் இரண்டு புறங்களிலும் சேர்ந்து பின்புறம் எட்டு ஓரங்களாக காட்சி தருவதால் ‘பின்பக்கம்

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عِنْدَهَا وَفِي البَيْتِ مُخَنَّثٌ، فَقَالَ لِعَبْدِ اللَّهِ أَخِي أُمِّ سَلَمَةَ: يَا عَبْدَ اللَّهِ، إِنْ فَتَحَ اللَّهُ لَكُمْ غَدًا الطَّائِفَ، فَإِنِّي أَدُلُّكَ عَلَى بِنْتِ غَيْلاَنَ، فَإِنَّهَا تُقْبِلُ بِأَرْبَعٍ وَتُدْبِرُ بِثَمَانٍ،

فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ يَدْخُلَنَّ هَؤُلاَءِ عَلَيْكُنَّ»

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” تُقْبِلُ بِأَرْبَعٍ وَتُدْبِرُ، يَعْنِي أَرْبَعَ عُكَنِ بَطْنِهَا، فَهِيَ تُقْبِلُ بِهِنَّ، وَقَوْلُهُ: وَتُدْبِرُ بِثَمَانٍ، يَعْنِي أَطْرَافَ هَذِهِ العُكَنِ الأَرْبَعِ، لِأَنَّهَا مُحِيطَةٌ بِالْجَنْبَيْنِ حَتَّى لَحِقَتْ،

وَإِنَّمَا قَالَ بِثَمَانٍ، وَلَمْ يَقُلْ بِثَمَانِيَةٍ، وَوَاحِدُ الأَطْرَافِ، وَهُوَ ذَكَرٌ، لِأَنَّهُ لَمْ يَقُلْ ثَمَانِيَةَ أَطْرَافٍ


Bukhari-5886

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 62

பெண்களைப் போன்று நடந்துகொள்பவர்(களான அலி)களை வீட்டிலிருந்து வெளியேற்றுதல்.

5886. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள்.

மேலும், ‘அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்’ என்றார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள்.95

Book : 77


لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ، وَالمُتَرَجِّلاَتِ مِنَ النِّسَاءِ،

وَقَالَ: «أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ» قَالَ: فَأَخْرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فُلاَنًا، وَأَخْرَجَ عُمَرُ فُلاَنًا


Bukhari-5885

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 61

பெண்களைப் போல ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களும், ஆண்களைப் போல ஒப்பனை செய்துகொள்ளும் பெண்களும்.

5885. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book : 77


«لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ»


Bukhari-5884

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 60

குழந்தைகளுக்கான நறுமண மாலைகள்.

5884. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்:

நான் மதீனா கடைவீதிகளில் ஒன்றில் (‘பனூ கைனுகா’ கடைவீதியில்) இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்குச்) செல்லவே நானும் (அவர்களுடன்) சென்றேன். (வீட்டுக்கு வந்ததும்,) ‘பொடிப் பையன் எங்கே?’ என்று மும்முறை கேட்டார்கள். பிறகு ‘அலீயின் மகன் ஹசனைக் கூப்பிடுங்கள்’ என்றார்கள். அப்போது அலீ (ரலி) அவர்களின் புதல்வர் ஹஸன் (ரலி) அவர்கள் கழுத்தில் நறுமண மாலை ஒன்றை அணிந்தபடி நடந்து வந்தார்கள். அவர்களைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள் இப்படித் தம் கையை விரித்தபடி அவரை நோக்கிச் சென்றார்கள். ஹஸன் (ரலி) அவர்களும் இவ்வாறு தம் கையை விரித்த படி (நபி (ஸல்) அவர்களை அணைத்திட) அவர்களை நோக்கி வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களை அணைத்துக்கொண்டு, ‘இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரையும், இவரை நேசிப்பவர்களையும் நேசிப்பாயாக!’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سُوقٍ مِنْ أَسْوَاقِ المَدِينَةِ، فَانْصَرَفَ فَانْصَرَفْتُ، فَقَالَ: «أَيْنَ لُكَعُ – ثَلاَثًا – ادْعُ الحَسَنَ بْنَ عَلِيٍّ».

فَقَامَ الحَسَنُ بْنُ عَلِيٍّ يَمْشِي وَفِي عُنُقِهِ السِّخَابُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ هَكَذَا، فَقَالَ الحَسَنُ بِيَدِهِ هَكَذَا، فَالْتَزَمَهُ

فَقَالَ: «اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ فَأَحِبَّهُ، وَأَحِبَّ مَنْ يُحِبُّهُ»

وَقَالَ أَبُو هُرَيْرَةَ: فَمَا كَانَ أَحَدٌ أَحَبَّ إِلَيَّ مِنَ الحَسَنِ بْنِ عَلِيٍّ، بَعْدَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَالَ


Bukhari-5883

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 59

பெண்கள் கம்மல் அணிவது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி பெண்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே அவர்கள் தங்கள் காதுகளையும் கழுத்துகளையும் நோக்கி (அவற்றிலுள்ள நகைகளைக் கழற்றித் தர கைகளைக் கொண்டு) சென்றதை நான் கண்டேன்.93

5883. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:

(நோன்புப்) பெருநாளில் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்பும் சரி அதற்குப் பின்பும் சரி அவர்கள் (கூடுதலாக) எதையும் தொழவில்லை. பிறகு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்களிடம் (மகளிர் பகுதிக்கு) வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே, ஒரு பெண் தன்னுடைய கம்மலை(க் கழற்றி)ப் போடலானார்.

Book : 77


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلَّى  يَوْمَ العِيدِ رَكْعَتَيْنِ، لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلاَ بَعْدَهَا، ثُمَّ أَتَى النِّسَاءَ وَمَعَهُ بِلاَلٌ،

فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ المَرْأَةُ تُلْقِي قُرْطَهَا»


Bukhari-5882

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 58

கழுத்து மாலைகளை இரவல் வாங்குதல்.

5882. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

(என்னிடமிருந்து) அஸ்மா (ரலி) அவர்களின் மாலையொன்று (பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பும் வழியில்) தொலைந்து போய்விட்டது. நபி (ஸல்) அவர்கள் அதைத் தேடும்படி சிலரை அனுப்பிவைத்தார்கள். (தேடிச் சென்றபோது) தொழுகை நேரம் வந்துவிட்டது. அவர்களிடம் அங்கசுத்தி (உளூ) செய்யத் தண்ணீர் இல்லை. (அந்த இடத்தில்) அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவுமில்லை. அங்கசுத்தி (உளூ) செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள். இந்த விஷயத்தை அவர்கள் (திரும்பி வந்து) நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார்கள். அப்போது அல்லாஹ் ‘தயம்மும்’ (செய்து கொள்ள அனுமதி வழங்கும்) வசனத்தை அருளினான்.

இப்னு நுமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஓர் அறிவிப்பில், ‘அந்தக் கழுத்து மாலையை நான் (என் சகோதரி) அஸ்மாவிடமிருந்து இரவல் வாங்கியிருந்தேன்’ என்று ஆயிஷா (ரலி) அறிவித்தார்.’ என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.92

Book : 77


«هَلَكَتْ قِلاَدَةٌ لِأَسْمَاءَ، فَبَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَلَبِهَا رِجَالًا، فَحَضَرَتِ الصَّلاَةُ وَلَيْسُوا عَلَى وُضُوءٍ، وَلَمْ يَجِدُوا مَاءً، فَصَلَّوْا وَهُمْ عَلَى غَيْرِ وُضُوءٍ،

فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ»

زَادَ ابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: اسْتَعَارَتْ مِنْ أَسْمَاءَ


Bukhari-5881

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 57

பெண்கள் கழுத்தணிகளையும் நறுமண மாலைகளையும் அணிதல்.

இது (சந்தன மாலை போன்ற) நறுமண மாலைகளைக் குறிக்கும்.

5881. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் பெருநாளில் (தொழுகைத் திடலுக்குப்) புறப்பட்டு வந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும் பின்பும் (தொழுகை எதுவும்) தொழவில்லை.

பிறகு பெண்களிடம் வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். உடனே பெண்கள் தங்கள் காதணிகளையும், நறுமண மாலைகளையும் (கழற்றி) தர்மமாகத் தந்தார்கள்.

Book : 77


«خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عِيدٍ، فَصَلَّى رَكْعَتَيْنِ، لَمْ يُصَلِّ قَبْلُ وَلاَ بَعْدُ، ثُمَّ أَتَى النِّسَاءَ، فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ المَرْأَةُ تَصَدَّقُ بِخُرْصِهَا وَسِخَابِهَا»


Bukhari-5880

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 56

பெண்கள் மோதிரம் அணிவது.

ஆயிஷா (ரலி) அவர்கள் தங்க மோதிரங்களை அணிந்திருந்தார்கள்.

5880. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நான் நபி (ஸல்) அவர்களுடன் (நோன்புப்) பெருநாளி(ன் தொழுகையி)ல் கலந்து கொண்டேன். அவர்கள் (அன்று) உரையாற்றுவதற்கு முன்பாகத் தொழுதார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:

‘பிறகு பெண்கள் பகுதிக்கு வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள் (தம்) மெட்டிகளையும் மோதிரங்களையும் (கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் துணியில் போடலானார்கள்’ என்று இப்னு வஹ்ப் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.91

Book : 77


«شَهِدْتُ العِيدَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى قَبْلَ الخُطْبَةِ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَزَادَ ابْنُ وَهْبٍ، عَنْ ابْنِ جُرَيْجٍ: «فَأَتَى النِّسَاءَ، فَجَعَلْنَ يُلْقِينَ الفَتَخَ وَالخَوَاتِيمَ فِي ثَوْبِ بِلاَلٍ»


Next Page » « Previous Page