Author: Farook

Bukhari-5694

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 (குருதி உறிஞ்சு கருவி மூலம்) எந்த நேரத்தில் குருதி உறிஞ்சி எடுக்கலாம்?15 அபூமூசா (ரலி) அவர்கள் இரவில் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள்.

5694. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள்.16

Book : 76


«احْتَجَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ صَائِمٌ»


Bukhari-5693

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5693. உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) கூறினார்

நான் (பாலைத் தவிர) வேறு (திட) உணவு சாப்பிடாத என்னுடைய ஆண் குழந்தையுடன் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (அவர்கள் குழந்தையைத் தம் மடியில் உட்கார வைத்தார்கள்.) அப்போது குழந்தை அவர்களின் மீது சிறுநீர் கழித்துவிட்டது. உடனே தண்ணீர் கொண்டுவரச் சொல்லி (சிறுநீர்பட்ட) அந்த இடத்தில் தெளித்தார்கள். 14

Book :76


وَدَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِابْنٍ لِي لَمْ يَأْكُلِ الطَّعَامَ، فَبَالَ عَلَيْهِ، فَدَعَا بِمَاءٍ فَرَشَّ عَلَيْهِ


Bukhari-5692

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 வெண்கோஷ்டம் மற்றும் செய்கோஷ்டம் ஆகியவற்றால் வாசனை பிடிப்பது.13 (கோஷ்டம் என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) குஸ்த்’ எனும் சொல் (ஃகுஸ்த், குஸ்த்) என இரு முறை களிலும் ஆளப்படுகிறது; காஃபூர்’ (கற்பூரம்) எனும் சொல் (காஃபூர், ஃகாஃபூர்) என இரு முறைகளிலும் ஆளப்படுவதைப் போன்று. (வானம் அகற்றப்படும் போது எனும் 81:11ஆவது குர்ஆன் வசனத்தின் மூலத்தில் குஷிதத்’ எனும் சொல்லை) (குசிதத்,ஃகுஷிதத்) என இரு முறைகளிலும் ஓதப்பட்டுள்ளது. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (ஃகுஷிதத்) என ஓதினார்கள்.

5692. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசைவாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும்.

என உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) அறிவித்தார்.

عَلَيْكُمْ بِهَذَا العُودِ الهِنْدِيِّ، فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ: يُسْتَعَطُ بِهِ مِنَ العُذْرَةِ، وَيُلَدُّ بِهِ مِنْ ذَاتِ الجَنْبِ