Author: Farook

Musnad-Ahmad-9530

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9530. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு (‘யர்ஹமுக்கல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்’ என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும்.

உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும். (கட்டுப்படுத்தாமல்) ஆஹ் ஆஹ் என்று கூறவேண்டாம். ஏனெனில், யாரேனும் வாயைத்திறந்து கொட்டாவிவிட்டால் அதனால் ஷைத்தான் சிரிக்கிறான்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

அறிவிப்பாளர் ஹஜ்ஜாஜ் அவர்களின் அறிவிப்பில் “ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும்” என்று வந்துள்ளது.

 


إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ الْعُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَمَنْ عَطَسَ فَحَمِدَ اللَّهَ، فَحَقٌّ عَلَى مَنْ سَمِعَهُ أَنْ يَقُولَ: يَرْحَمُكَ اللَّهُ، وَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ، فَلْيَرْدُدْهُ مَا اسْتَطَاعَ، وَلَا يَقُلْ: آهْ آهْ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا فَتَحَ فَاهُ، فَإِنَّ الشَّيْطَانَ يَضْحَكُ مِنْهُ – أَوْ بِهِ – “،

قَالَ: حَجَّاجٌ فِي حَدِيثِهِ: «وَأَمَّا التَّثَاؤُبُ فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ»


Musnad-Ahmad-7599

ஹதீஸின் தரம்: Pending

7599. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் எவரேனும் ஹா ஹா என்று (கொட்டாவியால்) சப்தமிட்டால் அதனால் ஷைத்தான் வயிறுவலிக்க சிரிக்கிறான்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ، وَيُبْغِضُ أَوْ يَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا قَالَ أَحَدُهُمْ: هَا، هَا، فَإِنَّمَا ذَلِكَ الشَّيْطَانُ يَضْحَكُ مِنْ جَوْفِهِ


Tirmidhi-2747

ஹதீஸின் தரம்: Pending

2747. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு (‘யர்ஹமுக்கல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்’ என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும்.

உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும். (கட்டுப்படுத்தாமல்) ஹாஹ் ஹாஹ் என்று கூறவேண்டாம். ஏனெனில், ஹாஹ் ஹாஹ் என்று கொட்டாவிவிட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


إِنَّ اللَّهَ يُحِبُّ العُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا عَطَسَ أَحَدُكُمْ فَقَالَ: الحَمْدُ لِلَّهِ فَحَقٌّ عَلَى كُلِّ مَنْ سَمِعَهُ أَنْ يَقُولَ: يَرْحَمُكَ اللَّهُ، وَأَمَّا التَّثَاؤُبُ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ وَلَا يَقُولَنَّ: هَاهْ هَاهْ، فَإِنَّمَا ذَلِكَ مِنَ الشَّيْطَانِ يَضْحَكُ مِنْهُ


Tirmidhi-2746

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2746.


العُطَاسُ مِنَ اللَّهِ وَالتَّثَاؤُبُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَضَعْ يَدَهُ عَلَى فِيهِ، وَإِذَا قَالَ: آهْ آهْ فَإِنَّ الشَّيْطَانَ يَضْحَكُ مِنْ جَوْفِهِ، وَإِنَّ اللَّهَ يُحِبُّ العُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا قَالَ الرَّجُلُ: آهْ آهْ إِذَا تَثَاءَبَ فَإِنَّ الشَّيْطَانَ يَضْحَكُ فِي جَوْفِهِ


Abu-Dawood-5033

ஹதீஸின் தரம்: Pending

5033. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் தும்மினல், ‘அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால்’ (என்னேரத்திலும் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹு பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلِ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ، وَلْيَقُلْ أَخُوهُ أَوْ صَاحِبُهُ يَرْحَمُكَ اللَّهُ، وَيَقُولُ هُوَ يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ»


Abu-Dawood-5028

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5028. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஹாஹ் ஹாஹ் என்று கூறவேண்டாம். ஏனெனில், அதனால் ஷைத்தான் சிரிக்கிறான்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، وَلَا يَقُلْ هَاهْ هَاهْ، فَإِنَّمَا ذَلِكُمْ مِنَ الشَّيْطَانِ يَضْحَكُ مِنْهُ»


Musannaf-Abdur-Razzaq-3322

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3322. அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் எவரேனும் ஹா ஹா என்று (கொட்டாவியால்) சப்தமிட்டால் அதனால் ஷைத்தான் வயிறுவலிக்க சிரிக்கிறான் என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸயீத் (ரஹ்)


إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ، وَيُبْغِضُ التَّثَاؤُبَ، فَإِذَا قَالَ أَحَدُكُمْ: هَاهْ هَاهْ، فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ يَضْحَكُ مِنْ جَوْفِهِ


Tayalisi-2434

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2434. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு (‘யர்ஹமுக்கல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்’ என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும்.

உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் அதனால் ஷைத்தான் சிரிக்கிறான். எனவே, முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ الْعُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: الْحَمْدُ لِلَّهِ حَقًّا عَلَى مَنْ سَمِعَهُ أَنْ يَقُولَ: يَرْحَمُكَ اللَّهُ، وَإِذَا تَثَاءَبَ ضَحِكَ الشَّيْطَانُ، وَلْيُخْفِهِ مَا اسْتَطَاعَ


Hakim-8425

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8425. (யுகமுடிவு நாளின் நெருக்கத்தில்) ஷாம் நாட்டினர் ஒரு மனிதரின் தலைமையிலும், அவரின் குடும்பத்தின் தலைமையிலும் ஒன்றுப்படுவதை நீ கண்டால் கான்ஸ்டாண்டிநோபிள் வெற்றிக்கொள்ளப்படும் என்று அபூ ஸஅலபா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் நுஃபைர் (ரஹ்)


«إِذَا رَأَيْتَ الشَّامَ مَائِدَةَ رَجُلٍ وَاحِدٍ، وَأَهْلِ بَيْتِهِ، فَعِنْدَ ذَلِكَ فَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ»


Hakim-8306

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8306. “(மறுமை நாளின் அளவில்) பாதி நாளை இந்த சமுதாயம் கடந்துவிடுவதை அல்லாஹ் இயலாததாக ஆக்கிவிடமாட்டான்”என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன்

அறிவிப்பவர்: அபூ ஸஅலபா (ரலி)


«لَنْ يُعْجِزَ اللَّهَ هَذِهِ الْأُمَّةُ مِنْ نِصْفِ يَوْمٍ»


Next Page » « Previous Page