Author: Farook

Ibn-Majah-1642

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1642. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் மாதத்தின் முதலாவது இரவு வந்து விட்டால் ஷைத்தான்களும், முரண்டு பிடிக்கும் ஜின்களும் விலங்கிடப்படுகின்றனர். நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. அவற்றில் ஒருவாசலும் திறக்கப்படுவதில்லை. சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் ஒருவாசலும் அடைக்கப்படுவதில்லை.

அப்போது பொது அறிவிப்பாளர் ஒருவர் “நன்மையைத் தேடுபவனே! முன்னேறி வா! தீமையைத் தேடுபவனே! (பாவங்களைத்) தடுத்துக்கொள்” என்று அறிவிக்கின்றார். அப்போது அல்லாஹ்வால் பலர் நரகத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு ரமளான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நடைபெறுகின்றது.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


إِذَا كَانَتْ أَوَّلُ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ، صُفِّدَتِ الشَّيَاطِينُ، وَمَرَدَةُ الْجِنِّ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ، وَفُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ، فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ، وَنَادَى مُنَادٍ: يَا بَاغِيَ الْخَيْرِ أَقْبِلْ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ، وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ، وَذَلِكَ فِي كُلِّ لَيْلَةٍ


Muwatta-Malik-862

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

862. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إِذَا دَخَلَ رَمَضَانُ، فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، وَصُفِّدَتِ الشَّيَاطِينُ.


Almujam-Alawsat-6401

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6401. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ரமளானுடைய) ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் அல்லாஹ்வால் விடுதலைச் செய்யப்படுகின்றனர்; மேலும் ஒவ்வொரு அடியாருக்கும் (அதில்) ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


«إِنَّ لِلَّهِ عُتَقَاءَ مِنَ النَّارِ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، وَلِكُلِّ مُسْلِمٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ»


Musnad-Ahmad-7450

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

7450. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ரமளானுடைய) ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் அல்லாஹ்வால் விடுதலைச் செய்யப்படுகின்றனர்; மேலும் ஒவ்வொரு அடியாருக்கும் (அதில்) ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அல்லது அபூஸயீத் (ரலி)


«إِنَّ لِلَّهِ عُتَقَاءَ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، لِكُلِّ عَبْدٍ مِنْهُمْ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ»


Almujam-Alkabir-7143

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7143. யார் தன்னை சுயபரிசோதனை செய்துக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக நற்செயல் செய்கிறாரோ அவர் தான் அறிவாளி. யார் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தை தந்துவிடுவான் என்று) அல்லாஹ்வின் மீது மேலெண்ணம் கொள்கிறாரோ அவர் அறிவற்றவர்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


«الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ، وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا، وَتَمَنَّى عَلَى اللهِ»


Almujam-Alkabir-7141

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7141. யார் தன்னை சுயபரிசோதனை செய்துக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக நற்செயல் செய்கிறாரோ அவர் தான் அறிவாளி. யார் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தை தந்துவிடுவான் என்று) அல்லாஹ்வின் மீது மேலெண்ணம் கொள்கிறாரோ அவர் அறிவற்றவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


«الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ، وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا، وَتَمَنَّى عَلَى اللهِ»


Almujam-Assaghir-863

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

863. யார் தன்னை சுயபரிசோதனை செய்துக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக நற்செயல் செய்கிறாரோ அவர் தான் அறிவாளி. யார் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தை தந்துவிடுவான் என்று) அல்லாஹ்வின் மீது மேலெண்ணம் கொள்கிறாரோ அவர் அறிவற்றவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


«الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ , وَعَمِلَ بَعْدَ الْمَوْتِ , وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّى عَلَى اللَّهِ»


Bazzar-3489

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3489. யார் தன்னை சுயபரிசோதனை செய்துக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக நற்செயல் செய்கிறாரோ அவர் தான் அறிவாளி. யார் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தை தந்துவிடுவான் என்று) அல்லாஹ்வின் மீது மேலெண்ணம் கொள்கிறாரோ அவர் அறிவற்றவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


«الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّى عَلَى اللَّهِ»


Kubra-Bayhaqi-6514

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6514. யார் தன்னை சுயபரிசோதனை செய்துக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக நற்செயல் செய்கிறாரோ அவர் தான் அறிவாளி. யார் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தை தந்துவிடுவான் என்று) அல்லாஹ்வின் மீது மேலெண்ணம் கொள்கிறாரோ அவர் அறிவற்றவர்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ، وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا، وَتَمَنَّى عَلَى اللهِ


Hakim-7639

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7639. யார் தன்னை சுயபரிசோதனை செய்துக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக நற்செயல் செய்கிறாரோ அவர் தான் அறிவாளி. யார் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தை தந்துவிடுவான் என்று) அல்லாஹ்வின் மீது மேலெண்ணம் கொள்கிறாரோ அவர் அறிவற்றவர்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


«الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّى عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ»


Next Page » « Previous Page