Author: Farook

Muwatta-Malik-2632

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2632. தொழுகை, தர்மத்தை விட அதிகம் சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா? என ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஆம், கூறுங்கள் என்று மக்கள் கூறினர்.

அவை ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதுதான். உங்களுக்கிடையே விரோதம், பகை ஏற்படுவதை விட்டு எச்சரிக்கை செய்கிறேன். அது மார்க்கத்தை சிதைத்து விடும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் ஸயீத்


أَلاَ أُخْبِرُكُمْ بِخَيْرٍ مِنْ كَثِيرٍ مِنَ الصَّلاَةِ وَالصَّدَقَةِ؟ قَالُوا: بَلَى، قَالَ: إِصْلاَحُ ذَاتِ الْبَيْنِ، وَإِيَّاكُمْ وَالْبِغْضَةَ، فَإِنَّهَا هِيَ الْحَالِقَةُ.


Ibn-Hibban-5092

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5092. நோன்பு வைத்தல், தொழுதல், தர்மம் செய்தல் போன்றவற்றிற்கு கிடைக்கும் அந்தஸ்தைவிட சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஆம், கூறுங்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என நபித்தோழர்கள் பதில் கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது  ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதுதான். உங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது மார்க்கத்தை சிதைத்து விடும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)


«أَلَا أُخْبِرُكُمْ، بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصِّيَامِ، وَالْقِيَامِ؟ »، قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِصْلَاحُ ذَاتِ الْبَيْنِ، وَفَسَادُ ذَاتِ الْبَيْنِ هِيَ الْحَالِقَةُ»


Al-Adabul-Mufrad-412

ஹதீஸின் தரம்: More Info

412. தர்மம், நோன்பை விட சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா? என அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறிவிட்டு, அவை ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதுதான். உங்களுக்கிடையே பகை இருப்பது மார்க்கத்தை சிதைத்து விடும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ இத்ரீஸ் (ரஹ்)


أَلَا أُحَدِّثُكُمْ بِمَا هُوَ خَيْرٌ لَكُمْ مِنَ الصَّدَقَةِ وَالصِّيَامِ؟ صَلَاحُ ذَاتِ الْبَيْنِ، أَلَا وَإِنَّ الْبُغْضَةَ هِيَ الْحَالِقَةُ


Al-Adabul-Mufrad-391

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

391. தொழுதல், நோன்பு வைத்தல், தர்மம் செய்தல் போன்றவற்றிற்கு கிடைக்கும் அந்தஸ்தைவிட சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா? என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஆம், கூறுங்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என நபித்தோழர்கள் பதில் கூறினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், அது  ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதுதான். உங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது மார்க்கத்தை சிதைத்து விடும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)


«أَلَا أُنَبِّئُكُمْ بِدَرَجَةٍ أَفْضَلَ مِنَ الصَّلَاةِ وَالصِّيَامِ وَالصَّدَقَةِ؟» قَالُوا: بَلَى، قَالَ: «صَلَاحُ ذَاتِ الْبَيْنِ، وَفَسَادُ ذَاتِ الْبَيْنِ هِيَ الْحَالِقَةُ»


Abu-Dawood-4919

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4919. நோன்பு வைத்தல், தொழுதல், தர்மம் செய்தல் போன்றவற்றிற்கு கிடைக்கும் அந்தஸ்தைவிட சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஆம், கூறுங்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என நபித்தோழர்கள் பதில் கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது  ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதுதான். உங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது மார்க்கத்தை சிதைத்து விடும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)


«أَلَا أُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصِّيَامِ وَالصَّلَاةِ وَالصَّدَقَةِ؟» قَالُوا: بَلَى، يَا رَسُولَ اللَّهِ قَالَ: «إِصْلَاحُ ذَاتِ الْبَيْنِ، وَفَسَادُ ذَاتِ الْبَيْنِ الْحَالِقَةُ»


Musnad-Ahmad-27508

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

27508. நோன்பு வைத்தல், தொழுதல், தர்மம் செய்தல் போன்றவற்றிற்கு கிடைக்கும் அந்தஸ்தைவிட சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஆம், கூறுங்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என நபித்தோழர்கள் பதில் கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது  ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதுதான். உங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது மார்க்கத்தை சிதைத்து விடும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)


«أَلَا أُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصَّلَاةِ، وَالصِّيَامِ، وَالصَّدَقَةِ؟» قَالُوا: بَلَى قَالَ: ” إِصْلَاحُ ذَاتِ الْبَيْنِ قَالَ: وَفَسَادُ ذَاتِ الْبَيْنِ هِيَ الْحَالِقَةُ


Tirmidhi-2509

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2509. நோன்பு வைத்தல், தொழுதல், தர்மம் செய்தல் போன்றவற்றிற்கு கிடைக்கும் அந்தஸ்தைவிட சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஆம், கூறுங்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என நபித்தோழர்கள் பதில் கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதுதான். உங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது மார்க்கத்தை சிதைத்து விடும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)


«أَلَا أُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصِّيَامِ وَالصَّلَاةِ وَالصَّدَقَةِ»، قَالُوا: بَلَى، قَالَ: «صَلَاحُ ذَاتِ البَيْنِ، فَإِنَّ فَسَادَ ذَاتِ البَيْنِ هِيَ الحَالِقَةُ»


Kubra-Nasaayi-9858

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9858. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது.

ஒருவர், (அல்லாஹ்விடம்) மூன்று தடவை நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


مَنْ سَأَلَ اللهَ الْجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ الْجَنَّةُ: اللهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ، وَمَنِ اسْتَجَارَ بِاللهِ مِنَ النَّارِ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ النَّارُ: اللهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ


Kubra-Nasaayi-7907

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7907. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது.

ஒருவர், (அல்லாஹ்விடம்) மூன்று தடவை நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


مَنْ سَأَلَ الْجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ الْجَنَّةُ: اللهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ، وَمَنِ اسْتَجَارَ مِنَ النَّارِ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ النَّارُ: اللهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ


Ibn-Hibban-1034

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1034. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது.

ஒருவர், (அல்லாஹ்விடம்) மூன்று தடவை நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«مَنْ سَأَلَ اللَّهَ الْجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ، قَالَتِ الْجَنَّةُ: اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ، وَمَنِ اسْتَجَارَ مِنَ النَّارِ ثَلَاثَ مَرَّاتٍ، قَالَتِ النَّارُ: اللَّهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ».


Next Page » « Previous Page