Author: Farook

Musnad-Ahmad-1431

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1431. ஹதீஸ் எண்-1430 இல் வரும் செய்தி இந்த இரு அறிவிப்பாளர் தொடர்களிலும் வந்துள்ளது.


«دَبَّ إِلَيْكُمْ» فَذَكَرَهُ،

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا رَبَاحٌ، عَنْ مَعْمَرٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ يَعِيشَ بْنِ الْوَلِيدِ بْنِ هِشَامٍ، عَنْ مَوْلًى لِآلِ الزُّبَيْرِ: أَنَّ الزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ حَدَّثَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «دَبَّ إِلَيْكُمْ» فَذَكَرَهُ


Kubra-Bayhaqi-21066

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

21066. ஹதீஸ் எண்-21065 இல் வரும் செய்தி, இந்த அறிவிப்பாளர் தொடரில் யஈஷ் பின் வலீத், ஸுபைர் (ரலி) யின் அடிமையிடமிருந்து அறிவித்ததாக வந்துள்ளது.


فَذَكَرَهُ بِمَعْنَاهُ


Kubra-Bayhaqi-21065

ஹதீஸின் தரம்: Pending

21065. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திடம் ஏற்பட்ட பொறாமை, குரோதம் எனும் நோய் உங்களுக்கும் ஏற்பட்டு விட்டது. அவை தான் மழித்துவிடக் கூடியது. அவை முடியை மழிக்கும் என்று நான் கூறவில்லை. மாறாக மார்க்கத்தை மழித்து விடும்.

“( இந்த) முஹம்மதின் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)

அறிவிப்பவர் : ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)


دَبَّ إِلَيْكُمْ دَاءُ الْأُمَمِ قَبْلَكُمْ: الْحَسَدُ وَالْبَغْضَاءُ , هِيَ الْحَالِقَةُ , حَالِقَةُ الدِّينِ لَا حَالِقَةُ الشَّعْرِ , وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ , لَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا , أَفَلَا أُنَبِّئُكُمْ بِأَمْرٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ


Musannaf-Ibn-Abi-Shaybah-25744

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

25744. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)

அறிவிப்பவர் : ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)


«أَلَا أُنَبِّئُكُمْ بِأَمْرٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ»


Musnad-Ahmad-1412

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1412. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திடம் ஏற்பட்ட பொறாமை, குரோதம் எனும் நோய் உங்களுக்கும் ஏற்பட்டு விட்டது. குரோதம் மழித்துவிடக் கூடியது. அது முடியை மழிக்கும் என்று நான் கூறவில்லை. மாறாக மார்க்கத்தை மழித்து விடும்.

“என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள்.(அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)

அறிவிப்பவர் : ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)


دَبَّ إِلَيْكُمْ دَاءُ الْأُمَمِ قَبْلَكُمْ: الْحَسَدُ، وَالْبَغْضَاءُ، وَالْبَغْضَاءُ هِيَ: الْحَالِقَةُ، حَالِقَةُ الدِّينِ لَا حَالِقَةُ الشَّعَرِ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَفَلا أُنَبِّئُكُمْ بِشَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ، أَفْشُوا السَّلامَ بَيْنَكُمْ


Almujam-Alkabir-14653

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

14653. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தர்மத்தில் சிறந்த தர்மம் (பிரச்சனை ஏற்படும்போது) உங்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


أَفْضَلُ الصَّدَقَةِ إِصْلاَحُ ذَاتِ الْبَيِّنِ.


Almujam-Alkabir-14615

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

14615. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தர்மத்தில் சிறந்த தர்மம் (பிரச்சனை ஏற்படும்போது) உங்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


أَفْضَلُ الصَّدَقَةِ إِصْلاَحُ ذَاتِ الْبَيِّنِ.


Bazzar-8482

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

8482. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“உங்களுக்கிடையே பகை ஏற்படுவதை விட்டு எச்சரிக்கை செய்கிறேன். அது மார்க்கத்தை சிதைத்து விடும்”.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إِيَّاكُمْ وَسُوءَ ذَاتِ الْبَيْنِ ، فَإِنَّهَا الْحَالِقَةُ .


Al-Adabul-Mufrad-260

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

260. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் முஸ்லிமாக ஆகாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) முஸ்லிமாக ஆக முடியாது.  உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். அதனால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம்.

உங்களுக்கிடையே பகை ஏற்படுவதை விட்டு உங்களை எச்சரிக்கிறேன். அவை தான் மழித்துவிடக் கூடியது. அவை முடியை மழிக்கும் என்று நான் கூறவில்லை. மாறாக மார்க்கத்தை மழித்து விடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரை (ரலி)


وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَا تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُسْلِمُوا، وَلَا تُسْلِمُوا حَتَّى تَحَابُّوا، وَأَفْشُوا السَّلَامَ تَحَابُّوا، وَإِيَّاكُمْ وَالْبُغْضَةَ، فَإِنَّهَا هِيَ الْحَالِقَةُ، لَا أَقُولُ لَكُمْ: تَحْلِقُ الشَّعْرَ، وَلَكِنْ تَحْلِقُ الدِّينَ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي أُسَيْدٍ مِثْلَهُ


Tirmidhi-2508

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2508. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“உங்களுக்கிடையே பகை ஏற்படுவதை விட்டு எச்சரிக்கை செய்கிறேன். அது மார்க்கத்தை சிதைத்து விடும்”.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِيَّاكُمْ وَسُوءَ ذَاتِ البَيْنِ فَإِنَّهَا الحَالِقَةُ»


Next Page » « Previous Page