Author: Abdul Hakkim

raavi-21626-அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பின் ஸவ்பான்

அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பின் ஸவ்பான் – عبد الرحمن بن ثابت بن ثوبان பிறப்பு: ஹி 75, இறப்பு: ஹி 165. வயது சுமார் 90 தரம்: ஸதூக்-நடுத்தரமானவர். சில அறிவிப்புகளை தவறாக அறிவித்துள்ளார். இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் தந்தை பெயர்: ஸாபித் பின் ஸவ்பான் குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ் ஊர், வமிசம்: ஷாம், திமிஷ்க், அல்அன்ஸீ பிறப்பு: ஹிஜ்ரீ-75 இறப்பு: ஹிஜ்ரீ-165 கால கட்டம்: 7. அப்துர்ரஹ்மான்...

Muwatta-Malik-2171

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 26

பயன்பாடுகளில் தீர்ப்பளித்தல்.

2171. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஒருவர் மற்றவருக்கு) தீங்கிழைக்கவும் கூடாது. (பழிக்குப் பழி வாங்குவதில்) அதிகமாக தீங்கிழைக்கவும் கூடாது.

அறிவிப்பவர்: யஹ்யா பின் உமாரா (ரஹ்)


لاَ ضَرَرَ وَلاَ ضِرَارَ.


Almujam-Alkabir-188

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

188. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மார்க்கத்தில் புதிதாக உருவாக்குபவருக்கு மரியாதை அளிப்பதற்காக (நடந்து) செல்பவர் இஸ்லாத்தை அழிப்பதற்கு உதவி செய்தவர் ஆவார்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


«مَنْ مَشَى إِلَى صَاحِبِ بِدْعَةٍ لِيُوَقِّرَهُ فَقَدْ أَعَانَ عَلَى هَدْمِ الْإِسْلَامِ»


Almujam-Alawsat-6772

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6772. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மார்க்கத்தில் புதிதாக உருவாக்குபவருக்கு மரியாதை அளிப்பவர் இஸ்லாத்தை அழிப்பதற்கு உதவி செய்தவர் ஆவார்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«مَنْ وَقَّرَ صَاحِبَ بِدْعَةٍ فَقَدْ أَعَانَ عَلَى هَدْمِ الْإِسْلَامِ»


Daraqutni-3079

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3079. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஒருவர் மற்றவருக்கு) தீங்கிழைக்கவும் கூடாது. (பழிக்குப் பழி வாங்குவதில்) அதிகமாக தீங்கிழைக்கவும் கூடாது.

ஒருவர் மற்றவருக்கு தீங்கிழைத்தால் அல்லாஹ் அவருக்கு தீங்கிழைக்கிறான். ஒருவர் மற்றவருக்கு சிரமத்தை அளித்தால் அவருக்கு அல்லாஹ் சிரமத்தை அளிக்கிறான்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


«لَا ضَرَرَ وَلَا ضِرَارَ , مَنْ ضَارَّ ضَرَّهُ اللَّهُ , وَمَنْ شَاقَّ شَقَّ اللَّهُ عَلَيْهِ»


Daraqutni-4396

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4396. அபூஸஃலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதிப்பும் மாண்புமிக்க அல்லாஹ், சிலவற்றை கட்டாய கடமையாக விதித்துள்ளான். அவற்றை (செய்யாமல்) வீணாக்கிவிடாதீர்கள். அவன் நமக்கு சிலவற்றை தடை செய்துள்ளான். அவற்றை செய்து விடாதீர்கள்.

அவன் சிலவற்றில் நமக்கு வரம்புகளை விதித்துள்ளான். அவைகளை மீறிவிடாதீர்கள். சிலவற்றை அவன் கூறாமல் விட்டுவிட்டான். இது அவன் மறந்து விட்டதால் அல்ல. (அவன் நம்மீது கொண்ட கொண்ட அன்பினால் ஆகும்). எனவே அவைகளைக் குறித்து வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

தாரகுத்னீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியின் வாசக அமைப்பு யஃகூப் பின் இப்ராஹீம் அவர்கள் அறிவித்ததாகும்.


«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ فَرَضَ فَرَائِضَ فَلَا تُضَيِّعُوهَا , وَحَرَّمَ حُرُمَاتٍ فَلَا تَنْتَهِكُوهَا , وَحَّدَ حُدُودًا فَلَا تَعْتَدُوهَا , وَسَكَتَ عَنْ أَشْيَاءَ مِنْ غَيْرِ نِسْيَانٍ فَلَا تَبْحَثُوا عَنْهَا».

لَفْظُ يَعْقُوبَ


Tirmidhi-1987

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

மக்களிடம் நற்குணத்துடன் பழகுதல் குறித்து வந்துள்ளவை.

1987. “நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள். தீமையைச் செய்துவிட்டால் அதற்கடுத்து, அதை அழித்துவிடும் நன்மையைச் செய்து விடு. மக்களிடம் நற்குணத்துடன் பழகு” என்று எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.

மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

மஹ்மூத் பின் ஃகைலான் அவர்களும் இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் வழியாக அபூதர் (ரலி) அவர்களின் செய்தியாக எங்களுக்கு அறிவித்தார்.

மேலும் மஹ்மூத் பின் ஃகைலான் அவர்கள், இதை வகீஃ அவர்கள் வழியாக முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் செய்தியாகவும் அறிவித்துவிட்டு அபூதர் (ரலி) அவர்களின் செய்தியாக வந்திருப்பதே சரியானது என்று கூறினார்.


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اتَّقِ اللَّهِ حَيْثُمَا كُنْتَ، وَأَتْبِعِ السَّيِّئَةَ الحَسَنَةَ تَمْحُهَا، وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ»


Tarikh-Baghdad-1609

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1609. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரின் மனவிருப்பம் நான் கொண்டு வந்ததற்கு இசைந்ததாக ஆகும் வரை அவர் முழுமையான இறைநம்பிக்கைக் கொண்டவராக ஆகமுடியாது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ “،

لَفْظُهُمَا سَوَاءٌ


Almujam-Alawsat-171

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

171. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் ஒன்றுத் திரளும் (பெரிய) பள்ளிவாசலில் தொழுவது ஒப்புக்கொள்ளப்பட்ட கடமையான ஹஜ்ஜுக்கு நிகரானதாகும். மேலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உபரியான ஹஜ்ஜுக்கு நிகரானதாகும்.

மேலும் மக்கள் ஒன்றுத் திரளும் (பெரிய) பள்ளிவாசலில் தொழுவது மற்ற பள்ளிவாசலில் தொழுவதை விட 500 மடங்கு சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«الصَّلَاةُ فِي الْمَسْجِدِ الْجَامِعِ تَعْدِلُ الْفَرِيضَةَ حَجَّةً مَبْرُورَةً، وَالنَّافِلَةَ كَحَجَّةٍ مُتَقَبَّلَةٍ، وَفُضِّلَتِ الصَّلَاةُ فِي الْمَسْجِدِ الْجَامِعِ عَلَى مَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ بِخَمْسِمائةِ صَلَاةٍ»


Kubra-Nasaayi-10483

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10483.


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَنَامُ حَتَّى يَقْرَأَ الْمُسَبِّحَاتِ وَيَقُولُ: «إِنَّ فِيهِنَّ آيَةً كَأَلْفِ آيَةٍ»

قَالَ مُعَاوِيَةُ: إِنَّ بَعْضَ أَهْلِ الْعِلْمِ كَانُوا يَجْعَلُونَ الْمُسَبِّحَاتِ سِتًّا: سُورَةَ الْحَدِيدِ وَالْحَشْرِ وَالْحَوَارِيِّينَ وَسُورَةَ الْجُمُعَةِ وَالتَّغَابُنِ وَسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى،


Next Page » « Previous Page