1829. புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“இறைநம்பிக்கையாளர் நெற்றி வியர்க்கும் நிலையிலேயே மரணிப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
«الْمُؤْمِنُ يَمُوتُ بِعَرَقِ الْجَبِينِ»
1829. புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“இறைநம்பிக்கையாளர் நெற்றி வியர்க்கும் நிலையிலேயே மரணிப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
«الْمُؤْمِنُ يَمُوتُ بِعَرَقِ الْجَبِينِ»
பாடம்:
இறைநம்பிக்கையாளர் நெற்றி வியர்க்கும் நிலையிலேயே மரணிப்பார் என்பது குறித்து வந்துள்ளவை.
982. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் நெற்றி வியர்க்கும் நிலையிலேயே மரணிப்பார்.
அறிவிப்பவர்: புரைதா பின் ஹுஸைப் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
இதில் இடம்பெறும் கதாதா (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்களிடமிருந்து (ஹதீஸ்) எதையும் செவியேற்றதாக நாம் அறியவில்லை என சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
«المُؤْمِنُ يَمُوتُ بِعَرَقِ الجَبِينِ»
1452.
«الْمُؤْمِنُ يَمُوتُ بِعَرَقِ الْجَبِينِ»
7334.
لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم الْمَدِينَةَ تَلَقَّاهُ جَوَارِي الأَنْصَارِ فَجَعَلْنَ يَقُلْنَ:
نَحْنُ جَوَارِي مِنْ بَنِي النَّجَّارْ. . يَا حَبَّذَا مُحَمد مِنْ جَارْ.
78.
مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حَيٍّ مِنْ بَنِي النَّجَّارِ , فَإِذَا جَوَارِي يَضْرِبْنَ بِالدُّفِّ , وَيَقُلْنَ: نَحْنُ قَيْنَاتُ بَنِي النَّجَّارِ , فَحَبَّذَا مُحَمَّدٌ مِنْ جَارٍ , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُ يَعْلَمُ أَنَّ قَلْبِيَ يُحِبُّكُمْ»
1899. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் சில பகுதியைக் கடந்து சென்றபோது அங்கே பெண்களில் சிலர் (தஃப்) கஞ்சிரா எனும் இசைக் கருவியை அடித்தவர்களாக பாட்டுப்பாடிக் கொண்டிருந்தனர். (நபி ஸல் அவர்களைக் கண்ட அவர்கள் கீழ்கண்டவாறு) கவிதைகளைப் படித்தனர்:
“நாங்கள், பனூ நஜ்ஜாரைச் சேர்ந்த பெண்கள்; முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களின் அண்டை வீட்டாராக இருப்பது எவ்வளவு சிறப்புமிக்கது!.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “(எனது வருகையினால் சந்தோசமடையும்) உங்கள் மீது நான் நேசம் வைத்துள்ளேன் என்பதை அல்லாஹ் அறிவான்” என்று கூறினார்கள்.
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِبَعْضِ الْمَدِينَةِ، فَإِذَا هُوَ بِجَوَارٍ يَضْرِبْنَ بِدُفِّهِنَّ، وَيَتَغَنَّيْنَ، وَيَقُلْنَ:
[البحر الرجز]
نَحْنُ جَوَارٍ مِنْ بَنِي النَّجَّارِ … يَا حَبَّذَا مُحَمَّدٌ مِنْ جَارِ
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُ يَعْلَمُ إِنِّي لَأُحِبُّكُنَّ»
784. “நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) வருகை தந்தபோது அன்ஸாரிகளில் உள்ள ஆண்களும் பெண்களும் எங்கள் வீடுகளுக்கு வாருங்கள் என்று கூறி(அழைத்த)னர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (நான் வரும் இந்த) ஒட்டகத்தை அதன்போக்கில் விட்டுவிடுங்கள். அது (அல்லாஹ்வால்) கட்டளையிடப்பட்டுள்ளது என்று கூறினார்கள். (பிறகு) அந்த ஒட்டகம் அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) அவர்களின் வீட்டு வாசல் முன் கால்மடித்து படுத்தது.
அப்போது பனூ நஜ்ஜார் கிளையைச் சேர்ந்த பெண்களில் சிலர் (தஃப்) கஞ்சிரா எனும் இசைக் கருவியை அடித்தவர்களாக (கீழ்கண்ட) கவிதைகளைப் படித்தனர்:
“நாங்கள், பனூ நஜ்ஜாரைச் சேர்ந்த பெண்கள்; முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களின் அண்டை வீட்டாராக இருப்பது எவ்வளவு சிறப்புமிக்கது!.
அப்போது நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் என்மீது நேசம் வைத்துள்ளீர்களா? என்று கேட்க, அவர்கள் ஆம். அல்லாஹ்வின் மீதாணையாக! நேசம் வைத்துள்ளோம் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் உங்கள் மீது நேசம் வைத்துள்ளேன் என்று (மூன்று தடவைக்) கூறினார்கள்.
” قَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، فَلَمَّا دَخَلَ الْمَدِينَةَ جَاءَتِ الْأَنْصَارُ بِرِجَالِهَا وَنِسَائِهَا، فَقَالُوا: إِلَيْنَا يَا رَسُولَ اللهِ فَقَالَ: «دَعُوا النَّاقَةَ فَإِنَّهَا مَأْمُورَةٌ» ، فَبَرَكَتْ عَلَى بَابِ أَبِي أَيُّوبَ قَالَ: فَخَرَجَتْ جَوَارٍ مِنْ بَنِي النَّجَّارِ يَضْرِبْنَ بِالدُّفُوفِ وَهُنَّ يَقُلْنَ:
[البحر الرجز]
نَحْنُ جَوَارٍ مِنْ بَنِي النَّجَّارْ … يَا حَبَّذَا مُحَمَّدٌ مِنْ جَارْ
فَخَرَجَ إِلَيْهِمْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَتُحِبُّونِي؟» فَقَالُوا: إِي وَاللهِ يَا رَسُولَ اللهِ قَالَ: «وَأَنَا وَاللهِ أُحِبُّكُمْ، وَأَنَا وَاللهِ أُحِبُّكُمْ، وَأَنَا وَاللهِ أُحِبُّكُمْ»
பாடம்:
பானங்களில் ஊதுவது, மூச்சுவிடுவது குறித்து வந்துள்ளவை.
3728. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பாத்திரங்களில் மூச்சுவிடுவதையும், ஊதுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُتَنَفَّسَ فِي الْإِنَاءِ، أَوْ يُنْفَخَ فِيهِ»
பாடம்:
பானங்களில் ஊதுவது குறித்து வந்துள்ளவை.
3429. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பாத்திரங்களில் ஊதுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ يُنْفَخَ فِي الْإِنَاءِ»
சமீப விமர்சனங்கள்