Author: Abdul Hakkim

Ibn-Majah-4009

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

4009. ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கூட்டத்தாரில் பாவங்கள் நடைபெறும்போது, (மற்றவர்கள் அவர்களை) மிகைத்தவர்களாகவும், அதைத் தடுப்பதற்கு சக்தியுள்ளவர்களாகவும் இருந்தும் அவர்களைத் தடுக்காவிட்டால், (நல்லோர், தீயோர் என) அனைவருக்கும் அல்லாஹ் தண்டனையை தந்து விடுவான்.


«مَا مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي، هُمْ أَعَزُّ مِنْهُمْ وَأَمْنَعُ، لَا يُغَيِّرُونَ، إِلَّا عَمَّهُمُ اللَّهُ بِعِقَابٍ»


Dalail-Annubuwwah-Bayhaqi-2032

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2032. நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளும் “எங்களின் மீது முழுநிலா உதித்துவிட்டது; நன்றி செய்வது எங்கள் மீது கடமை ஆகிவிட்டது; மக்காவிற்கு விடை கொடுத்துவிட்டு எங்களிடம் அனுப்பப்பட்டவரே! அல்லாஹ்வின் பால் அழைக்கக்கூடியவர் அழைக்கும் போது … கட்டுப்பட்டு நடக்கும் ஆணையைக் கொண்டு வந்துவிட்டீர்”(என்று கவி பாடினார்கள்).

அறிவிப்பவர்: இப்னு ஆயிஷா (உபைதுல்லாஹ் பின் முஹம்மத் பின் ஹஃப்ஸ்)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

நம்முடைய (ஆசிரியர்களான) அறிஞர்கள் இந்தச் செய்தியில் கூறப்படும் நிகழ்வு நபி (ஸல்) அவர்கள் முதன்முதலாக மக்காவிலிருந்து மதீனாவுக்கு வருகை தந்தபோது நடந்தது என கூறுகின்றனர். தபூக் போரிலிருந்து வதா மலைக் குன்று வழியாக மதீனாவுக்கு வந்தபோது அல்ல. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

தபூக் போரிலிருந்து வதா மலைக் குன்று வழியாக வந்த நிகழ்வையும் இதற்கு முன்பு கூறியுள்ளோம்.


لَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ جَعَلَ النِّسَاءُ وَالصِّبْيَانُ وَالْوَلَائِدُ يَقُلْنَ:
[البحر الرمل]
طَلَعَ الْبَدْرُ عَلَيْنَا … مِنْ ثَنِيَّاتِ الْوَدَاعْ
وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا … مَا دَعَا لِلَّهِ دَاعْ …


Hakim-7677

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

7677. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் அதிகமாக பாவமன்னிப்புக் கோரி வந்தால் அவருக்கு ஏற்பட்ட எல்லா வகையான கவலைகளிலிருந்தும் அல்லாஹ் விடுதலையளிப்பான். மேலும் அவருக்கு ஏற்பட்ட எல்லா வகையான நெருக்கடிகளிலிருந்தும் வெளியேற வழியை ஏற்படுத்துவான். மேலும் அவர் நினைத்துப் பார்க்காத வகையில் பொருளாதாரத்தை வழங்குவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَنْ أَكْثَرَ الِاسْتِغْفَارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ هَمٍّ فَرَجًا وَمِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ»


Ibn-Majah-3819

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3819. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தொடர்ந்து பாவமன்னிப்புக் கோரி வந்தால் அவருக்கு ஏற்பட்ட எல்லா வகையான கவலைகளிலிருந்தும் அல்லாஹ் விடுதலையளிப்பான். மேலும் அவருக்கு ஏற்பட்ட எல்லா வகையான நெருக்கடிகளிலிருந்தும் வெளியேற வழியை ஏற்படுத்துவான். மேலும் அவர் நினைத்துப் பார்க்காத வகையில் பொருளாதாரத்தை வழங்குவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ هَمٍّ فَرَجًا، وَمِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا، وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ»


Musnad-Ahmad-2234

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2234. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் அதிகமாக பாவமன்னிப்புக் கோரி வந்தால் அவருக்கு ஏற்பட்ட எல்லா வகையான கவலைகளிலிருந்தும் அல்லாஹ் விடுதலையளிப்பான். மேலும் அவருக்கு ஏற்பட்ட எல்லா வகையான நெருக்கடிகளிலிருந்தும் வெளியேற வழியை ஏற்படுத்துவான். மேலும் அவர் நினைத்துப் பார்க்காத வகையில் பொருளாதாரத்தை வழங்குவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَنِ أكْثَرَ مِنَ الاسْتِغْفَارِ، جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ هَمٍّ فَرَجًا، وَمِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا، وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ»


Abu-Dawood-1518

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1518. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தொடர்ந்து பாவமன்னிப்புக் கோரி வந்தால் அவருக்கு ஏற்பட்ட எல்லா வகையான நெருக்கடிகளிலிருந்தும் வெளியேற அல்லாஹ் வழியை ஏற்படுத்துவான். மேலும் எல்லா வகையான கவலைகளிலிருந்தும் விடுதலையளிப்பான். மேலும் அவர் நினைத்துப் பார்க்காத வகையில் பொருளாதாரத்தை வழங்குவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ، جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا، وَمِنْ كُلِّ هَمٍّ فَرَجًا، وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ»


Tirmidhi-1887

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

பானத்தில் ஊதுவது வெறுப்புக்குரியது என்பது குறித்து வந்துள்ளவை.

1887. அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பானத்தில் ஊதுவதற்கு நபி (ஸல்) தடைவிதித்தார்கள். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! நான் (பானத்தில்) தூசிப் போன்றதைக் கண்டால் என்ன செய்வது? என்றுக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதை (சிறிது சாய்த்துக்) கொட்டிவிடு! (தூசி போன்றவை நீங்கி விடும்) என்று கூறினார்கள்.

அவர், என்னால் ஒரே மூச்சில் பானத்தைக் குடிக்க முடியாது என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் வாயிலிருந்து கோப்பையை அகற்றி(விட்டு மூச்சுவிட்டுக்) கொள்!” என்றுக் கூறினார்கள்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ النَّفْخِ فِي الشُّرْبِ» فَقَالَ رَجُلٌ: القَذَاةُ أَرَاهَا فِي الإِنَاءِ؟ قَالَ: «أَهْرِقْهَا»، قَالَ: فَإِنِّي لَا أَرْوَى مِنْ نَفَسٍ وَاحِدٍ؟ قَالَ: «فَأَبِنِ القَدَحَ إِذَنْ عَنْ فِيكَ»


Muwatta-Malik-2677

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2677. அபுல்முஸன்னா அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், மர்வான் பின் ஹகம் அவர்களிடம் இருந்தபோது அபூஸயீத் (ரலி) அவர்கள் வந்தார்கள். அவரிடம் மர்வான் அவர்கள், பானத்தில் மூச்சுவிடுவதை நபி (ஸல்) தடுத்துள்ளார்கள் என்ற செய்தியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டுள்ளீர்களா? என்றுக் கேட்டார். அதற்கு அபூஸயீத் (ரலி) அவர்கள், “ஆம். கேட்டுள்ளேன்” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) சொன்னார்கள்:

ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! என்னால் ஒரே மூச்சில் பானத்தைக் குடிக்க முடியாது என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் வாயிலிருந்து கோப்பையை அகற்றிவிட்டு மூச்சுவிட்டுக் கொள்! என்றுக் கூறினார்கள். அவர், நான் (பானத்தில்) தூசிப் போன்றதைக் கண்டால் என்ன செய்வது? என்றுக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதை (சிறிது சாய்த்துக்) கொட்டிவிடு! (தூசி போன்றவை நீங்கி விடும்) என்று கூறினார்கள்.


كُنْتُ عِنْدَ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، فَقَالَ لَهُ مَرْوَانُ بْنُ الْحَكَمِ: أَسَمِعْتَ مِنْ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ أَنَّهُ نَهَى عَنِ النَّفْخِ فِي الشَّرَابِ؟ فَقَالَ لَهُ أَبُو سَعِيدٍ: نَعَمْ، فَقَالَ لَهُ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، إِنِّي لاَ أَرْوَى مِنْ نَفَسٍ وَاحِدٍ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: فَأَبِنِ الْقَدَحَ عَن فِيكَ، ثُمَّ تَنَفَّسْ، قَالَ: فَإِنِّي أَرَى الْقَذَاةَ فِيهِ، قَالَ: فَأَهْرِقْهَا.


Tirmidhi-1888

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1888. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பாத்திரங்களில் மூச்சுவிடுவதையும், அதில் ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُتَنَفَّسَ فِي الإِنَاءِ أَوْ يُنْفَخَ فِيهِ»


Almujam-Alkabir-778

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

778.


احْتَفَرَ الْحَيُّ فِي دَارِ كِلَابٍ فَأَصَابُوا كَنْزًا عَادِيًّا فَقَالَ كِلَابٌ: دَارُنَا، وَقَالَ الْحَيُّ: احْتَفَرْنا، فَنَافَرُوهُمْ ذَلِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَضَى بِهِ لِلْحَيِّ وَأَخَذَ مِنْهُمُ الْخُمُسَ فَاشْتَرَيْنَا بِنَصِيبِنا مِنْ ذَلِكَ مِائَةً مِنَ النَّعَمِ، فَأَتَيْنَا بِهَا الْحَيَّ فَأَرَادَ الْمُصَّدِّقُ أَنْ يُصْدِقَنا فَأَبَيْنَا عَلَيْهِ، وَأَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ، فَقَالَ: «إِنْ كُنْتُمْ جَعَلْتُمُوهَا مَعَ غَيْرِهَا وَإِلَّا فَلَا شَيْءَ عَلَيْكُمْ فِي هَذَا الْعَامِ» وَقَالَ: «إِنَّ الْمُصَّدِّقَ إِذَا انْصَرَفَ عَنِ الْقَوْمِ وَهُوَ عَنْهُمْ رَاضٍ رَضِيَ اللهُ عَنْهُمْ، وَإِذَا انْصَرَفَ وَهُوَ عَلَيْهِمْ سَاخِطٌ سَخِطَ اللهُ عَلَيْهِمْ»


Next Page » « Previous Page