Author: Abdul Hakkim

Tirmidhi-1860

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1860.


«مَنْ بَاتَ وَفِي يَدِهِ رِيحُ غَمَرٍ فَأَصَابَهُ شَيْءٌ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ»


Abu-Dawood-3852

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

உணவு சாப்பிட்ட பின் கை கழுவுதல்.

3852. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உணவு உண்ட) கையில் கொழுப்பு இருக்கும் நிலையில் ஒருவர் இரவில் உறங்கி, அதனால் அவருக்கு (தீங்கு) ஏதேனும் நேர்ந்தால், அவர் தம்மைத் தவிர வேறு யாரையும் நிச்சயமாகப் பழிக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ نَامَ وَفِي يَدِهِ غَمَرٌ، وَلَمْ يَغْسِلْهُ فَأَصَابَهُ شَيْءٌ، فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ»


Tirmidhi-1859

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்: 48

கையில் கொழுப்பு வாடை வீச இரவில் உறங்குவது வெறுப்புக்குரியது என்பது தொடர்பாக வந்துள்ளவை.

1859. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக ஷைத்தான், மோப்ப சக்தி உள்ளவன்; நாவால் நக்குபவன். எனவே, உங்கள் (உடல்) விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையோடு இருந்துகொள்ளுங்கள்.

(உணவு உண்ட) கையில் கொழுப்பு வாடை வீச ஒருவர் இரவில் உறங்கி, அதனால் அவருக்கு (தீங்கு) ஏதேனும் நேர்ந்தால், அவர் தம்மைத் தவிர வேறு யாரையும் நிச்சயமாகப் பழிக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி, இந்த அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது ”ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இந்தக் கருத்தில் (சிலவை), ஸுஹைல் பின் ஸாலிஹ் அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்களின் செய்தியாக வேறுசில அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது.


«إِنَّ الشَّيْطَانَ حَسَّاسٌ لَحَّاسٌ فَاحْذَرُوهُ عَلَى أَنْفُسِكُمْ، مَنْ بَاتَ وَفِي يَدِهِ رِيحُ غَمَرٍ فَأَصَابَهُ شَيْءٌ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ»


Shuabul-Iman-3800

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3800. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக சொர்க்கத்தில் ரஜப் என்ற ஒரு ஆறு உள்ளது. அதன் தண்ணீர் பாலை விட வென்மையாது; அதன் சுவை தேனை விட இனிமையானது. எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பு நோற்கிறாரோ அவருக்கு அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

 


إن في الجنة نهرا يقال له رجب أشد بياضا من اللبن و أحلى من العسل من صام من رجب يوما سقاه الله من ذلك النهر


Shuabul-Iman-7342

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7342. நபி (ஸல் அவர்கள் கூறினார்கள்:

ஆண்களை விட 99 மடங்கு பெண்களுக்கு ஆசை (காமம்) அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. என்றாலும், (ஆசையை அடக்கிக் கொள்ள) அல்லாஹ் அவர்கள் மீது வெட்கத்தைப் போட்டுவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


فُضِّلَتِ الْمَرْأَةُ عَلَى الرَّجُلِ بِتِسْعَةٍ وَتِسْعِينَ جُزْءًا مِنَ اللَّذَّةِ، وَلَكِنَّ اللهَ عَزَّ وَجَلَّ أَلْقَى عَلَيْهِنَّ الْحَيَاءَ


Musnad-Ahmad-15611

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

15611.

யார் அல்லாஹுடைய பாதையில் செல்லும் போது ஆயிரம் வசனங்களை ஓதுவாரோ. அவர் நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்தியாகிகள், நல்லோர்கள் ஆகியோரின் பட்டியலில் அல்லாஹ் எழுதுவான்.


«مَنْ قَرَأَ أَلْفَ آيَةٍ فِي سَبِيلِ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى، كُتِبَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ النَّبِيِّينَ، وَالصِّدِّيقِينَ، وَالشُّهَدَاءِ، وَالصَّالِحِينَ، وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى»


Almujam-Alawsat-4278

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4278. ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்கள்: “முஹம்மதே! நீங்கள் விரும்பும் காலம் வரை வாழலாம். ஆனால், நீங்கள் (ஒரு நாள்) மரணிப்பீர்கள். நீங்கள் விரும்பும் செயல்களை செய்துக் கொள்ளலாம். ஆனால், அதற்குக் கூலி கொடுக்கப்படுவீர்கள். நீங்கள் விரும்பியவரை நேசித்துக் கொள்ளலாம். ஆனால் (ஒரு நாள்) நீங்கள் அவரை பிரிவீர்கள்.

மேலும் அறிந்துகொள்ளுங்கள்: ஒரு இறைநம்பிக்கையாளரின் சிறப்பு அவரது இரவுத் தொழுகையில் உள்ளது. அவரது கண்ணியம், மக்களை விட்டு அவர் தேவையற்றவராக இருப்பதில் உள்ளது.


தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை முஹம்மத் பின் உயைனா அவர்களிடமிருந்து ஸாஃபிர் பின் ஸுலைமான் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.

முஹம்மத் பின் உயைனா அவர்கள், ஸுஃப்யான் பின் உயைனா அவர்களின் சகோதரர் ஆவார்.


جَاءَ جِبْرِيلُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا مُحَمَّدُ، عِشْ مَا شِئْتَ فَإِنَّكَ مَيِّتٌ، وَاعْمَلْ مَا شِئْتَ فَإِنَّكَ مَجْزِيٌّ بِهِ، وَأَحْبِبْ مَنْ شِئْتَ فَإِنَّكَ مُفَارِقُهُ، وَاعْلَمْ أَنَّ شَرَفَ الْمُؤْمِنِ قِيَامُ اللَّيْلِ، وَعِزِّهُ اسْتِغْنَاؤُهُ عَنِ النَّاسِ»


Abi-Yala-6357

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6357.


«مَنْ خَرَجَ حَاجًّا فَمَاتَ كَتَبَ اللَّهُ لَهُ أَجْرَ الْحَاجِّ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ خَرَجَ مُعْتَمِرًا فَمَاتَ كَتَبَ اللَّهُ لَهُ أَجْرَ الْمُعْتَمِرِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ خَرَجَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ فَمَاتَ كَتَبَ اللَّهُ لَهُ أَجْرَ الْغَازِي إِلَى يَوْمِ الْقِيَامَةِ»


Al-Adabul-Mufrad-1237

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

உண்ணி பூச்சிகளை சபிக்க வேண்டாம்.

1237. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது உண்ணி பூச்சியை சபித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதை சபிக்காதீர்!  ஏனெனில் நபிமார்களில் ஒரு நபியை தொழுகைக்காக அது எழுப்பியது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


 أَنَّ رَجُلًا لَعَنَ بُرْغُوثًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لَا تَلْعَنْهُ، فَإِنَّهُ أَيْقَظَ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ لِلصَّلَاةِ»


Tirmidhi-1972

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1972. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியான் பொய் பேசும்போது அதனுடைய துர்வாடையால் வானவர், ஒரு மைல் தூரம் அவனை விட்டும் தூரமாகிவிடுகிறார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும்) யஹ்யா பின் மூஸா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அப்துர்ரஹீம் பின் ஹாரூன் என்பவரிடம், “இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நாஃபிஉ (ரஹ்) அவர்கள் வழியாக அப்துல்அஸீஸ் பின் அபூரவ்வாத் அவர்கள் இந்த செய்தியை உங்களுக்கு அறிவித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அப்துர்ரஹீம் என்பவர் “ஆம்” என்று கூறினார்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இந்த செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.

மேலும், இந்தச் செய்தியை அப்துர்ரஹீம் பின் ஹாரூன் என்பவர் தனித்து அறிவித்துள்ளார்.


«إِذَا كَذَبَ العَبْدُ تَبَاعَدَ عَنْهُ المَلَكُ مِيلًا مِنْ نَتْنِ مَا جَاءَ بِهِ؟»

قَالَ يَحْيَى: فَأَقَرَّ بِهِ عَبْدُ الرَّحِيمِ بْنُ هَارُونَ، فَقَالَ: نَعَمْ،


Next Page » « Previous Page