Author: Abdul Hakkim

Almujam-Alkabir-183

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களிடமிருந்து காலித் பின் மஃதான் அவர்கள் அறிவிக்கும் செய்திகள்.

183. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் தேவைகள் நிறைவேறுவதற்கு (அவற்றை பிறருக்கு) மறைப்பதின் மூலம் உதவி தேடுங்கள். ஏனெனில் ஏதேனும் ஒரு அருட்கொடை பெறப்பட்ட ஒவ்வொருவரும், (பிறரால்) பொறாமைக்கு ஆட்படுவார்கள்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)

 


«اسْتَعِينُوا عَلَى إِنْجَاحِ الْحَوَائِجِ بِالْكِتْمَانِ، فَإِنَّ كُلَّ ذِي نِعْمَةٍ مَحْسُودٌ»


Tirmidhi-1951

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 33

பிள்ளைக்கு ஒழுக்கம் போதுப்பது தொடர்பாக வந்துள்ளவை.

1951. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தம் பிள்ளைக்கு (ஒரேயொருமுறை) ஒழுக்கம் போதுப்பது ஒரு ஸாஉ அளவு தர்மம் செய்வதைவிடச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)


«لَأَنْ يُؤَدِّبَ الرَّجُلُ وَلَدَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَتَصَدَّقَ بِصَاعٍ»


Tirmidhi-3319

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

..

3319.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் முதன் முதலாக எழுதுகோலை படைத்து அதற்கு எழுது என்று கட்டளையிட்டான். எனவே அது, இறுதி நாள் வரையுள்ள அனைத்தையும் எழுதியது.


قَدِمْتُ مَكَّةَ فَلَقِيتُ عَطَاءَ بْنَ أَبِي رَبَاحٍ فَقُلْتُ: يَا أَبَا مُحَمَّدٍ إِنَّ نَاسًا عِنْدَنَا يَقُولُونَ فِي القَدَرِ، فَقَالَ عَطَاءٌ: لَقِيتُ الوَلِيدَ بْنَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ القَلَمَ، فَقَالَ لَهُ: اكْتُبْ، فَجَرَى بِمَا هُوَ كَائِنٌ إِلَى الأَبَدِ


Kubra-Bayhaqi-14336

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

14336.

உமர் (ரலி) மக்களுக்கு ஒரு உபதேசம் செய்தார்கள், அவர் அல்லாஹ்வைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினார், பின்னர் கூறினார்: மஹர் கொடுப்பதில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழங்கிய மஹரை விட அதிகமாகவோ அல்லது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (அவரது மகள்களுக்காக) கொடுக்கப்பட்ட மஹரை விட அதிகமாகவோ யாரேனும் ஒருவர் மஹர் கொடுத்ததாக நான் கண்டறிந்தால், அதிகப்படியான தொகையை பைத்துல் மால் (பொது நிதியில்) சேர்த்து விடுவேன் என்று கூறிவிட்டு பிரசங்கமேடையை விட்டு கிழிறங்கினார்கள்.

அப்போது குறைஷிகளை சேர்ந்த ஒரு பெண் வந்து: இறைநம்பிக்கையாளரின் தலைவரே!! நாங்கள் அல்லாஹ்வின் வேதத்திற்குக் கீழ்ப்படிகிறோமா அல்லது நீங்கள் சொல்வதைக் கடைப்பிடிக்கிறோமா? என கேட்டார்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் வேதத்தில் என்ன சொன்னான்? என கேட்டார்கள்.

அந்தப் பெண் கூறினார்: பெண்களுக்கு அதிகமாக மஹர் கொடுப்பதை நீங்கள் மக்களுக்கு தடை செய்துள்ளீர்கள். ஆனால் அல்லாஹ் தனது வேதத்தில் கூறியுள்ளான்: “அவர்களில் ஒருவருக்கு நீங்கள் ஒரு பெரிய குவியலையே கொடுத்தபோதிலும் அதிலிருந்து எதையும் திரும்பப் பெறாதீர்கள்”(குர்ஆன் 4:20)

அப்போது உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு

خَطَبَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ النَّاسَ فَحَمِدَ اللهَ تَعَالَى وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ: ” أَلَا لَا تُغَالُوا فِي صَدَاقِ النِّسَاءِ، فَإِنَّهُ لَا يَبْلُغُنِي عَنْ أَحَدٍ سَاقَ أَكْثَرَ مِنْ شَيْءٍ سَاقَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ سِيقَ إِلَيْهِ إِلَّا جَعَلْتُ فَضْلَ ذَلِكَ فِي بَيْتِ الْمَالِ ” ثُمَّ نَزَلَ , فَعَرَضَتْ لَهُ امْرَأَةٌ مِنْ قَرِيبٍ , فَقَالَتْ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَكِتَابُ اللهِ تَعَالَى أَحَقُّ أَنْ يُتَّبَعَ أَوْ قَوْلُكَ؟ قَالَ: ” بَلْ كِتَابُ اللهِ تَعَالَى , فَمَا ذَاكَ؟ ” قَالَتْ: نَهَيْتَ النَّاسَ آنِفًا أَنْ يُغَالُوا فِي صَدَاقِ النِّسَاءِ وَاللهُ تَعَالَى يَقُولُ فِي كِتَابِهِ: {وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا} [النساء: 20] , فَقَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ: ” كُلُّ أَحَدٍ أَفْقَهُ مِنْ عُمَرَ ” مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا , ثُمَّ رَجَعَ إِلَى الْمِنْبَرِ فَقَالَ لِلنَّاسِ: ” إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ أَنْ تُغَالُوا فِي صَدَاقِ النِّسَاءِ أَلَا فَلْيَفْعَلْ رَجُلٌ فِي مَالِهِ مَا بَدَا لَهُ “


Almujam-Alkabir-11810

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11810. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்த ஒரு இறைநம்பிக்கையுள்ள அடியாருக்கும், அவர் ஒரு நேரத்திற்கு பின் மறுநேரம் செய்யும் ஒரு பாவம் இருக்கும்.

அல்லது அவர் மரணிக்கின்றவரை அவரை விட்டுப் பிரியாத ஒரு பாவம் இருக்கும். இறை நம்பிக்கையாளர் (பாவம் எனும் குழப்பத்தில்) ஆழ்த்தப்பட்டு; அவர் மறந்துவிட்டால் அறிவுறுத்தப்படும்போது அதை உணர்ந்து; பாவமன்னிப்பு கேட்பவராகவே படைக்கப்பட்டுள்ளார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

 


مَا مِنْ عَبْدٍ مُؤْمِنٍ إِلَّا وَلَهُ ذَنْبٌ يَعْتادُهُ: الْفَيْنَةَ بَعْدَ الْفَيْنَةِ، أَوْ ذَنْبٌ هُوَ مُقِيمٌ عَلَيْهِ لَا يُفَارِقُهُ حَتَّى يُفَارِقَ، إِنَّ الْمُؤْمِنَ خُلِقَ مُفْتَنًا تَوَّابًا نَسِيًّا إِذَا ذُكِّرَ ذَكَرَ


Bazzar-700

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

700. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

உங்களில் சிறந்தவர் யாரெனில், (பாவங்களால்) குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டுப் பாவமீட்சி கோருகின்றவர்களே ஆவர்.

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை, இந்த வார்த்தையில் அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்று நாம் அறிகிறோம். இவரிடமிருந்து அறிவிக்கும் சிலர் இதை நபியின் சொல்லாகவும், வேறுசிலர் நபித்தோழரின் சொல்லாகவும் அறிவித்துள்ளனர். அப்துல்வாஹித் அவர்கள் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.


«خِيَارُكُمْ كُلُّ مُفْتَنٍ تَوَّابٍ»


Next Page » « Previous Page