7523.
اللَّهُمَّ بَارِكْ لأُمَّتِي فِي بُكُورِهَا يَوْمَ خَمِيسِهَا.
7523.
اللَّهُمَّ بَارِكْ لأُمَّتِي فِي بُكُورِهَا يَوْمَ خَمِيسِهَا.
5244. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கல்வி கற்க அதிகாலையில் செல்லுங்கள். ஏனெனில், எனது சமுதாயத்திற்கு அதிகாலை நேரத்திலும், வியாழக்கிழமையிலும் அருள்வளம் வழங்குவாயாக! என்று எனது இறைவனிடம் நான் (பிரார்த்தனை செய்து) கேட்டுள்ளேன்.
«اغْدُوا فِي طَلَبِ الْعِلْمِ، فَإِنِّي سَأَلْتُ رَبِّيَ أَنْ يُبَارِكَ لِأُمَّتِي فِي بُكُورِهَا، وَيَجْعَلَ ذَلِكَ يَوْمَ الْخَمِيسِ»
4829. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வே! எனது சமுதாயத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளம் வழங்குவாயாக!
மேலும் வியாழக்கிழமையிலும் (அந்த) அருள்வளத்தை ஏற்படுத்துவாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
«اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا، وَاجْعَلْهُ يَوْمَ الْخَمِيسِ»
8315. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நிச்சயமாக, சூரியன் எந்த மனிதருக்காகவும் நிறுத்தப்பட்டதில்லை. யூஷஉ பின் நூன் அவர்களுக்காகவேத் தவிர. அவர் பைத்துல் முகத்தஸை நோக்கி சென்ற நாட்களில் (யுத்தம் நடந்த வெள்ளிக்கிழமையில் சூரியன் மறைவது அவருக்காக தாமதிக்கப்பட்டது).
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«إِنَّ الشَّمْسَ لَمْ تُحْبَسْ عَلَى بَشَرٍ إِلَّا لِيُوشَعَ لَيَالِيَ سَارَ إِلَى بَيْتِ الْمَقْدِسِ»
6780. ஒருவர் பிறந்த குழந்தையின் வலதுக் காதில் பாங்கும், இடதுக் காதில் இகாமத்தும் கூறினால் அந்தக் குழந்தைக்கு உம்முஸ் ஸிப்யான் என்ற ஜின்னால் தீங்கிழைக்கமுடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுஸைன் பின் அலீ (ரலி)
«مَنْ وُلِدَ لَهُ فَأَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى لَمْ تَضُرَّهُ أُمُّ الصِّبْيَانِ»
2605.
«قَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ فِي سَفَرٍ إِلَّا يَوْمَ الْخَمِيسِ»
5171.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மது சேகரித்து வைக்கப்படும்) சுரைக்காய்க் குடுவையையும், மண்சாடியையும், (போதைத்தரும்) பார்லி, கோதுமை பானத்தையும், (ஆண்கள்) தங்க மோதிரங்கள், சாதாரணப் பட்டு (ஹரீர்) ஆகியவற்றை அணிவதையும், சிகப்பு நிற மென்பட்டுத் திண்டுகளை (மீஸரா- பயன்படுத்துவதை) விட்டும் எங்களைத் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
قَالَ صَعْصَعَةُ بْنُ صُوحَانَ لِعَلِيٍّ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، انْهَنَا عَمَّا نَهَاكَ عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدُّبَّاءِ، وَالْحَنْتَمِ، وَالْجِعَةِ، وَعَنْ حِلَقِ الذَّهَبِ، وَلُبْسِ الْحَرِيرِ، وَعَنِ الْمِيثَرَةِ الْحَمْرَاءِ»
8274.
«لَا يَزَالُ لِهَذَا الْأَمْرِ – أَوْ عَلَى هَذَا الْأَمْرِ – عِصَابَةٌ عَلَى الْحَقِّ، وَلَا يَضُرُّهُمْ خِلَافُ مَنْ خَالَفَهُمْ، حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ»
7643. “எனது சமுதாயத்தில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்காக போராடிக் கொண்டே இருப்பார்கள்; தங்கள் எதிரிகளை அடக்கி வெல்பவர்களாக இருப்பார்கள்; அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள், அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. இறுதியில், அவர்கள் அதே நிலையில் நீடித்திருக்க, அல்லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) அவர்களிடம் வரும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் எங்குள்ளனர்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் (ஜெருஸலமிலுள்ள) பைத்துல் மக்திஸில் உள்ளனர்” என்று பதிலளித்தார்கள்.
«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ ظَاهِرِينَ عَلَى مَنْ يَغْزُوهُمْ، قَاهِرِينَ لَا يَضُرُّهُمْ مَنْ نَاوَأَهُمْ، حَتَّى يَأْتِيَهُمْ أَمَرُ اللهِ، وَهُمْ كَذَلِكَ» .
قِيلَ: يَا رَسُولَ اللهِ، وَأَيْنَ هُمْ؟ قَالَ: «بِبَيْتِ الْمَقْدِسِ»
22320. “என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் மார்க்கத்தில் (அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்திய வண்ணமே) தொடர்ந்து இருப்பார்கள். அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள், அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. அவர்களுக்கு ஏற்படும் வாழ்வின் சிரமங்கள் (எனும் தீங்கைத்) தவிர. அவர்களை எதிர்ப்பவர்களை அடக்கி வெற்றிக்கொள்வார்கள்.
இறுதியில், அவர்கள் அதே நிலையில் நீடித்திருக்க, அல்லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) அவர்களிடம் வரும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் எங்குள்ளனர்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் (ஜெருஸலமிலுள்ள) பைத்துல் மக்திஸிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளனர்” என்று பதிலளித்தார்கள்.
«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الدِّينِ ظَاهِرِينَ لَعَدُوِّهِمْ قَاهِرِينَ لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ إِلَّا مَا أَصَابَهُمْ مِنْ لَأْوَاءَ حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ كَذَلِكَ» .
قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَأَيْنَ هُمْ؟ قَالَ: «بِبَيْتِ الْمَقْدِسِ وَأَكْنَافِ بَيْتِ الْمَقْدِسِ»
சமீப விமர்சனங்கள்