Author: Abdul Hakkim

Sharh-Maanil-Aasaar-7364

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

7364. முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற போது (ஜகாத்) தர்மங்கள் தொடர்பாக அம்ரு பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு (எழுதப்பட்ட) நபியவர்களுடைய கடிதத்தையும், உமர் (ரலி) அவர்களுடைய கடிதத்தையும் கேட்டு மதீனாவுக்கு ஒருவரை அனுப்பிவைத்தார்கள். அம்ரு பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரிடத்திலே (ஜகாத்) தர்மங்கள் தொடர்பாக அம்ரு பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு (எழுதப்பட்ட) நபியவர்களுடைய கடிதம் பெற்றுக் கொள்ளப்பட்டது. உமர் (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரிடத்திலே (ஜகாத்) தர்மங்கள் தொடர்பான உமர் (ரலி) அவர்களுடைய கடிதம் பெற்றுக் கொள்ளப்பட்டது. (உமருடைய கடிதம்) நபி (ஸல்) அவர்களுடைய கடிதத்தைப் போன்றே இருந்தது. அவை இரண்டும் அவருக்காகப் பிரிதியெடுக்கப்பட்டது.

ஹபீப் இப்னு அபீ ஹபீப் கூறுகிறார் : அம்ரு இப்னு ஹர்ம் அவர்கள் முஹம்மத் இப்னு அப்துர் ரஹ்மான் அவர்களிடம் அந்த இரண்டு கடிதங்களிலும் உள்ள விபரங்களை தனக்கு பிரதியெடுத்துத் தருமாறு வேண்டினார்.

ஒட்டகம், மாடு, ஆடு, தங்கம், வெள்ளி, பேரீத்தம் பழம், தானியம், உலர்ந்த திராட்சை முதலியவற்றுக்கான ஜகாத் தொடர்பான விபரங்கள் அக்கடித்தில் இருந்தது. (அதை) அவருக்கு அவர் பிரதியெடுத்துக் கொடுத்தார்………


لَمَّا اسْتُخْلِفَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ أَرْسَلَ إِلَى الْمَدِينَةِ , يَلْتَمِسُ كِتَابَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَمْرِو بْنِ حَزْمٍ فِي الصَّدَقَاتِ , وَكِتَابَ عُمَرَ. فَوَجَدَ عِنْدَ آلِ عَمْرِو بْنِ حَزْمٍ , كِتَابَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَمْرِو بْنِ حَزْمٍ فِي الصَّدَقَاتِ. وَوَجَدَ عِنْدَ آلِ عُمَرَ كِتَابَ عُمَرَ فِي الصَّدَقَاتِ , مِثْلَ كِتَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنُسِخَا. فَحَدَّثَنِي عَمْرٌو , أَنَّهُ طَلَبَ آلُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنْ يَنْسَخَهُ مَا فِي ذَيْنِكَ الْكِتَابَيْنِ , فَيَنْسَخَ لَهُ مَا فِي هَذَا الْكِتَابِ فَكَانَ مِمَّا فِي ذَلِكَ الْكِتَابِ «أَنَّ الْإِبِلَ إِذَا زَادَتْ عَلَى تِسْعِينَ وَاحِدَةً , فَفِيهَا حِقَّتَانِ طَرُوقَتَا الْفَحْلِ إِلَى أَنْ يَبْلُغَ عِشْرِينَ وَمِائَةً. فَإِذَا بَلَغَتِ الْإِبِلُ عِشْرِينَ وَمِائَةً , فَلَيْسَ فِيمَا زَادَ مِنْهَا دُونَ الْعَشْرِ شَيْءٌ. فَإِذَا بَلَغَتْ ثَلَاثِينَ وَمِائَةً , فَفِيهَا بِنْتَا لَبُونٍ وَحِقَّةٌ , إِلَى أَنْ تَبْلُغَ أَرْبَعِينَ وَمِائَةً. فَإِذَا كَانَتْ أَرْبَعِينَ وَمِائَةً , فَفِيهَا حِقَّتَانِ , وَابْنَةُ لَبُونٍ , إِلَى أَنْ تَبْلُغَ خَمْسِينَ وَمِائَةً. فَإِذَا كَانَتْ خَمْسِينَ وَمِائَةً , فَفِيهَا ثَلَاثُ حِقَاقٍ , ثُمَّ أَجْرَى الْفَرِيضَةَ كَذَلِكَ , حَتَّى يَبْلُغَ ثَلَاثَمِائَةٍ. فَإِذَا بَلَغَتْ ثَلَثَمِائَةٍ , فَفِيهَا مِنْ كُلِّ خَمْسِينَ حِقَّةٌ , وَمِنْ كُلِّ أَرْبَعِينَ , بِنْتُ لَبُونٍ»


8. அல்விஜாதஹ்-கடிதம் அல்லது நூலிலிருந்து ஹதீஸைப் பெறுதல், அதை அறிவித்தல்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الوجادة - அல்விஜாதஹ்-கடிதம் அல்லது நூலிலிருந்து ஹதீஸைப் பெறுதல், அதை அறிவித்தல். ஹதீஸை பெறும் வழிகள் 8 ஆகும். 1 . السماع - ஹதீஸை அறிவிப்பவரிடமிருந்து நேரடியாக செவியேற்பது. 2 . ‌‌القراءة على الشيخ حفظاً أو من كتاب - மனனம் செய்த ஹதீஸ்களை அல்லது எழுதிவைத்திருந்த ஹதீஸ்களை ஹதீஸை அறிவிப்பவரிடம் கூறி சரிபார்த்துக் கொள்ளுதல். 3 . ‌‌الإجازة...

Abu-Dawood-2484

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அறப்போர் (மறுமை நாள் வரை) தொடர்ந்து நடைபெறும்.

2484. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயத்தில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்காக போராடிக் கொண்டே இருப்பார்கள்; தங்கள் எதிரிகளை வெல்பவர்களாக இருப்பார்கள்; அவர்களில் கடைசியில் வருவோர் மஸீஹுத் தஜ்ஜாலுடன் சண்டையிடுவார்கள்.


«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ عَلَى مَنْ نَاوَأَهُمْ، حَتَّى يُقَاتِلَ آخِرُهُمُ الْمَسِيحَ الدَّجَّالَ»


கருத்துவேறுபாடு உள்ள அறிவிப்பாளரின் தரம் பற்றி எவ்வாறு முடிவு செய்வது?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ கருத்துவேறுபாடு உள்ள அறிவிப்பாளரின் தரம் பற்றி எவ்வாறு முடிவு செய்வது? ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் சிலரை, இவர்கள் பலமானவர்கள் என்று அறிஞர்கள் கூறியிருப்பார்கள். இதற்கு மாற்றமாக வேறு அறிஞர் எதுவும் கூறியிருக்கமாட்டார். சிலரை பலவீனமானவர்கள் என்று அறிஞர்கள் கூறியிருப்பார்கள். இதற்கு மாற்றமாக வேறு அறிஞர் எதுவும் கூறியிருக்கமாட்டார். இதில் கருத்துவேறுபாடு இல்லை என்பதால் எளிதாக அறிவிப்பாளரின் தரம் பற்றி முடிவு செய்து விடலாம். ஆனால்...

Musannaf-Abdur-Razzaq-21210

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21210.


إِنَّ الْغَضَبَ جَمْرَةٌ تُوقَدُ فِي قَلْبِ ابْنِ آدَمَ، أَلَمْ تَرَوْا إِلَى انْتِفَاخِ أَوْدَاجِهِ، وَإِلَى احْمِرَارِ عَيْنَيْهِ، فَإِذَا وَجَدَ أَحَدُكُمْ ذَلِكَ، فَإِنْ كَانَ قَائِمًا فَلْيَقْعُدْ، وَإِنْ كَانَ قَاعِدًا فَلْيَتَّكِ.

قَالَ: وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا جُرْعَةٌ أَحَبُّ إِلَى اللهِ مِنْ جُرْعَةِ غَيْظٍ كَتَمَهَا رَجُلٌ، أَوْ جُرْعَةِ صَبْرٍ عِنْدَ مُصِيبَةٍ،

وَمَا قَطْرَةٌ أَحَبُّ إِلَى اللهِ مِنْ قَطْرَةِ دَمْعٍ مِنْ خَشْيَةِ اللهِ، وَقَطْرَةِ دَمٍ فِي سَبِيلِ اللهِ.


Nasaayi-3108

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3108.


«لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ تَعَالَى حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ، وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ نَارِ جَهَنَّمَ»


Nasaayi-3107

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3107.


«لَا يَبْكِي أَحَدٌ مِنْ خَشْيَةِ اللَّهِ فَتَطْعَمَهُ النَّارُ حَتَّى يُرَدَّ اللَّبَنُ فِي الضَّرْعِ، وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ فِي مَنْخَرَيْ مُسْلِمٍ أَبَدًا»


Tirmidhi-2311

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவதின் சிறப்பு பற்றி வந்துள்ளவை.

2311. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கறந்த பால் எப்படி திரும்ப மடுவுக்குள் புகாதோ, அதுபோன்று அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத எந்த மனிதரும் நரகத்தில் நுழைய மாட்டார்.

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியும், நரகத்தின் புகையும் (ஒரு முஸ்லிமின் உடலில்) ஒன்று சேராது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி, அபூரைஹானா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி) வழியாக வரும் இந்தச் செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களின் குடும்பத்தாரின் அடிமையாவார். மேலும் இவர் மதீனாவைச் சேர்ந்தவரும், பலமானவரும் ஆவார். இவரிடமிருந்து ஷுஅபா (ரஹ்), ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) ஆகியோர் (ஹதீஸ்களை) அறிவித்துள்ளனர்.


«لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ، وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ»


Tirmidhi-1633

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியின் சிறப்பு பற்றி வந்துள்ளவை.

1633. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கறந்த பால் எப்படி திரும்ப மடுவுக்குள் புகாதோ, அதுபோன்று அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத எந்த மனிதரும் நரகத்தில் நுழைய மாட்டார்.

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியும், நரகத்தின் புகையும் (ஒரு முஸ்லிமின் உடலில்) ஒன்று சேராது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களின் (குடும்பத்தாரின்) அடிமையாவார். மேலும் இவர் மதீனாவைச் சேர்ந்தவர் ஆவார்.


«لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ، وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ»


Almujam-Alkabir-7918

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7918. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு துளிகளையும், இரு அடையாளங்களையும் விட அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானவை வேறு எதுவும் இல்லை. (அவ்விரு துளிகள்:)

1 . அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுத கண்ணீர்த் துளி.

2 . அல்லாஹ்வின் பாதையில் ஓட்டப்பட்ட இரத்தத் துளி.

அவ்விரு அடையாளங்கள்:

1 . அல்லாஹ்வின் பாதையில் ஏற்படும் அடையாளம்.

2 . அல்லாஹ்வின் கடமைகளில் ஏதேனும் ஒரு கடமையை நிறைவேற்றும்போது ஏற்படும் அடையாளம்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


لَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَى اللهِ مِنْ قَطْرَتَيْنِ وَأَثَرَيْنِ: قَطْرَةُ دُمُوعٍ مِنْ خَشْيَةِ اللهِ، وَقَطْرَةُ دَمٍ تُهْرَاقُ فِي سَبِيلِ اللهِ. وَأَمَّا الْأَثَرَانِ: فَأَثَرٌ فِي سَبِيلِ اللهِ، وَأَثَرٌ فِي فَرِيضَةٍ مِنْ فَرَائِضِ اللهِ


Next Page » « Previous Page