Author: Abdul Hakkim

Tirmidhi-1002

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

இறந்தவருக்காக (ஒப்பாரி வைத்து) அழுவது வெறுப்புக்குரியது என்பது குறித்து வந்துள்ளவை.

1002. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்தவரின் குடும்பத்தினர்கள், அவருக்காக (ஒப்பாரி வைத்து) அழுவதன் காரணமாக அவர் வேதனை செய்யப்படுகிறார்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள், இப்னு உமர் (ரலி), இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன. உமர் (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இறந்தவருக்காக அழுவதை அறிஞர்களில் சிலர் மக்ரூஹ்-வெறுப்புக்குரிய செயல் என்று கருதுகிறார்கள். இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, “இறந்தவருக்காக, அவருடைய வீட்டார்கள் அழுவதின் காரணமாக அவர் வேதனை செய்யப்படுகிறார்” என்று கூறுகிறார்கள்.

இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள், “இறந்தவர் தனது வாழ்நாளில் (தமக்காக அழக் கூடாது என்று) அவர்களைத் தடுத்திருந்தால், அதனால் அவருக்கு எந்த வேதனையும் இருக்காது” என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்கள்.


«المَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»


Musnad-Ahmad-8222

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8222. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு சிறுதுடக்கு ஏற்பட்டால் நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்து கொள்ளாத வரை உங்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ»


Musnad-Ahmad-8078

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8078. சிறு தொடக்கு ஏற்பட்டவன் உளூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது” என்று நபி (ஸல்) கூறினார்கள் என அபுஹுரைரா (ரலி) கூறியபோது, ஹள்ர மவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் ‘அபூஹுரைராவே! சிறு தொடக்கு என்பது என்ன? என்று கேட்டதற்கு அவர்கள் ‘சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது’ என்றார்கள்.

அறிவிப்பவர்: ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


«لَا تُقْبَلُ صَلَاةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ» قَالَ: فَقَالَ لَهُ رَجُلٌ مِنْ أَهْلِ حَضْرَمَوْتَ: مَا الْحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: «فُسَاءٌ أَوْ ضُرَاطٌ»


Tirmidhi-76

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

76. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்கு (ஹதஸ் எனும்) சிறுதுடக்கு ஏற்பட்டால் அவர் (உளூ) அங்கத் தூய்மை செய்து கொள்ளாத வரை அவரது தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழியாகும்.


«إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ صَلَاةَ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ»


Bazzar-7410

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7410.


انظر من في المسجد فادعه فدخلت، يعني المسجد فإذا أَبْو بَكْر وعمر رضى الله عَنْهُمَا فدعوتهما فأتيته بشيء فوضعته بين يديه فأكل وأكلوا، ثُمَّ خرجوا فصلى بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم صلاة الغداة.


Tayalisi-2010

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2010.


كَانَ عَلْقَمَةُ بْنُ عُلَاثَةَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ بِلَالٌ يُؤْذِنُهُ بِالصَّلَاةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” رُوَيْدًا يَا بِلَالُ، يَتَسَحَّرُعَلْقَمَةُ قَالَ: ” وَهُوَ يَتَسَحَّرُ بِرَأْسٍ


Almujam-Alkabir-1083

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1083.


«أَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُوذِنُهُ بِالصَّلَاةِ وَهُوَ يُرِيدُ الصِّيَامَ، فَدَعَا بِإِنَاءٍ فَشَرِبَ، ثُمَّ نَاوَلَنِي فَشَرِبْتُ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ»


Almujam-Alkabir-1082

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1082.


«أَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُوذِنُهُ بِالصَّلَاةِ وَهُوَ يُرِيدُ الصِّيَامَ، فَشَرِبَ، ثُمَّ نَاوَلَنِي فَشَرِبْتُ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ فَصَلَّى بِنَا»


Next Page » « Previous Page