Author: Abdul Hakkim

Abu-Dawood-4686

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4686. (நபி (ஸல்) அவர்கள் தமது ‘விடைபெறும்’ ஹஜ் உரையில்) எனக்குப் பிறகு உங்களில் சிலர் சிலருடைய பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விட வேண்டாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

 


«لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Ibn-Majah-3943

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3943. (நபி (ஸல்) அவர்கள் தமது ‘விடைபெறும்’ ஹஜ் உரையில்) ‘உங்களுக்குக் அழிவுதான் (வைஹக்கும்) அல்லது உங்களுக்கு கேடுதான் (வைலக்கும்); எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டிமாய்த்துக் கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறிவிடாதீர்கள்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«وَيْحَكُمْ، أَوْ وَيْلَكُمْ، لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Nasaayi-4132

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4132. கைஸ் பின் அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் ‘மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும்படி செய்வீராக!’ என்று கூறினார்கள். (மக்கள் அமைதியுற்ற பின்னர்) ‘உங்களை நான் இவ்வாறு (ஒன்றுபட்டவர்களாக) பார்த்த பிறகு, எனக்கு பின் நீங்கள் ஒருவர் கழுத்தை, ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடும் நிலை ஏற்படக் கூடாது என்று கூறினார்கள்-

என்று ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாக எனக்குத் தகவல் கிடைத்தது.


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَنْصِتِ النَّاسَ» ثُمَّ قَالَ: «لَا أُلْفِيَنَّكُمْ بَعْدَ مَا أَرَى تَرْجِعُونَ بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Nasaayi-4131

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4131. நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில் என்னிடம்) ‘மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும்படி செய்வீராக!’ என்று கூறினார்கள். (மக்கள் அமைதியுற்ற பின்னர்) ‘எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடவேண்டாம்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ اسْتَنْصَتَ النَّاسَ قَالَ: «لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Nasaayi-4130

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

4130. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை, ஒருவர் வெட்டிக் கொள்ளும் வழிகெட்டவர்களாக மாறி விடவேண்டாம்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)


«لَا تَرْجِعُوا بَعْدِي ضُلَّالًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Nasaayi-4129

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4129. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பிறகு இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விடக் கூடாது.

அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரஹ்)


«لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا»


Nasaayi-4128

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4128. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பிறகு உங்களில் சிலர் சிலருடைய பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விடும் நிலையை நான் காணக் கூடாது.

தனது தந்தை செய்த குற்றத்திற்காக அல்லது சகோதரன் செய்த குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்படக் கூடாது.

அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரஹ்)


«لَا أُلْفِيَنَّكُمْ تَرْجِعُونَ بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، لَا يُؤْخَذُ الرَّجُلُ بِجَرِيرَةِ أَبِيهِ، وَلَا بِجَرِيرَةِ أَخِيهِ»


Nasaayi-4127

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4127. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பிறகு உங்களில் சிலர் சிலருடைய பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விட வேண்டாம்.

தனது தந்தை செய்த குற்றத்திற்காக அல்லது சகோதரன் செய்த குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்படக் கூடாது.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، وَلَا يُؤْخَذُ الرَّجُلُ بِجَرِيرَةِ أَبِيهِ، وَلَا بِجَرِيرَةِ أَخِيهِ»


Kubra-Nasaayi-3578

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3578. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பிறகு உங்களில் சிலர் சிலருடைய பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விட வேண்டாம்.

தனது தந்தை செய்த குற்றத்திற்காக அல்லது சகோதரன் செய்த குற்றத்திற்காக ஒருவன் தண்டிக்கப்பட மாட்டான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


«لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، وَلَا يُؤْخَذُ الرَّجُلُ بِجِنَايَةِ أَبِيهِ وَلَا بِجِنَايَةِ أَخِيهِ»


Nasaayi-4126

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4126. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பிறகு உங்களில் சிலர் சிலருடைய பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விட வேண்டாம்.

தனது தந்தை செய்த குற்றத்திற்காக அல்லது சகோதரன் செய்த குற்றத்திற்காக ஒருவன் தண்டிக்கப்பட மாட்டான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நஸாயீ இமாம் கூறுகிறார்:

இது தவறாகும். இந்த செய்தி முர்ஸல் என்பதே உண்மையாகும்.


«لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، لَا يُؤْخَذُ الرَّجُلُ بِجِنَايَةِ أَبِيهِ، وَلَا جِنَايَةِ أَخِيهِ»


Next Page » « Previous Page