Author: Abdul Hakkim

Sharh-Mushkil-Al-Athar-231

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

231. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமைநாள் வருவதற்குமுன், தனக்கு எவரும் இணையில்லாதவனான அல்லாஹ்வை (மட்டுமே) வணங்கப்படவேண்டும் என்பதற்கு வாளைக் கொண்டு (போர் செய்ய வேண்டிய நிலைக்கு) நான் அனுப்பப்பட்டுவிட்டேன்.

(போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய) எனது செல்வம் என் ஈட்டியின் நிழலுக்குக் கீழே உள்ளது. எவர் என் கட்டளைக்கு மாறுசெய்கிறாரோ, அவர் மீது பணிந்திருப்பதும், (ஜிஸ்யா) காப்புவரி செலுத்துவதும் கடமையாகும்.

யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


بُعِثْتُ بِالسَّيْفِ بَيْنَ يَدَيِ السَّاعَةِ لِيُعْبَدَ اللهُ عَزَّ وَجَلَّ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَجُعِلَ رِزْقِي تَحْتَ رُمْحِي وَجُعِلَ الذُّلُّ وَالصَّغَارُ عَلَى مَنْ خَالَفَنِي وَمَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ


Musannaf-Ibn-Abi-Shaybah-4108

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4108. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் ஒருவரை வெறுத்தும் அவர் அவர்களுக்கு தொழுகை நடத்தினால் அவரின் தொழுகை அவரின் தொண்டைக்குழியைக் கூட தாண்டாது.

அறிவிப்பவர்: ஹஸன் பஸரீ (ரஹ்)


«مَنْ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ لَمْ تَجُزْ صَلَاتُهُ تُرْقُوتَهُ»


Musannaf-Abdur-Razzaq-3895

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3895. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் ஒருவரை வெறுத்தும் அவர் அவர்களுக்கு தொழுகை நடத்தினால் அவரின் தொழுகை அவரின் தொண்டைக்குழியைக் கூட தாண்டாது.

அறிவிப்பவர்: ஹஸன் பஸரீ (ரஹ்)


«مَنْ أَمَّ قَوْمًا، وَهُمْ لَهُ كَارِهُونَ لَمْ تُجَاوِزْ صَلَاتُهُ تَرْقُوَتَهُ»


Musannaf-Abdur-Razzaq-3893

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3893. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் ஒருவரை வெறுத்தும் அவர் அவர்களுக்கு தொழுகை நடத்தினால் அவரின் தொழுகை அவரின் தொண்டைக்குழியைக் கூட தாண்டாது.

அறிவிப்பவர்: ஹஸன் பஸரீ (ரஹ்)


«مَنْ أَمَّ قَوْمًا، وَهُمْ لَهُ كَارِهُونَ لَمْ تُجَاوِزْ صَلَاتُهُ تَرْقُوَتَهُ»


Shuabul-Iman-8237

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8237.


ثَلَاثَةٌ لَا تُقْبَلُ لَهُمْ صَلَاةٌ، وَلَا تَرْتَفِعُ لَهُمْ إِلَى السَّمَاءِ حَسَنَةٌ، الْعَبْدُ الْآبِقُ حَتَّى يَرْجِعَ إِلَى مَوَالِيهِ، وَالْمَرْأَةُ السَّاخِطُ عَلَيْهَا زَوْجُهَا حَتَّى يَرْضَى، وَالسَّكْرَانُ حَتَّى يَصْحُوَ


Musannaf-Ibn-Abi-Shaybah-17137

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17137. மக்கள், ஸல்மான் (ரலி) அவர்கள் தொழவைக்க வேண்டும் என அவரை முன்னிலை படுத்தினர். அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள் மறுத்துவிட்டார். மக்கள் (வற்புறுத்தி அவரை தொழவைக்குமாறு) முன்னால் தள்ளினர். ஸல்மான் (ரலி) அவர்கள் தொழவைத்தப் பிறகு நீங்கள் அனைவரும் (நான் தொழவைத்ததைப்) பொருந்திக் கொண்டீர்களா? என்று கேட்டார். மக்கள் ஆம் என்று கூறினர். அதற்கவர் அல்ஹம்துலில்லாஹ்- என்று கூறியபின், “மூவரின் தொழுகை அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாது. அவர்கள் யாரெனில் தனது கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியில் சென்ற பெண். ஓடிப்போன அடிமை. ஒருவரை மக்கள் வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்.

அறிவிப்பவர்: காஸிம் பின் முகைமிரா (ரஹ்)


أَنَّ سَلْمَانَ، قَدَّمَهُ قَوْمٌ لِيُصَلِّيَ بِهِمْ فَأَبَى عَلَيْهِمْ حَتَّى دَفَعُوهُ، فَلَمَّا صَلَّى بِهِمْ قَالَ: أَكَلَكُمْ رَاضٍ؟ قَالُوا: نَعَمْ، قَالَ: الْحَمْدُ لِلَّهِ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” ثَلَاثَةٌ لَا تُقْبَلُ صَلَاتُهُمُ: الْمَرْأَةُ تَخْرُجُ مِنْ بَيْتِ زَوْجِهَا بِغَيْرِ إِذْنِهِ، وَالْعَبْدُ الْآبِقُ، وَالرَّجُلُ يَؤُمُّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُوَنَ


Almujam-Alkabir-210

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

210.


أَنَّهُ صَلَّى بِقَوْمٍ فَلَمَّا انْصَرَفَ، قَالَ: نَسِيتُ أَنْ أَسْتَأْمِرَكُمْ قَبْلَ أَنْ أَتَقَدَّمَكُمْ أَفَرِضِيتُمْ بِصَلَاتِي؟ قَالُوا: نَعَمْ، وَمَنْ يَكْرَهُ ذَلِكَ يَا حَوَارِيَّ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَيُّمَا رَجُلٍ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ لَمْ تَجُزْ صَلَاتُهُ أُذُنَهُ»


Almujam-Alkabir-2177

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2177. ஜுனாதா பின் அபூஉமைய்யா (ரலி) அவர்கள், மக்களுக்கு தொழ வைக்க நின்றபோது வலது பக்கம் உள்ளவர்களைப் பார்த்து நான் தொழ வைப்பதை பொருந்திக்கொண்டீர்களா என்று கேட்டார். மக்கள் ஆம் என்று கூறினர். பின்பு இடது பக்கம் திரும்பியும் அவ்வாறே கேட்டார்.


أَنَّ جُنَادَةَ الْأَزْدِيَّ أَمَّ قَوْمًا، فَلَمَّا قَامَ إِلَى الصَّلَاةِ الْتَفَتَ عَنْ يَمِينِهِ، فَقَالَ: أَتَرْضَوْنَ، قَالُوا: نَعَمْ، ثُمَّ فَعَلَ مِثْلَ ذَلِكَ عَنْ يَسَارِهِ، ثُمَّ قَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ فَإِنَّ صَلَاتَهُ لَا تُجَاوِزُ تَرْقُوَتَهُ»


Next Page » « Previous Page