Author: Abdul Hakkim

Musannaf-Ibn-Abi-Shaybah-4112

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4112. மக்கள், ஸல்மான் (ரலி) அவர்கள் தொழவைக்க வேண்டும் என அவரை முன்னிலை படுத்தினர். அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள் மறுத்துவிட்டார். மக்கள் (வற்புறுத்தி அவரை தொழவைக்குமாறு) முன்னால் தள்ளினர். ஸல்மான் (ரலி) அவர்கள் தொழவைத்தப் பிறகு நீங்கள் அனைவரும் (நான் தொழவைத்ததைப்) பொருந்திக் கொண்டீர்களா? என்று கேட்டார். மக்கள் ஆம் என்று கூறினர். அதற்கவர் அல்ஹம்துலில்லாஹ்- என்று கூறியபின், “மூவரின் தொழுகை அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாது. அவர்கள் யாரெனில் தனது கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியில் சென்ற பெண். ஓடிப்போன அடிமை. ஒருவரை மக்கள் வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்.

அறிவிப்பவர்: காஸிம் பின் முகைமிரா (ரஹ்)


أَنَّ سَلْمَانَ، قَدَّمَهُ قَوْمٌ يُصَلَّى بِهِمْ فَأَبَى، فَدَفَعُوهُ، فَلَمَّا صَلَّى بِهِمْ قَالَ: أَكُلُّكُمْ رَاضٍ؟ قَالُوا: نَعَمْ قَالَ: الْحَمْدُ لِلَّهِ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” ثَلَاثَةٌ لَا تُقْبَلُ صَلَاتُهُمُ: الْمَرْأَةُ تَخْرُجُ مِنْ بيْتِهَا بِغَيْرِ إِذْنِهِ، وَالْعَبْدُ الْآبِقُ، وَالرَّجُلُ يَؤُمُّ الْقَوْمَ وَهُمْ لَهُ كَارِهُونَ


Musannaf-Ibn-Abi-Shaybah-4111

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4111.


ثَلَاثَةٌ لَا تُقْبَلُ لَهُمْ صَلَاةٌ: رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ، وَالْعَبْدُ إِذَا أَبَقَ حَتَّى يَرْجِعَ إِلَى مَوْلَاهُ، وَالْمَرْأَةُ إِذَا بَاتَتْ مُهَاجِرَةً لِزَوْجِهَا عَاصِيَةً لَهُ


Bazzar-6707

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடமிருந்து ஃபள்ல் பின் தல்ஹம் என்பவரின் அறிவிப்புகள்.

6707. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்கள் ஒருவரை வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவரையும்; கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்ணையும்; (பாங்கு கூறும்போது) ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியை நோக்கி வாருங்கள்) என்பதை செவியேற்றும் அதற்கு பதிலளிக்காதவரையும் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்த செய்தியை ஹஸன் பஸரீ —> அனஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் ஃபள்ல் பின் தல்ஹம் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்று அறிகிறோம். இவர் ஹாஃபிள்.. அல்ல. இவர் பஸராவைச் சேர்ந்தவர்; பிரபலமானவர். இந்த செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.


لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم رَجُلا أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ وَامْرَأَةً بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَرَجُلا سَمِعَ حَيَّ عَلَى الْفَلاحِ فَلَمْ يُجِبْ.


Ibn-Khuzaymah-1518

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஒருவர் தன்னை வெறுக்கக்கூடியவர்களுக்கு தொழைவைப்பது பற்றி வந்துள்ள கண்டனம்.

1518. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாது. அவை வானை நோக்கியும் உயராது. (ஏன்) அவர்களின் தலையைக் கூட கடந்து செல்லாது.

அவர்கள்:

1 . மக்கள் அவரை வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவர்.

2 . கட்டளையின்றி (அனுமதியின்றி) ஜனாஸா தொழுகை நடத்துபவர்.

3 . இரவில் தன் கணவன் அழைத்தும் அவருக்கு கட்டுப்படாமல் மறுத்தவிட்ட பெண்.

அறிவிப்பவர்: அதாஉ பின் தீனார் (ரஹ்)


ثَلَاثَةٌ لَا تُقْبَلُ مِنْهُمْ صَلَاةٌ، وَلَا تَصْعَدُ إِلَى السَّمَاءِ، وَلَا تُجَاوِزُ رُءُوسَهُمْ: رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ، وَرَجُلٌ صَلَّى عَلَى جَنَازَةٍ وَلَمْ يُؤْمَرْ، وَامْرَأَةٌ دَعَاهَا زَوْجُهَا مِنَ اللَّيْلِ فَأَبَتْ عَلَيْهِ


Kubra-Bayhaqi-5342

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5342.


ثَلَاثَةٌ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ آذَانَهُمْ: عَبْدٌ آبِقٌ مِنْ سَيِّدِهِ حَتَّى يَأْتِيَ فَيَضَعَ يَدَهُ فِي يَدِهِ، وَامْرَأَةٌ بَاتَ زَوْجُهَا غَضْبَانُ عَلَيْهَا، وَرَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ


Kubra-Bayhaqi-5340

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5340.


ثَلَاثَةٌ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ رُءَوْسَهُمْ: رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا سَاخِطٌ عَلَيْهَا، وَمَمْلُوكٌ فَرَّ مِنْ مَوْلَاهُ


Tirmidhi-358

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

மக்களின் வெறுப்பிற்குரியவர் தொழுகை நடத்துவது பற்றி வந்துள்ளவை.

358. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூவரை சபித்தார்கள்.

அவர்கள்:

1 . மக்கள் அவரை வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவர்.

2 . கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்.

3 . (பாங்கு கூறும்போது) ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியை நோக்கி வாருங்கள்) என்பதை செவியேற்றும் அதற்கு பதிலளிக்காதவர்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தப் பாடப் பொருளில் உள்ள செய்தி இப்னு அப்பாஸ் (ரலி), தல்ஹா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அபூஉமாமா (ரலி) ஆகிய நபித்தோழர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அனஸ் (ரலி) வழியாக வரும் இந்த செய்தி சரியானதல்ல. ஏனெனில் இந்த செய்தி ஹஸன் பஸரீ அவர்கள் வழியாக (முர்ஸலாக) நபித்தோழர் விடப்பட்டு வந்துள்ளது. இதில் இடம்பெறும் முஹம்மது பின் அல்காஸிம் என்பவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் விமர்சித்துள்ளார். மேலும் இவர் ஹாஃபிள்.. அல்ல.

இந்த செய்தியின் படி, மக்களின் வெறுப்பிற்குள்ளானவர் தொழுகை நடத்துவது வெறுப்பிற்குரிய செயல் என கல்வியாளர்களில் சிலர் கூறியுள்ளனர்.

இமாம், அநியாயக்காரராக இல்லாமல் இருந்து அவரை வெறுத்தால் அதன் குற்றம் வெறுத்தவர்களையேச் சேரும்.

இமாமை ஒருவரோ

لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةً: رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَرَجُلٌ سَمِعَ حَيَّ عَلَى الفَلَاحِ ثُمَّ لَمْ يُجِبْ


Almujam-Alawsat-3628

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3628.


«اثْنَانِ لَا تُجَاوِزُ صَلَاتُهُمَا رُءُوسَهُمَا: عَبْدٌ أَبَقَ مِنْ مَوَالِيهِ حَتَّى يَرْجِعَ إِلَيْهِمْ، وَامْرَأَةٌ عَصَتْ زَوْجَهَا حَتَّى تَرْجِعَ»


Next Page » « Previous Page