Author: Abdul Hakkim

Hakim-1361

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1361.


أَنَّ رَجُلًا كَانَ يَرْفَعُ صَوْتَهُ بِالذِّكْرِ، فَقَالَ رَجُلٌ: لَوْ أَنَّ هَذَا خَفَضَ مِنْ صَوْتِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِنَّهُ أَوَّاهٌ» . قَالَ: فَمَاتَ فَرَأَى رَجُلٌ نَارًا فِي قَبْرِهِ، فَأَتَاهُ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ وَهُوَ يَقُولُ: «هَلُمُّوا إِلَى صَاحِبَكُمْ» . فَإِذَا هُوَ الرَّجُلُ الَّذِي كَانَ يَرْفَعُ صَوْتَهُ بِالذِّكْرِ


Musnad-Ahmad-12648

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

12648. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமத்தில் வசிப்பவர்களில் ஸாஹிர் எனும் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். அவர் கிராமத்திலிருந்து வந்து நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்குபவராக இருந்தார். அவர் வந்து மீண்டும் (பயணம்) செல்ல விரும்பும்போது, ​​அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குப் பயண ஏற்பாட்டைச் செய்வார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிச்சயமாக ஸாஹிர் நமக்கு கிராமவாசி. நாம் அவருக்கு நகரவாசிகள்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அவரை நேசிப்பவராக இருந்தார்கள். மேலும் அவர் அழகற்றவராக இருந்தார். ஒருநாள் அவர் தனது பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தபோது, ​​நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, பின்னால் இருந்து அவரை அணைத்துக் கொண்டார்கள். அப்போது அவர் அவர்களைப் பார்க்கவில்லை. எனவே அவர், “என்னை விடுங்கள்! நீங்கள் யார்?” என்று கேட்டுக் கொண்டே திரும்பிப் பார்த்த போது, ​​நபி (ஸல்) அவர்களை அடையாளம் கொண்டார். எனவே அவர் தனது முதுகை நபி (ஸல்) அவர்களின் மார்புடன் ஒட்டிக்கொள்வதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த அடிமையை யார் வாங்குகிறார்கள்?” என்று கூற ஆரம்பித்தார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதரே! அப்படியானால் நான் ஒரு விலையில்லாதவனாக-செல்லாக்காசாக இருப்பதை

أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ كَانَ اسْمُهُ زَاهِرًا، وَكَانَ يُهْدِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدِيَّةَ مِنَ الْبَادِيَةِ، فَيُجَهِّزُهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ زَاهِرًا بَادِيَتُنَا، وَنَحْنُ حَاضِرُوهُ» . وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّهُ، وَكَانَ رَجُلًا دَمِيمًا، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُوَ يَبِيعُ مَتَاعَهُ، فَاحْتَضَنَهُ مِنْ خَلْفِهِ وَلَا يُبْصِرُهُ الرَّجُلُ، فَقَالَ: أَرْسِلْنِي مَنْ هَذَا، فَالْتَفَتَ فَعَرَفَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ لَا يَأْلُو مَا أَلْصَقَ ظَهْرَهُ بِصَدْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ عَرَفَهُ، وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ يَشْتَرِي الْعَبْدَ؟» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِذًا وَاللَّهِ تَجِدُنِي كَاسِدًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَكِنْ عِنْدَ اللَّهِ لَسْتَ بِكَاسِدٍ أَوْ قَالَ: «لَكِنْ عِنْدَ اللَّهِ أَنْتَ غَالٍ»


Abu-Dawood-3164

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

இரவில் அடக்கம் செய்தல்.

3164. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சிலர் ஒரு மையவாடியில் நெருப்பைக் கண்டார்கள். அங்கு சென்று பார்த்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரின் மண்ணறைக்கருகில் இருந்தார்கள். மேலும், “உங்களுடைய தோழரை என்னிடம் தாருங்கள்” என்று கூறியவாறு இருந்தார்கள். அப்போதுதான் அந்த மனிதர் இறைவனை அதிக சப்தத்துடன் திக்ர் செய்தவர் என்பது தெரியவந்தது.


رَأَى نَاسٌ نَارًا فِي الْمَقْبَرَةِ، فَأَتَوْهَا فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقَبْرِ، وَإِذَا هُوَ يَقُولُ: «نَاوِلُونِي صَاحِبَكُمْ» فَإِذَا هُوَ الرَّجُلُ الَّذِي كَانَ يَرْفَعُ صَوْتَهُ بِالذِّكْرِ


Musnad-Ahmad-4626

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4626.


” كُنَّا نَعُدُّ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيٌّ وَأَصْحَابُهُ مُتَوَافِرُونَ: أَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَعُثْمَانُ ثُمَّ نَسْكُتُ “


Abu-Dawood-4628

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4628.


كُنَّا نَقُولُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيٌّ: «أَفْضَلُ أُمَّةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَهُ أَبُو بَكْرٍ، ثُمَّ عُمَرُ، ثُمَّ عُثْمَانُ، رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَجْمَعِينَ»


Tirmidhi-2542

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

சொர்க்கப் பறவைகளின் தன்மை குறித்து வந்துள்ளவை.

2542. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அல்கவ்ஸர் என்பது என்ன? என்று வினவப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது எனக்கு அல்லாஹ் (மறுமையில் சிறப்புப் பரிசாக) வழங்கியுள்ள சொர்க்க நதியாகும். (அதிலுள்ள நீர்) பாலை விட வெண்மையானதும், தேனைவிட இனிமையானதுமாகும். அந்த நதியில் சில பறவைகள் இருக்கும். அவற்றின் கழுத்துகள் ஒட்டகங்களின் கழுத்தைப் போன்றிருக்கும் என்று கூறினார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், (அப்படியானால்) இப்பறவைகள் மிகவும் கொழுத்து செழிப்பானவையாக இருக்கும் என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்தப் பறவைகளை உண்ணக் கூடியவர்கள், அவற்றைவிட எழில் மிக்கவர்களாக இருப்பார்கள் என்றார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

(இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும்) முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள், இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் சகோதரரின் மகன் ஆவார். (அவருடைய தந்தையான) அப்துல்லாஹ் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் இப்னு உமர் (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி) ஆகியோரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا الكَوْثَرُ؟ قَالَ: «ذَاكَ نَهْرٌ أَعْطَانِيهِ اللَّهُ – يَعْنِي فِي الجَنَّةِ – أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ، وَأَحْلَى مِنَ العَسَلِ، فِيهَا طَيْرٌ أَعْنَاقُهَا كَأَعْنَاقِ الجُزُرِ» قَالَ عُمَرُ: إِنَّ هَذِهِ لَنَاعِمَةٌ. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكَلَتُهَا أَنْعَمُ مِنْهَا»


Tirmidhi-966

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

966. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர் ஒருவருக்கு ஏற்படும் உடல் வலி (காயம்), மன உளைச்சல், நாட்பட்ட நோய், உருக்கும் மனக்கவலை ஆகிய எதுவாயினும், அதை அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்கிவிடுகிறான்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பாக வந்துள்ள செய்திகளில் இது “ஹஸன்” தரத்தில் அமைந்ததாகும்.

கவலைகள் பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும் என்ற செய்தி இந்த ஹதீஸில் தவிர வேறெதிலும் செவியுறப்பட வில்லை” என வகீஉ (ரஹ்) அவர்கள் கூறியதைத் தாம் செவியுற்றதாக ஜாரூத் (ரஹ்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

இதே ஹதீஸைச் சிலர் அதாஉ பின் யஸார் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.


«مَا مِنْ شَيْءٍ يُصِيبُ المُؤْمِنَ مِنْ نَصَبٍ، وَلَا حَزَنٍ، وَلَا وَصَبٍ حَتَّى الهَمُّ يَهُمُّهُ إِلَّا يُكَفِّرُ اللَّهُ بِهِ عَنْهُ سَيِّئَاتِهِ»


Tirmidhi-965

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

நோயாளிக்குக் கிடைக்கும் நன்மை தொடர்பாக வந்துள்ளவை.

965. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர் ஒருவரைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதைவிட அற்பமான (துன்பம்) எதுவாயினும் அதற்குப் பதிலாக அல்லாஹ் அவருடைய தகுதிகளில் ஒன்றை உயர்த்தி, அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னிக்கிறான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி), அபூஉபைதா பின் ஜர்ராஹ் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஉமாமா (ரலி), அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), அனஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அஸத் பின் குர்ஸ் (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), அப்துர்ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி), அபூமூஸா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


«لَا يُصِيبُ المُؤْمِنَ شَوْكَةٌ فَمَا فَوْقَهَا، إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً»


Tirmidhi-3599

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3599. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹும்மன்ஃபஃனீ பிமா அல்லம்தனீ, வ அல்லிம்னீ மா யன்ஃபஉனீ, வஸித்னீ இல்மா, அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால். வ அஊது பில்லாஹி மின் ஹாலி அஹ்லின்னார்” என்று கூறி பிரார்த்தனை செய்தார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! நீ எனக்கு எதனைக் கற்றுத் தந்தாயோ அதனைக் கொண்டு எனக்குப் பயனளிப்பாயாக! மேலும், எனக்கு எது பயனளிக்குமோ அதனை எனக்குக் கற்றுக் கொடுப்பாயாக! என் கல்வியறிவை அதிகப்படுத்துவாயாக! அனைத்து நிலைகளிலும் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே உரித்தாகுக. நரகவாசிகளின் நிலையிலிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது இந்த அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது “ஃகரீப்” ஆகும்.


«اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا، الحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ، وَأَعُوذُ بِاللَّهِ مِنْ حَالِ أَهْلِ النَّارِ»


Tirmidhi-3600

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3600. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் பூமியில் சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர். மக்களின் செயல்களைப் பதிவு செய்யும் வானவர்களை விட கூடுதல் சிறப்புப் பெற்றவர்கள். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தினரை அவர்கள் கண்டால், “நீங்கள் தேடிக்கொண்டிருப்பதன் பக்கம் விரைந்து வாருங்கள்” என்று ஒருவரையொருவர் அழைத்துக் கொள்வார்கள். அப்போது அங்கு வருகை தரும் அவ்வானவர்கள் அம்மக்களை முதல் வானம் வரை சூழ்ந்துகொள்வார்கள்.

அந்நேரத்தில் அல்லாஹ் (வானவர்களிடம்) “என் அடியார்கள் என்ன செய்து கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் விட்டு வந்தீர்கள்?” என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், “உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும் உன்னை நினைவுகூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அம்மக்களை விட்டு வந்தோம்” என்று பதில் கூறுவார்கள். அப்போது அல்லாஹ், “அவர்கள் என்னைப் பார்த்துள்ளார்களா?” என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், “இல்லை” என்பர். அப்போது அல்லாஹ் “அவர்கள் என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்” என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், “அம்மக்கள் உன்னைப் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னைப்

” إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الأَرْضِ فُضُلًا عَنْ كُتَّابِ النَّاسِ، فَإِذَا وَجَدُوا أَقْوَامًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا: هَلُمُّوا إِلَى بُغْيَتِكُمْ، فَيَجِيئُونَ فَيَحُفُّونَ بِهِمْ إِلَى سَمَاءِ الدُّنْيَا، فَيَقُولُ اللَّهُ: أَيَّ شَيْءٍ تَرَكْتُمْ عِبَادِي يَصْنَعُونَ، فَيَقُولُونَ: تَرَكْنَاهُمْ يَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ وَيَذْكُرُونَكَ، قَالَ: فَيَقُولُ: فَهَلْ رَأَوْنِي، فَيَقُولُونَ: لَا، قَالَ: فَيَقُولُ: فَكَيْفَ لَوْ رَأَوْنِي؟ قَالَ: فَيَقُولُونَ: لَوْ رَأَوْكَ لَكَانُوا أَشَدَّ تَحْمِيدًا، وَأَشَدَّ تَمْجِيدًا، وَأَشَدَّ لَكَ ذِكْرًا، قَالَ: فَيَقُولُ: وَأَيُّ شَيْءٍ يَطْلُبُونَ؟ قَالَ: فَيَقُولُونَ: يَطْلُبُونَ الجَنَّةَ، قَالَ: فَيَقُولُ: وَهَلْ رَأَوْهَا؟ قَالَ: فَيَقُولُونَ: لَا، فَيَقُولُ: فَكَيْفَ لَوْ رَأَوْهَا؟ قَالَ: فَيَقُولُونَ: لَوْ رَأَوْهَا؟ لَكَانُوا أَشَدَّ لَهَا طَلَبًا، وَأَشَدَّ عَلَيْهَا حِرْصًا، قَالَ: فَيَقُولُ: فَمِنْ أَيِّ شَيْءٍ يَتَعَوَّذُونَ؟ قَالُوا: يَتَعَوَّذُونَ مِنَ النَّارِ، قَالَ: فَيَقُولُ: وَهَلْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَا، فَيَقُولُ: فَكَيْفَ لَوْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَوْ رَأَوْهَا لَكَانُوا مِنْهَا أَشَدَّ هَرَبًا، وَأَشَدَّ مِنْهَا خَوْفًا، وَأَشَدَّ مِنْهَا تَعَوُّذًا، قَالَ: فَيَقُولُ: فَإِنِّي أُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ، فَيَقُولُونَ: إِنَّ فِيهِمْ فُلَانًا الخَطَّاءَ لَمْ يُرِدْهُمْ إِنَّمَا جَاءَهُمْ لِحَاجَةٍ، فَيَقُولُ: هُمُ القَوْمُ لَا يَشْقَى لَهُمْ جَلِيسٌ “


Next Page » « Previous Page