Author: Abdul Hakkim

Tirmidhi-966

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

966. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர் ஒருவருக்கு ஏற்படும் உடல் வலி (காயம்), மன உளைச்சல், நாட்பட்ட நோய், உருக்கும் மனக்கவலை ஆகிய எதுவாயினும், அதை அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்கிவிடுகிறான்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பாக வந்துள்ள செய்திகளில் இது “ஹஸன்” தரத்தில் அமைந்ததாகும்.

கவலைகள் பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும் என்ற செய்தி இந்த ஹதீஸில் தவிர வேறெதிலும் செவியுறப்பட வில்லை” என வகீஉ (ரஹ்) அவர்கள் கூறியதைத் தாம் செவியுற்றதாக ஜாரூத் (ரஹ்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

இதே ஹதீஸைச் சிலர் அதாஉ பின் யஸார் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.


«مَا مِنْ شَيْءٍ يُصِيبُ المُؤْمِنَ مِنْ نَصَبٍ، وَلَا حَزَنٍ، وَلَا وَصَبٍ حَتَّى الهَمُّ يَهُمُّهُ إِلَّا يُكَفِّرُ اللَّهُ بِهِ عَنْهُ سَيِّئَاتِهِ»


Tirmidhi-965

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

நோயாளிக்குக் கிடைக்கும் நன்மை தொடர்பாக வந்துள்ளவை.

965. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர் ஒருவரைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதைவிட அற்பமான (துன்பம்) எதுவாயினும் அதற்குப் பதிலாக அல்லாஹ் அவருடைய தகுதிகளில் ஒன்றை உயர்த்தி, அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னிக்கிறான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி), அபூஉபைதா பின் ஜர்ராஹ் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஉமாமா (ரலி), அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), அனஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அஸத் பின் குர்ஸ் (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), அப்துர்ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி), அபூமூஸா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


«لَا يُصِيبُ المُؤْمِنَ شَوْكَةٌ فَمَا فَوْقَهَا، إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً»


Tirmidhi-3599

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3599. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹும்மன்ஃபஃனீ பிமா அல்லம்தனீ, வ அல்லிம்னீ மா யன்ஃபஉனீ, வஸித்னீ இல்மா, அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால். வ அஊது பில்லாஹி மின் ஹாலி அஹ்லின்னார்” என்று கூறி பிரார்த்தனை செய்தார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! நீ எனக்கு எதனைக் கற்றுத் தந்தாயோ அதனைக் கொண்டு எனக்குப் பயனளிப்பாயாக! மேலும், எனக்கு எது பயனளிக்குமோ அதனை எனக்குக் கற்றுக் கொடுப்பாயாக! என் கல்வியறிவை அதிகப்படுத்துவாயாக! அனைத்து நிலைகளிலும் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே உரித்தாகுக. நரகவாசிகளின் நிலையிலிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது இந்த அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது “ஃகரீப்” ஆகும்.


«اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا، الحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ، وَأَعُوذُ بِاللَّهِ مِنْ حَالِ أَهْلِ النَّارِ»


Tirmidhi-3600

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3600. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் பூமியில் சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர். மக்களின் செயல்களைப் பதிவு செய்யும் வானவர்களை விட கூடுதல் சிறப்புப் பெற்றவர்கள். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தினரை அவர்கள் கண்டால், “நீங்கள் தேடிக்கொண்டிருப்பதன் பக்கம் விரைந்து வாருங்கள்” என்று ஒருவரையொருவர் அழைத்துக் கொள்வார்கள். அப்போது அங்கு வருகை தரும் அவ்வானவர்கள் அம்மக்களை முதல் வானம் வரை சூழ்ந்துகொள்வார்கள்.

அந்நேரத்தில் அல்லாஹ் (வானவர்களிடம்) “என் அடியார்கள் என்ன செய்து கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் விட்டு வந்தீர்கள்?” என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், “உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும் உன்னை நினைவுகூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அம்மக்களை விட்டு வந்தோம்” என்று பதில் கூறுவார்கள். அப்போது அல்லாஹ், “அவர்கள் என்னைப் பார்த்துள்ளார்களா?” என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், “இல்லை” என்பர். அப்போது அல்லாஹ் “அவர்கள் என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்” என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், “அம்மக்கள் உன்னைப் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னைப்

” إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الأَرْضِ فُضُلًا عَنْ كُتَّابِ النَّاسِ، فَإِذَا وَجَدُوا أَقْوَامًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا: هَلُمُّوا إِلَى بُغْيَتِكُمْ، فَيَجِيئُونَ فَيَحُفُّونَ بِهِمْ إِلَى سَمَاءِ الدُّنْيَا، فَيَقُولُ اللَّهُ: أَيَّ شَيْءٍ تَرَكْتُمْ عِبَادِي يَصْنَعُونَ، فَيَقُولُونَ: تَرَكْنَاهُمْ يَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ وَيَذْكُرُونَكَ، قَالَ: فَيَقُولُ: فَهَلْ رَأَوْنِي، فَيَقُولُونَ: لَا، قَالَ: فَيَقُولُ: فَكَيْفَ لَوْ رَأَوْنِي؟ قَالَ: فَيَقُولُونَ: لَوْ رَأَوْكَ لَكَانُوا أَشَدَّ تَحْمِيدًا، وَأَشَدَّ تَمْجِيدًا، وَأَشَدَّ لَكَ ذِكْرًا، قَالَ: فَيَقُولُ: وَأَيُّ شَيْءٍ يَطْلُبُونَ؟ قَالَ: فَيَقُولُونَ: يَطْلُبُونَ الجَنَّةَ، قَالَ: فَيَقُولُ: وَهَلْ رَأَوْهَا؟ قَالَ: فَيَقُولُونَ: لَا، فَيَقُولُ: فَكَيْفَ لَوْ رَأَوْهَا؟ قَالَ: فَيَقُولُونَ: لَوْ رَأَوْهَا؟ لَكَانُوا أَشَدَّ لَهَا طَلَبًا، وَأَشَدَّ عَلَيْهَا حِرْصًا، قَالَ: فَيَقُولُ: فَمِنْ أَيِّ شَيْءٍ يَتَعَوَّذُونَ؟ قَالُوا: يَتَعَوَّذُونَ مِنَ النَّارِ، قَالَ: فَيَقُولُ: وَهَلْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَا، فَيَقُولُ: فَكَيْفَ لَوْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَوْ رَأَوْهَا لَكَانُوا مِنْهَا أَشَدَّ هَرَبًا، وَأَشَدَّ مِنْهَا خَوْفًا، وَأَشَدَّ مِنْهَا تَعَوُّذًا، قَالَ: فَيَقُولُ: فَإِنِّي أُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ، فَيَقُولُونَ: إِنَّ فِيهِمْ فُلَانًا الخَطَّاءَ لَمْ يُرِدْهُمْ إِنَّمَا جَاءَهُمْ لِحَاجَةٍ، فَيَقُولُ: هُمُ القَوْمُ لَا يَشْقَى لَهُمْ جَلِيسٌ “


Tirmidhi-3601

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3601. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ்” (பொருள்: நன்மைகள் செய்யவும், தீமைகள் செய்யாதிருக்கவும் உரிய ஆற்றல் மற்றும் வலிமை அல்லாஹ்வின் மூலமாகவே கிடைக்கின்றது) என்ற (துதிச்) சொல்லை அதிகமாகக் கூறு. திண்ணமாக அது சுவனத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலம் ஆகும் என்று கூறினார்கள்.


(இதன் அறிவிப்பாளர்) மக்ஹுல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். “லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி, வலா மன்ஜஅ மினல்லாஹி இல்லா இலைஹி”

(பொருள்; நன்மைகள் செய்யவும் தீமைகள் செய்யாதிருக்கவும் உரிய ஆற்றலும், வலிமையும் அல்லாஹ்வின் மூலமாகவே கிடைக்கின்றன. அல்லாஹ்வின் (கோபம் மற்றும் அவனது தண்டனை)யிலிருந்து தப்பிக்க அவனைத் தவிர வேறு புகலிடம் இல்லை) என்று ஒருவர் கூறினால் அவரை விட்டும் எழுபது வகையான துன்பங்கள் அகலும். அத்துன்பங்களில் மிகத் சிறியது ஏழ்மையாகும்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த நபிமொழியின் அறிவிப்பாளர்தொடர், “முத்தஸில்” எனும் இடைமுறிவு ஏற்படாத அறிவிப்பாளர்தொடர் அல்ல. (ஏனெனில்) மக்ஹுல் அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து எந்த ஹதீஸையும் செவியுறவில்லை.


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ” أَكْثِرْ مِنْ قَوْلِ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَإِنَّهَا مِنْ كَنْزِ الْجَنَّةِ ” قَالَ مَكْحُولٌ، فَمَنْ قَالَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ وَلَا مَنْجَى مِنَ اللَّهِ إِلَّا إِلَيْهِ: كَشَفَ عَنْهُ سَبْعِينَ بَابًا مِنَ الضُّرِّ أَدْنَاهُنَّ الفَقْرُ.


Tirmidhi-3602

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3602. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு இறைத்தூதருக்கும் ஏற்கப்படும் பிரார்த்தனை ஒன்று உள்ளது. நான் என் பிரார்த்தனையை என் சமுதாயத்தினருக்குப் பரிந்துரை செய்வதற்காக சேமித்து வைத்துள்ளேன். அல்லாஹ் நாடினால் அவர்களில் யார் அல்லாஹ்விற்கு யாதொரு இணையும் வைக்காமல் மரணமடைந்தாரோ அவருக்கு அது கிடைக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.


«لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ، وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي، وَهِيَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللَّهُ مَنْ مَاتَ مِنْهُمْ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا»


Tirmidhi-3603

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3603. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மாண்பும், மகத்துவமும் நிறைந்த அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியார் என்னைப் பற்றி நினைக்கும் விதத்தில் நான் நடந்துகொள்வேன். அவர் என்னை நினைவுகூரும் போது நான் அவருடன் இருப்பேன். அவர் என்னைத் தன் மனதில் நினைவு கூர்ந்தால் நானும் அவரை என் மனதில் நினைவுகூருவேன்.

அவர் என்னை ஓர் அவையில் நினைவு கூர்ந்தால் அவர்களை விட சிறந்த அவையினரிடம் அவரை நான் நினைவுகூருவேன். அவர் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழம் அளவுக்கு அவரை நெருங்குவேன். அவர் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் (விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு அவரை நான் நெருங்குவேன். அவர் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவரை நோக்கி விரைந்து செல்வேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


 


أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ حِينَ يَذْكُرُنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَأٍ ذَكَرْتُهُ فِي مَلَأٍ خَيْرٍ مِنْهُمْ، وَإِنْ اقْتَرَبَ إِلَيَّ شِبْرًا اقْتَرَبْتُ مِنْهُ ذِرَاعًا، وَإِنْ اقْتَرَبَ إِلَيَّ ذِرَاعًا اقْتَرَبْتُ إِلَيْهِ بَاعًا، وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً “


Tirmidhi-3604

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3604. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரக வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். மண்ணறை வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.


«اسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَاسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ القَبْرِ. اسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، وَاسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ»


Tirmidhi-3966

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3966. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் மாலை நேரத்தில், “அஊது பி கலிமாதில்லாஹித் தாம்மாதி மின் ஷர்ரி மா கலக்” என்று மூன்று முறை கூறினால் அந்த இரவில் எந்த விஷக்கடியும் அவரை துன்புறுத்தாது.

(பொருள்: அல்லாஹ்வின் முழுமையான சொற்களின் மூலமாக அவனுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோருகின்றேன்)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹைல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எங்களின் குடும்பத்தினர் இப்பிரார்த்தனையை கற்றுக் கொண்டார்கள். மேலும் அதனை ஒவ்வொரு இரவிலும் வழக்கமாகச் சொல்லி வந்தார்கள். அந்நிலையில் அவர்களிலுள்ள பெண்ணொருத்தியை விஷ ஜந்து தீண்டிவிட்டது. அதனால் அவளுக்கு வலியேதும் ஏற்படவில்லை.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

இதே அறிவிப்பாளர்தொடரில் ஸுஹைல் பின் அபூஸாலிஹ் (ரஹ்) அவர்களிடமிருந்து மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களும் இந்த நபிமொழியை அறிவித்துள்ளார்கள். இவ்வாறே ஸுஹைல் (ரஹ்) அவர்களிடமிருந்து உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களும் மற்றவர்களும் இந்த நபிமொழியை அறிவித்துள்ளார்கள். எனினும் அவர்கள் (அறிவிப்பாளர்தொடரில்) அபூஹுரைரா (ரலி) அவர்களைக் குறிப்பிடவில்லை.


” مَنْ قَالَ حِينَ يُمْسِي ثَلَاثَ مَرَّاتٍ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، لَمْ يَضُرَّهُ حُمَةٌ تِلْكَ اللَّيْلَةَ ” قَالَ سُهَيْلٌ: فَكَانَ أَهْلُنَا تَعَلَّمُوهَا فَكَانُوا يَقُولُونَهَا كُلَّ لَيْلَةٍ فَلُدِغَتْ جَارِيَةٌ مِنْهُمْ فَلَمْ تَجِدْ لَهَا وَجَعًا


Tirmidhi-3967

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

3967. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு பிரார்த்தனையை நான் மனனம் செய்து கொண்டேன். நான் அதனை விடாமல் கூறுவேன். அது,

“அல்லாஹும்மஜ்னீ உ அள்ளிமு ஷுக்ரக, வ உக்ஸிரு திக்ரக, வ அத்தபிஉ நஸீஹதக, வஅஹ்ஃபளு வஸிய்யதக”

(பொருள்: அல்லாஹ்வே! உனக்கு நான் கண்ணியமான முறையில் நன்றி செலுத்துபவனாகவும், உன்னை அதிகமாக நினைவுகூர்பவனாகவும், உனது அறிவுரையை பின்பற்றுபனாகவும், உனது சட்ட திட்டங்களை பேணி நடப்பவனாகவும் என்னை ஆக்குவாயாக)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


دُعَاءٌ حَفِظْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا أَدَعُهُ: «اللَّهُمَّ اجْعَلْنِي أُعَظِّمُ شُكْرَكَ، وَأُكْثِرُ ذِكْرَكَ، وَأَتَّبِعُ نَصِيحَتَكَ، وَأَحْفَظُ وَصِيَّتَكَ»


Next Page » « Previous Page