Author: Abdul Hakkim

Nasaayi-678

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

678. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்.

பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான்.

பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

 


«إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ وَصَلُّوا عَلَيَّ؛ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرًا، ثُمَّ سَلُوا اللَّهَ لِي الْوَسِيلَةَ؛ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ أَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ»


Tirmidhi-3614

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3614. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்.

பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான்.

பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ இமாம் கூறினார்:

இதில் இடம்பெறும் அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர் என்பவர் குறைஷி கிளையைச் சேர்ந்தவர். மேலும் இவர் மிஸ்ர் (எனும் எகிப்து) நாட்டைச் சேர்ந்தவர்.

அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர் பின் நுஃபைர் என்ற மற்றொருவர் ஷாம் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.


«إِذَا سَمِعْتُمُ المُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ، ثُمَّ صَلُّوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا، ثُمَّ سَلُوا لِيَ الوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، وَمَنْ سَأَلَ لِيَ الوَسِيلَةَ حَلَّتْ عَلَيْهِ الشَّفَاعَةُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29249

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

29249. ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“முஅத்தின் ‘அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுவதை ஒருவர் கேட்டு, ‘அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹ், ரளீத்து பில்லாஹி ரப்பன், வபில் இஸ்லாமி தீனன், வபிமுஹம்மதின் நபிய்யன்’

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று, நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வை என் இறைவனாகவும், இஸ்லாமை என் மார்க்கமாகவும், முஹம்மதை என் தூதராகவும் நான் பொருந்திக் கொண்டேன்) என்று கூறினால், அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒருவர் அவரிடம், “ஸஃத் அவர்களே! அவரது முந்தைய பாவங்களும், பிந்தைய பாவங்களும் மன்னிக்கப்படுமா?” என்று கேட்டார்.

அதற்கு ஸஃத் (ரலி) அவர்கள், “இல்லை. நபி (ஸல்) அவர்கள் (அவரது பாவங்கள் மன்னிக்கப்படும் என்று) இவ்வாறு கூறியதைத் தான், நான் கேட்டேன்” என்று குறிப்பிட்டார்கள்.


مَنْ قَالَ إِذَا قَالَ الْمُؤَذِّنُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، غُفِرَ لَهُ ذُنُوبُهُ “، فَقَالَ لَهُ رَجُلٌ: يَا سَعْدُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ؟، قَالَ: «لَا، هَكَذَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُهُ»


Ibn-Khuzaymah-422

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

422.


مَنْ سَمِعَ الْمُؤَذِّنَ يَتَشَهَّدُ فَالْتَفَتَ فِي وَجْهِهِ، فَقَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ


Tirmidhi-208

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

பாங்கு சொல்வதைக் கேட்டால் கூற வேண்டியவை.

208. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் அபூராஃபிஉ (ரலி), அபூஹுரைரா (ரலி), உம்முஹபீபா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அப்துல்லாஹ் பின் ரபீஆ (ரலி), ஆயிஷா (ரலி), முஆத் பின் அனஸ் (ரலி), முஆவியா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

அபூஸயீத் (ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” என்ற தரத்தில் அமைந்ததாகும்.

மஃமர் (ரஹ்) அவர்களும், இன்னும் பலரும் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து மேற்கண்ட மாலிக் (ரஹ்) அவர்களின் ஹதீஸைப் போன்றே அறிவித்துள்ளனர்.

அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள், ஸுஹ்ரீ —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் இந்த ஹதீஸை அறிவித்துள்ளார். மாலிக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பே மிகவும் சரியானதாகும்.


«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ المُؤَذِّنُ»


Abu-Dawood-772

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

772.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي التَّهَجُّدِ يَقُولُ بَعْدَ مَا يَقُولُ اللَّهُ أَكْبَرُ، ثُمَّ ذَكَرَ مَعْنَاهُ


Ibn-Hibban-2599

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2599.


أَنَّهُ كَانَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ كَبَّرَ، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ، أَنْتَ قَيَّامُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، أَنْتَ حَقٌّ، وَقَوْلُكَ حَقٌّ، وَوَعْدُكَ حَقٌّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ، اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ إِلَهِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ»


Ibn-Khuzaymah-1152

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நபி (ஸல்) அவர்கள், இரவுத் தொழுகையைத் துவக்கும்போது தக்பீர் கட்டிய பிறகுதான் இந்த (திக்ர் தஹ்மீத்) புகழ் வார்த்தைகளைக் கொண்டு அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்; இந்த பிரார்த்தனையை ஓதினார்கள்; தக்பீர் கட்டுவதற்கு முன்னர் அல்ல என்பதற்குரிய ஆதாரம்.

1152. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக நின்றால், தக்பீர் கட்டிய பிறகு (கீழ்க்கண்டவாறு) கூறுவார்கள்:

அல்லாஹும்ம லகல் ஹம்து, அன்த நூருஸ் ஸமாவாத்தி வல் அர்ள். வலகல் ஹம்து, அன்த கியாமுஸ் ஸமாவாத்தி வல் அர்ள். வலகல் ஹம்து, அன்த ரப்புஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, வ மன் ஃபீஹின். அன்தல் ஹக்கு. வ கவ்லுக ஹக்குன். வ வஃதுக ஹக்குன். வ லிக்காஉக ஹக்குன். வல்ஜன்னது ஹக்குன். வன்நாரு ஹக்குன். வஸ்ஸாஅது ஹக்குன்.

அல்லாஹும்ம லக அஸ்லம்து. வ பிக ஆமன்து. வ அலைக்க தவக்கல்து. வ இலைக்க அனப்து. வ இலைக்க ஹாகம்து. வ இலைக்க காஸம்து. வ இலைகல் மஸீர். அல்லாஹும் மஃக்ஃபிர்லீ மா கத்தம்து வமா அஃக்கர்து. வமா அஸ்ரர்து, வமா அஃலன்து. அன்த இலாஹீ, லா இலாஹ இல்லா அன்த.

(பொருள்: இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே! நீயே வானங்கள் மற்றும் பூமியின் பிரகாசம். புகழ் அனைத்தும் உனக்கே! நீயே வானங்கள் மற்றும் பூமியை நிர்வகிப்பவன். புகழ் அனைத்தும் உனக்கே! நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில்

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ لِلتَّهَجُّدِ قَالَ بَعْدَمَا يُكَبِّرُ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ قِيَامُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، أَنْتَ الْحَقُّ، وَقَوْلُكَ حَقٌّ، وَوَعْدُكَ حَقٌّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، وَإِلَيْكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ، اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ إِلَهِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ»


Next Page » « Previous Page