Author: Abdul Hakkim

Musnad-Ahmad-2165

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

2165. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தலைவிரிகோலமாகவும், புழுதி படிந்தவராகவும், இரத்தம் நிறைந்த ஒரு குப்பியுடனும் (தரையில் சிந்திய இரத்தத்தை) சேகரித்துக் கொண்டிருந்தவாறு நபி (ஸல்) அவர்களை ஒரு நண்பகலில் நான் கனவில் பார்த்தேன்.

அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! இது என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இது ஹுஸைன் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்களின் இரத்தம். இன்று முதல் நான் இதைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்மார் பின் அபூஅம்மார் (ரஹ்)


அம்மார் (ரஹ்) அவர்கள் கூறினார்:

நாங்கள் அந்த நாளை நினைவில் வைத்திருந்தோம். அந்த நாளில்தான் ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை பின்னர் அறிந்து கொண்டோம்.


رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي الْمَنَامِ بِنِصْفِ النَّهَارِ أَشْعَثَ أَغْبَرَ مَعَهُ قَارُورَةٌ فِيهَا دَمٌ يَلْتَقِطُهُ أَوْ يَتَتَبَّعُ فِيهَا شَيْئًا قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا هَذَا؟ قَالَ: دَمُ الْحُسَيْنِ وَأَصْحَابِهِ لَمْ أَزَلْ أَتَتَبَّعُهُ مُنْذُ الْيَوْمَ “

قَالَ عَمَّارٌ: «فَحَفِظْنَا ذَلِكَ الْيَوْمَ فَوَجَدْنَاهُ قُتِلَ ذَلِكَ الْيَوْمَ»


Alilal-Ibn-Abi-Hatim-2654

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2654.


إِنَّ اللَّهَ جَعَلَ الحَقَّ عَلَى لِسانِ عُمَرَ وَقَلبِهِ.
وَرَواهُ نافِعُ بنُ أَبِي نُعَيمٍ ، والضَّحّاكُ بنُ عُثمانَ ، عَن نافِعٍ ، عَنِ ابنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
قالَ أَبُو زُرعَةَ : حَدِيثُ نافِعِ بنِ أَبِي نُعَيمٍ أَشبَهُ ، لأَنِّي لَم أَرَ أَحَدًا يُتابِعُ إِبراهِيمَ بنَ سَعدٍ فِيهِ.


Musannaf-Ibn-Abi-Shaybah-32011

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

32011. தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்களின் நாவில் ‘ஸகீனா’ எனும் அமைதி (அல்லாஹ்வின் அருள்) இறங்குகிறது என்று நாங்கள் (சில நேரம்) பேசிக்கொள்வோம்.


«كُنَّا نَتَحَدَّثُ أَنَّ السَّكِينَةَ تَنْزِلُ عَلَى لِسَانِ عُمَرَ»


Musnad-Ahmad-21542

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21542.


مَرَرْتُ بِعُمَرَ وَمَعَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ، فَأَدْرَكَنِي رَجُلٌ مِنْهُمْ فَقَالَ: يَا فَتَى، ادْعُ اللَّهَ لِي بِخَيْرٍبَارَكَ اللَّهُ فِيكَ. قَالَ: قُلْتُ: وَمَنْ أَنْتَ رَحِمَكَ اللَّهُ؟ قَالَ: أَنَا أَبُو ذَرٍّ، قَالَ: قُلْتُ: يَغْفِرُ اللَّهُ لَكَ، أَنْتَ أَحَقُّ. قَالَ: إِنِّي سَمِعْتُ عُمَرَ يَقُولُ: نِعْمَ الْغُلَامُ، وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ وَضَعَ الْحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ يَقُولُ بِهِ»


Musnad-Ahmad-21295

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21295.


أَنَّهُ مَرَّ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ، فَقَالَ: نِعْمَ الْفَتَى غُضَيْفٌ، فَلَقِيَهُ أَبُو ذَرٍّ، فَقَالَ: أَيْ أُخَيَّ اسْتَغْفِرْ لِي. قَالَ: أَنْتَ صَاحِبُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنْتَ أَحَقُّ أَنْ تَسْتَغْفِرَ لِي فَقَالَ: إِنِّي سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ: نِعْمَ الْفَتَى غُضَيْفٌ، وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ ضَرَبَ بِالْحَقِّ عَلَى لِسَانِ عُمَرَ وَقَلْبِهِ» قَالَ عَفَّانُ: «عَلَى لِسَانِ عُمَرَ يَقُولُ بِهِ»


Musnad-Ahmad-21457

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

21457. அய்லா கிளையைச் சேர்ந்தவரான, ஃகுளைஃப் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களைக் கடந்து சென்றபோது, அவர்கள் (என்னைப் பற்றி), “எவ்வளவு சிறந்த வாலிபர்!” என்று கூறினார்கள். அப்போது அவர்களுடன் இருந்தவர்களில் ஒருவர் என்னைப் பின்தொடர்ந்து வந்து, “என் சகோதரரின் மகனே! அல்லாஹ்விடம் எனக்காக நல்லதை துஆ செய்யுங்கள்” என்று கூறினார்.

நான், “அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக! நீங்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நான் நபி (ஸல்) அவர்களின் தோழர் அபூதர் (ரலி)” என்று பதிலளித்தார். நான், “அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! நான் உங்களுக்கு துஆ செய்வதை விட, நீங்கள்தான் எனக்கு துஆ செய்ய மிகவும் தகுதியானவர்” என்று கூறினேன்.

அப்போது அபூதர் (ரலி) அவர்கள், “என் சகோதரரின் மகனே! நான் சற்றுமுன் நீங்கள் என்னைக் கடந்து சென்றபோது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், ‘எவ்வளவு சிறந்த வாலிபர்!’ என்று கூறியதை நான் கேட்டேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக அல்லாஹ் உண்மையை உமரின் நாவில் வைத்துள்ளான்; அவர் உண்மை பேசுவார்’ என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.


مَرَرْتُ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ، فَقَالَ: نِعْمَ الْغُلَامُ. فَاتَّبَعَنِي رَجُلٌ مِمَّنْ كَانَ عِنْدَهُ، فَقَالَ: يَا ابْنَ أَخِي، ادْعُ اللَّهَ لِي بِخَيْرٍ. قَالَ: قُلْتُ: وَمَنْ أَنْتَ رَحِمَكَ اللَّهُ؟ قَالَ: أَنَا أَبُو ذَرٍّ، صَاحِبُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقُلْتُ: غَفَرَ اللَّهُ لَكَ، أَنْتَ أَحَقُّ أَنْ تَدْعُوَ لِي مِنِّي لَكَ قَالَ: يَا ابْنَ أَخِي، إِنِّي سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ حِينَ مَرَرْتُ بِهِ آنِفًا يَقُولُ: نِعْمَ الْغُلَامُ، وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ وَضَعَ الْحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ يَقُولُ بِهِ»


Abu-Dawood-2962

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

2962.


«إِنَّ اللَّهَ وَضَعَ الْحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ يَقُولُ بِهِ»


Ibn-Majah-216

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

216.


«مَنْ قَرَأَ الْقُرْآنَ وَحَفِظَهُ، أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ، وَشَفَّعَهُ فِي عَشَرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ، كُلُّهُمْ قَدِ اسْتوْجَبَ النَّارَ»


Tirmidhi-2905

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2905. எவர் குர்ஆனை ஓதி, அதை மனனமிட்டு, அதில் அனுமதிக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டதாகவே கருதி, அதில் தடுக்கப்பட்டதை தடுக்கப்பட்டதாகவே கருதி செயல்படுகிறாரோ, அவரை அல்லாஹ் அதன் மூலம் சொர்க்கத்தில் நுழையச் செய்வான்.

மேலும், அவரது குடும்பத்தில் நரகம் கட்டாயமான பத்து பேருக்கு அவர் பரிந்துரை செய்ய அனுமதிப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் ‘கரீப்-அரிதானது’ எனும் வகையைச் சேர்ந்தது. இந்த ஒரு வகை அறிவிப்பாளர்தொடர் தவிர வேறு வழியில் இதை நாங்கள் அறியவில்லை. மேலும், இதற்கு (வேறு) சரியான அறிவிப்பாளர் தொடர் இல்லை. இதில் இடம்பெறும் ஹஃப்ஸ் பின் ஸுலைமான்-அபூஉமர் பஸ்ஸாஸ் கூஃபீ என்பவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று கருதப்படுகிறார்.


«مَنْ قَرَأَ الْقُرْآنَ وَاسْتَظْهَرَهُ، فَأَحَلَّ حَلَالَهُ، وَحَرَّمَ حَرَامَهُ أَدْخَلَهُ اللَّهُ بِهِ الجَنَّةَ وَشَفَّعَهُ فِي عَشَرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ كُلُّهُمْ قَدْ وَجَبَتْ لَهُ النَّارُ»


Next Page » « Previous Page