Author: Abdul Hakkim

Kubra-Bayhaqi-11912

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11912. ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒருமுறை, அமீருல் முஃமினீன்- அவர்களின் அவையில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களும், அபூயூஸுஃப் (ரஹ்) அவர்களும் வக்ஃப் சொத்துகள் மற்றும் மக்கள் தங்கள் வசம் வைத்துக்கொள்ளும் பொருட்கள் பற்றி விவாதித்தனர்.

அப்போது அபூயூஸுஃப் (ரஹ்) அவர்கள், “வக்ஃப் செய்வது தவறானது” என்று அழுத்தமாக கூறினார். மேலும் ஷுரைஹ் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் தடுத்து வைப்பதை நீக்கும் சட்டத்துடன் வந்தார்கள்” என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள், மக்கள் தங்கள் தெய்வங்களுக்காக விலங்குகளைத் தடுத்து வைத்திருந்த ‘பஹீரா’, ‘சாயிபா’ போன்றவற்றை நீக்கும் சட்டத்துடன்தான் வந்தார்கள். ஆனால், வக்ஃப் என்பது வேறு. இது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் வக்ஃப் ஆகும். நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அனுமதி கேட்டபோது, “அஸல் பொருளை உன்வசம் வைத்துக் கொண்டு, அதன் பலனைப் பொதுவாக விட்டுவிடுவீராக’ என்று நபி (ஸல்) கூறினார்கள். மேலும், ஜுபைர் (ரலி) அவர்களின் வக்ஃபும் இதற்கு ஆதாரம்” என்று தெளிவாக எடுத்துரைத்தார்.

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் (இந்த வலுவான மற்றும் தெளிவான)  விளக்கத்தைக் கேட்ட கலீஃபா பெரிதும் ஆச்சரியப்பட்டார். அபூயூசுஃப் (ரஹ்) அவர்கள் (இதை மறுத்துப்

اجْتَمَعَ مَالِكٌ وَأَبُو يُوسُفَ عِنْدَ أَمِيرِ الْمُؤْمِنِينَ فَتَكَلَّمَا فِي الْوُقُوفِ وَمَا يَحْبِسُهُ النَّاسُ، فَقَالَ يَعْقُوبُ: هَذَا بَاطِلٌ، قَالَ شُرَيْحٌ: جَاءَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِطْلَاقِ الْحَبْسِ، فَقَالَ مَالِكٌ: إِنَّمَا جَاءَ مُحَمَّدٌ صَلَّى الله عَلَيْهِ وآله وَسَلَّمَ بِإِطْلَاقِ مَا كَانُوا يَحْبِسُونَهُ لِآلِهَتِهِمْ مِنَ الْبَحِيرَةِ وَالسَّائِبَةِ، فَأَمَّا الْوُقُوفُ فَهَذَا وَقْفُ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ حَيْثُ اسْتَأْذَنَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ” احْبِسْ أَصْلَهَا وَسَبِّلْ ثَمَرَتَهَا ” وَهَذَا وَقْفُ الزُّبَيْرِ. فَأَعْجَبَ الْخَلِيفَةَ ذَلِكَ مِنْهُ، وَبَقِيَ يَعْقُوبُ


Alilal-Ibn-Abi-Hatim-1617

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1617.


أمرنا رسُولُ اللهِ صلى الله عليه وسلم أن نحِدّ الشِّفار وتُوارى عنِ البهائِمِ ، فإِذا ذبحُوها أجهزُوا عليها.
قال أبِي : روى هذا الحدِيث هِشامٌ بِآخِرِهِ هكذا موصلاً ، والصحيح عنِ الزُّهرِيِّ ، عنِ ابنِ عُمر بلا سالم.


Musnad-Ahmad-18831

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

18831.


«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ شِفَاءً، فَعَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ، فَإِنَّهَا تَرُمُّ مِنْ كُلِّ الشَّجَرِ»


Alilal-Ibn-Abi-Hatim-2255

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2255.


ما أَنزَلَ اللَّهُ مِن داءٍ إِلاَّ أَنزَلَ لَهُ دَواءٌ.
قالَ أَبِي : إِنَّما أَسنَدَ هَذا الحَدِيثَ المَسعُودِيُّ ، والرَّبِيعُ بنُ الرَّكِينِ ، وَأَبُو وَكِيعٍ , وَأَمّا الثَّورِيُّ ، فَإِنَّهُ لاَ يَسنِدُهُ إِلاَّ الفِريابِيُّ ، وَلا أَظُنُّ الثَّورِيَّ سَمِعَهُ مِن قَيسٍ أَراهُ مُدَلَّسًا.


Hakim-7423

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7423. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய மருந்தையும் இறக்காமல் இறக்குவதில்லை.

மேலும், பசு மாட்டுப் பாலில் பல நோய்களுக்கும் நிவாரணம் உண்டு.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

 


«مَا أَنْزَلَ اللَّهُ مِنْ دَاءٍ إِلَّا وَقَدْ أَنْزَلَ لَهُ شِفَاءً وَفِي أَلْبَانِ الْبَقَرِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ»


Hakim-7425

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7425. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய மருந்தை இறக்காமல் இறக்குவதில்லை. முதுமையைத் தவிர!

ஆகவே, நீங்கள் பசு மாட்டுப் பாலைப் பருகிக் கொள்ளுங்கள். ஏனெனில், அது பலவகையான தாவரத்திலிருந்து மேய்கிறது.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)


«إِنَّ اللَّهَ تَعَالَى لَمْ يُنْزِلْ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً إِلَّا الْهَرَمَ فَعَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ فَإِنَّهَا تَرُمُّ مِنْ كُلِّ شَجَرٍ»


Almujam-Alkabir-528

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

528. நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தைத் தவிர வேறு எந்த மாதத்திலும் முழுமையாக நோன்பு நோற்றதில்லை.

எனினும், ஷஅபான் மாத நோன்பை ரமளான் மாத நோன்புடன் சேர்த்து தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பார்கள்.

சில சமயம் அவர்கள் தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டே இருப்பார்கள். அப்போது நாங்கள், “இனி அவர்கள் நோன்பை விடமாட்டார்கள்” என்று சொல்லிக் கொள்வோம். சில சமயம் அவர்கள் நோன்பை விட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்போது நாங்கள், “இனி அவர்கள் நோன்பு நோற்கமாட்டார்கள்” என்று சொல்லிக் கொள்வோம்.

அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி)

 


«مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا سِوَى رَمَضَانَ إِلَّا شَعْبَانَ، فَإِنَّهُ كَانَ يَصِلُهُ بِرَمَضَانَ، فَيَكُونُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ، وَكَانَ يَصُومُ الشَّهْرَ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ»


Tirmidhi-737

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

737. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் நோன்பு நோற்ற அளவுக்கு வேறு எந்த மாதத்திலும் அதிகமாக நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை.

அவர்கள் குறிப்பிட்ட சில நாட்களைத் தவிர்த்து ஷஅபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்கள்; இல்லை மாறாக முழுமையாகவும் நோன்பு நோற்பார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அபூஸலமா (ரஹ்) அவர்களிடமிருந்து முஹம்மத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

இது பற்றி இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்களின் விளக்கம்:

இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள – بَلْ كَانَ يَصُومُهُ كُلَّهُ – “முழுமையாக நோன்பு நோற்பார்கள்” என்ற கருத்தைப் பற்றி கூறுகையில், ‘அரபி மொழியில் அதிகம் என்பதைக் குறிப்பிட இவ்வாறு கூறுவது வழமைதான். ஒருவர் ஒரு மாதத்தின் பெரும்பகுதியில் நோன்பு நோற்றால், “அவர் முழு மாதமும் நோன்பு நோற்றார்” என்று சொல்வது வழக்கம். அதுபோல, “ஒருவர் இரவு முழுவதும் தொழுதார்” என்று சொல்வதும் உண்டு. ஆனால் அவர் சிறிது நேரம் உணவு உட்கொண்டோ அல்லது வேறு சில காரியங்களில் ஈடுபட்டோ இருந்திருக்கலாம்.

எனவே இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள் இரு ஹதீஸ்களையும் இணைத்து (ஒத்துப்போகிறவாறு) புரிந்துள்ளார்கள். அவர்களின் கருத்துப்படி, ‘இந்த ஹதீஸின் பொருள்—நபி (ஸல்) அவர்கள்

«مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَهْرٍ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ كَانَ يَصُومُهُ إِلَّا قَلِيلًا بَلْ كَانَ يَصُومُهُ كُلَّهُ»،

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ،


Tirmidhi-736

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ரமளானுடன் ஷஅபானை இணைத்து நோன்பு வைப்பது குறித்து வந்துள்ளவை.

736. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான், ரமளான் ஆகிய இரண்டு மாதங்களைத் தவிர, வேறு எந்த இரு மாதங்களிலும் தொடர்ந்து நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் வழியாக வரும் மேற்கண்ட செய்தி “ஹஸன்” தரத்தில் அமைந்ததாகும்.


«مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ إِلَّا شَعْبَانَ وَرَمَضَانَ»


Hakim-8224

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8224. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பசுவின் பாலை அருந்துங்கள். ஏனெனில் அது பலதரப்பட்ட தாவரத்திலிருந்து (அதன் இலைகளை, புற்களை) மேய்கிறது.

எனவே, அது பல நோய்க்கும் நிவாரணமாகும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)


«عَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ فَإِنَّهَا تَرِمُّ مِنْ كُلِّ شَجَرٍ، وَهُوَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ»


Next Page » « Previous Page