Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-443

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

443. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது பயணத்தில் இருந்து கொண்டிருக்கும் போது பஜ்ர் தொழாமல் தூங்கி விட்டார்கள். அனைவரும் வெயில் பட்டு தான் கண் விழித்தார்கள். சூரியன் உயர்கின்றவரை கொஞ்சம் தள்ளி சென்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் முஅத்தினுக்கு உத்தரவிட்டார்கள். அவர் அதான் சொன்னதும் பஜ்ருக்கு முன்புள்ள இரண்டு ரக்அத்துக்களை தொழுதார்கள். அவர் இகாமத் சொன்னதும் பஜ்ர் தொழுகையை தொழுதார்கள் என்று இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அறிவிக்கின்றார்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي مَسِيرٍ لَهُ فَنَامُوا عَنْ صَلَاةِ الْفَجْرِ، فَاسْتَيْقَظُوا بِحَرِّ الشَّمْسِ فَارْتَفَعُوا قَلِيلًا حَتَّى اسْتَقَلَّتِ الشَّمْسُ، ثُمَّ أَمَرَ مُؤَذِّنًا فَأَذَّنَ فَصَلَّى رَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ، ثُمَّ أَقَامَ، ثُمَّ صَلَّى الْفَجْرَ»


Abu-Dawood-442

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

442. யார் தொழுகையை மறந்து விடுகின்றாரோ அது நினைவுக்கு வந்ததும் தொழுது விடுவாராக! இதை தவிர தொழுகையை மறந்ததற்கு வேறு எந்த பரிகாரமும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)


«مَنْ نَسِيَ صَلَاةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا، لَا كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ»


Abu-Dawood-441

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

441. தூக்கத்தில் வரம்பு மீறுதல் என்பது கிடையாது. விழித்திருக்கும் போது, மறுநேரத் தொழுகை வரும் வரை ஒரு தொழுகையை பிற்படுத்துவதே வரம்பு மீறுவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூகதாதா (ரலி) அறிவிக்கின்றார்.


«لَيْسَ فِي النَّوْمِ تَفْرِيطٌ إِنَّمَا التَّفْرِيطُ فِي الْيَقَظَةِ أَنْ تُؤَخِّرَ صَلَاةً حَتَّى يَدْخُلَ وَقْتُ أُخْرَى»


Abu-Dawood-440

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

440. நபி (ஸல்) அவர்கள் சூரியன் உயர்ந்தவுடன் உலூச் செய்து மக்களுக்கு தொழுவித்தனர் என்ற மேலுள்ள ஹதீஸின் கருத்தே இடம் பெறுகின்றது. இதுவும் அபூகதாதா மகன் மூலம் அறிவிக்கப்படுகின்றது.


فَتَوَضَّأَ حِينَ ارْتَفَعَتِ الشَّمْسُ فَصَلَّى بِهِمْ


Abu-Dawood-439

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

439. அல்லாஹ் அவன் விரும்பும் போது உங்கள் உயிர்களை கைப்பற்றி விடுகின்றான். அவன் விரும்பும் போது அவ்வுயிர்களை திரும்ப அனுப்பி விடுகின்றான். (பிலாலே) எழுந்து அதான் சொல்வீராக! என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதும் நபித் தோழர்கள் எழுந்து உலூச் செய்தனர். சூரியன் உயர்ந்ததும் நபி (ஸல்) அவர்கள் தொழ நின்று எங்களுக்கு தொழுவித்தார்கள் என்று மேலுள்ள ஹதீஸை அபூகதாதாவிடமிருந்து அவரது மகன் அறிவிக்கின்றார்.


«إِنَّ اللَّهَ قَبَضَ أَرْوَاحَكُمْ حَيْثُ شَاءَ وَرَدَّهَا حَيْثُ شَاءَ قُمْ فَأَذِّنْ بِالصَّلَاةِ» فَقَامُوا فَتَطَهَّرُوا، حَتَّى إِذَا ارْتَفَعَتِ الشَّمْسُ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى بِالنَّاسِ


Abu-Dawood-438

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

438. எங்களிடம் அப்துல்லாஹ் பின் ரபாஹ் அல் அன்சாரி வருகையுற்றார். அன்சாரிகள் அவரை (பகீஹ்) மார்க்க அறிஞராக கருதியிருந்தனர். அல்லாஹ்வின் தூதருடைய குதிரை வீரரான அபூகதாதா அல் அன்சாரி எனக்கு அறிவித்தார்கள் என அவர் அறிவிக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைத்தளபதிகளை (போருக்கு) அனுப்பினார்கள் என்று மேற்கண்ட நிகழ்ச்சியை அறிவிக்கின்றார்.

சூரியன் உதித்த பிறகே தவிர நாங்கள் விழிக்கவில்லை. எனவே, தொழுகைக்காக வேண்டி பதறியவர்களாக எழுந்தோம். நபி (ஸல்) அவர்கள் நிதானம், நிதானம் என்று சென்னார்கள். சூரியன் உயர்ந்ததும், உங்களில் யார் பஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துக்களை தொழுவோர் அவ்விரு ரக்அத்துக்களை தொழுவாராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும் அவ்விரு ரக்அத்துக்களை வழமையாக தொழுவோம், வழக்கமாக தொழாதவரும் தொழுதனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்கான அழைப்பு விடுக்கும்படி கட்டளையிட்டதும் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப் பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று எங்களுக்கு தொழுவித்தார்கள். அவர்கள் தொழுது முடித்தவுடன்

بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَيْشَ الْأُمَرَاءِ – بِهَذِهِ الْقِصَّةِ – قَالَ: فَلَمْ تُوقِظْنَا إِلَّا الشَّمْسُ طَالِعَةً فَقُمْنَا وَهِلِينَ لِصَلَاتِنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُوَيْدًا رُوَيْدًا»، حَتَّى إِذَا تَعَالَتِ الشَّمْسُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ مِنْكُمْ يَرْكَعُ رَكْعَتَيِ الْفَجْرِ فَلْيَرْكَعْهُمَا»، فَقَامَ مَنْ كَانَ يَرْكَعُهُمَا وَمَنْ لَمْ يَكُنْ يَرْكَعُهُمَا فَرَكَعَهُمَا ثُمَّ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُنَادَى بِالصَّلَاةِ فَنُودِيَ بِهَا فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى بِنَا فَلَمَّا انْصَرَفَ قَالَ: «أَلَا إِنَّا نَحْمَدُ اللَّهَ أَنَّا لَمْ نَكُنْ فِي شَيْءٍ مِنْ أُمُورِ الدُّنْيَا يَشْغَلُنَا عَنْ صَلَاتِنَا وَلَكِنَّ أَرْوَاحَنَا كَانَتْ بِيَدِ اللَّهِ عَزَّ وَجَلَّ فَأَرْسَلَهَا أَنَّى شَاءَ فَمَنْ أَدْرَكَ مِنْكُمْ صَلَاةَ الْغَدَاةِ مِنْ غَدٍ صَالِحًا فَلْيَقْضِ مَعَهَا مِثْلَهَا»


Abu-Dawood-437

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

437. நபி (ஸல்) அவர்கள் தனக்குரிய ஒரு பயணத்தில் சென்று கொண்டிருக்கும் போது (ஓய்வெடுப்பதற்காக பாதையை விட்டு) ஓதுங்கினார்கள். நானும் அவர்களுடன் ஓதுங்கினேன். அப்போது (நம் முன் எத்தனை பேர்கள் வருகின்றார்கள் என்று) பார் என்றார்கள். இதோ ஒரு பயணி, இரு பயணிகள், மூன்று பேர்கள் என நாங்கள் ஏழு பேர்கள் இருக்கின்றோம் என்று தெரிவித்தேன். சுப்ஹு தொழுகைக்கு (எழுந்திருப்பதற்கு) ஓர் ஏற்பாடு செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஆனால் உறங்கியவர்களின் செவிப்புலன்கள் செயலிழந்து விட்டன. வெயில் பட்டுதான் அவர்கள் கண் விழித்தார்கள். அவர்கள் எழுந்து சொஞ்ச நேரம் பயணம் செய்தனர். பிறகு இறங்கி உலூ செய்தனர். பிலால் பாங்கு சொன்னதும் அவர்கள் சுப்ஹுடைய சுன்னத் இரண்டு ரக்கஅத்துக்களை தொழுதனர். பிறகு சுப்ஹ் தொழுது விட்டு பயணம் மேற்கொண்டார்கள்.

அப்போது ஒருவர் இன்னொருவருடன் நாம் (தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாது) வரம்பு மீறிவிட்டோம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் உறக்கத்தில் வரம்பு மீறுவது கிடையாது. வரம்பு மீறுதல் என்பது விழித்துக் கொண்டிருக்கும் போது தான். எனவே, உங்களில் ஒரு தொழுகையை மறந்து

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي سَفَرٍ لَهُ فَمَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمِلْتُ مَعَهُ، قَالَ: «انْظُرْ»، فَقُلْتُ: هَذَا رَاكِبٌ، هَذَانِ رَاكِبَانِ، هَؤُلَاءِ ثَلَاثَةٌ، حَتَّى صِرْنَا سَبْعَةً، فَقَالَ: «احْفَظُوا عَلَيْنَا صَلَاتَنَا» – يَعْنِي صَلَاةَ الْفَجْرِ – فَضُرِبَ عَلَى آذَانِهِمْ فَمَا أَيْقَظَهُمْ إِلَّا حَرُّ الشَّمْسِ فَقَامُوا فَسَارُوا هُنَيَّةً ثُمَّ نَزَلُوا فَتَوَضَّئُوا وَأَذَّنَ بِلَالٌ فَصَلَّوْا رَكْعَتَيِ الْفَجْرِ، ثُمَّ صَلَّوُا الْفَجْرَ وَرَكِبُوا، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: قَدْ فَرَّطْنَا فِي صَلَاتِنَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ لَا تَفْرِيطَ فِي النَّوْمِ، إِنَّمَا التَّفْرِيطُ فِي الْيَقَظَةِ فَإِذَا سَهَا  أَحَدُكُمْ عَنْ صَلَاةٍ فَلْيُصَلِّهَا حِينَ يَذْكُرُهَا وَمِنَ الْغَدِ لِلْوَقْتِ»


Abu-Dawood-434

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

434. எனக்கு பிறகு உங்களிடம் ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள். அவர்கள் தொழுகையை பிற்படுத்துவார்கள். (உங்களுக்குரிய) அந்த தொழுகை உங்களுக்கே! (அதன் நன்மை உங்களுக்கு கிடைத்து விடும்) (அவர்களுக்குரிய) தொழுகை அவர்களுக்குரியதாகும். (பிற்படுத்தியதின் பாவம் அவர்களைச் சாரும்) அவர்கள் கிப்லாவை நோக்கி தொழும் வரை அவர்களுடன் சேர்ந்து தொழுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கபீசா பின் வக்காஸ் அறிவிக்கின்றார்.


«يَكُونُ عَلَيْكُمْ أُمَرَاءُ مِنْ بَعْدِي يُؤَخِّرُونَ الصَّلَاةَ فَهِيَ لَكُمْ وَهِيَ عَلَيْهِمْ، فَصَلُّوا مَعَهُمْ مَا صَلَّوُا الْقِبْلَةَ»


Abu-Dawood-433

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

433. எனக்கு பின்னால் உங்களிடம் ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள். தொழுகை நேரம் கடந்து விடும் வரை தொழுகைக்குரிய நேரத்தில் அவர்கள் தொழாமல் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். எனவே, நீங்கள் தொழுகைக்குரிய நேரத்தில் தொழுது விடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவுடன், அல்லாஹ்வின் தூதரே! நான் அவர்களுடன் சேர்ந்து தொழலாமா? என்று ஒருவர் கேட்டார். ஆம்! நீ விரும்பினால் தொழுது கொள்! என்று சொன்னார்கள் என உப்பாதா பின் சாமித் (ரலி) அறிவிக்கின்றார்.

அவர்களுடன் நான் தொழுகையை அடைந்து கொண்டால் அவர்களுடன் சேர்ந்து தொழலாமா? என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர்கள் நீ விரும்பினால் தொழுது கொள் என்று பதிலளித்தார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் இப்னு மாஜாவில் பதிவாகியுள்ளது.)


«إِنَّهَا سَتَكُونُ عَلَيْكُمْ بَعْدِي أُمَرَاءُ تَشْغَلُهُمْ أَشْيَاءُ عَنِ الصَّلَاةِ لِوَقْتِهَا حَتَّى يَذْهَبَ وَقْتُهَا فَصَلُّوا الصَّلَاةَ لِوَقْتِهَا»، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أُصَلِّي مَعَهُمْ؟، قَالَ: «نَعَمْ، إِنْ شِئْتَ» – وَقَالَ سُفْيَانُ: إِنْ أَدْرَكْتُهَا مَعَهُمْ أُصَلِّي مَعَهُمْ؟ – قَالَ: «نَعَمْ، إِنْ شِئْتَ»


Abu-Dawood-432

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

432. அல்லாஹ்வின் தூதரின் தூதராக முஆத் பின் ஜபல் (ரலி) யமன் நாட்டு ஆளுநராக எங்களிடம் வருகையளித்தார். பஜ்ர் தொழுகையில் அவரது தக்பீரை செவியுற்றேன். அவர் கம்பீரமான குரலைக் கொண்டிருந்தார்.

அவர் மீது நான் அன்பு கொண்டேன். மரணமாகி சிரியாவில் அவரை நான் அடக்கம் செய்யும் வரை அவரை விட்டும் நான் பிரியவே இல்லை. அவருக்கு பிறகு மக்களில் அதிக ஞானமுள்ள ஒருவரை தேடிப் பார்த்து அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)யிடம் வந்து, அவர் மரணம் ஆகும் வரை அவரையே பின்பற்றியிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்குரிய நேரத்தை தாண்டி வேறு நேரத்தில் தொழும் அமீர்கள் உங்களை ஆளும் போது நீ எப்படி நடந்து கொள்வாய் என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே! அந்த நிலை என்னை அடையும் போது நான் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று எனக்கு நீங்கள் உத்தரவு இடுகின்றீர்கள் என்று நான் (திரும்ப) கேட்டேன். அதற்கு அவர்கள் (கடமையான) தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது விடு! அந்த அமீர்கள் தொழும் போது அவர்களுடனும் நீ சேர்ந்து தொழுது உனது தொழுகையை உபரியாக ஆக்கிக் கொள்க என்று சொன்னார்கள் என அம்ர் பின் மைமூன் அல் அவதி அறிவிக்கின்றார்.

قَدِمَ عَلَيْنَا مُعَاذُ بْنُ جَبَلٍ الْيَمَنَ رَسُولُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْنَا، قَالَ: فَسَمِعْتُ تَكْبِيرَهُ مَعَ الْفَجْرِ رَجُلٌ أَجَشُّ الصَّوْتِ، قَالَ: فَأُلْقِيَتْ عَلَيْهِ مَحَبَّتِي فَمَا فَارَقْتُهُ حَتَّى دَفَنْتُهُ بِالشَّامِ مَيِّتًا، ثُمَّ نَظَرْتُ إِلَى أَفْقَهِ النَّاسِ بَعْدَهُ فَأَتَيْتُ ابْنَ مَسْعُودٍ فَلَزِمْتُهُ حَتَّى مَاتَ، فَقَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ بِكُمْ إِذَا أَتَتْ عَلَيْكُمْ أُمَرَاءُ يُصَلُّونَ الصَّلَاةَ لِغَيْرِ مِيقَاتِهَا»، قُلْتُ: فَمَا تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «صَلِّ الصَّلَاةَ لِمِيقَاتِهَا وَاجْعَلْ صَلَاتَكَ مَعَهُمْ سُبْحَةً»


Next Page » « Previous Page