Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-346

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

346. ஹதீஸ் எண்-345 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.


«مَنْ غَسَلَ رَأْسَهُ يَوْمَ الْجُمُعَةِ وَاغْتَسَلَ» ثُمَّ سَاقَ نَحْوَهُ


Abu-Dawood-345

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

345. ஒருவர் ஜும்ஆ நாளன்று (தலையைக்) கழுவி, குளித்து முதல் நேரத்திலேயே புறப்பட்டு சென்று ஆரம்ப சொற்பொழிவையும் பெற்று விடுகின்றார். வாகனத்தில் செல்லாமல் நடந்தே செல்கின்றார். இமாமுக்கு அருகில் சென்று சொற்பொழிவை வீணாக்காமல் செவிமடுக்கின்றார் என்றால் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும் ஒரு வருடம் நோன்பு நோற்ற, நின்று தொழுத வணக்கத்தின் கூலி கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் அஸ்ஸகபீ (ரலி)


«مَنْ غَسَّلَ يَوْمَ الْجُمُعَةِ وَاغْتَسَلَ، ثُمَّ بَكَّرَ وَابْتَكَرَ، وَمَشَى وَلَمْ يَرْكَبْ، وَدَنَا مِنَ الْإِمَامِ فَاسْتَمَعَ وَلَمْ يَلْغُ كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ أَجْرُ صِيَامِهَا وَقِيَامِهَا»


Abu-Dawood-344

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

344. குளிப்பதும் பல் துலக்குவதும் ஜும்ஆ தினத்தின் போது வயது வந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். தன்னால் முடிந்த வரை நறுமணத்தை பூசிக் கொள்ளல் வேண்டும் 

அறிவிப்பவர் : அபூ சயீத் அல் குத்ரீ (ரலி)

(இத்தொடரின் அறிவிப்பாளர்களான) புகைர் என்பார் அபூசயீத் அல் குத்ரீ (ரலி)க்கும் அம்ர் பின் சுலைமுக்கும் இடையில் உள்ள அப்துர் ரஹ்மான் என்ற அறிவிப்பாளரை தனது தொடரில் குறிப்பிடவில்லை.

(தன்) மனைவியிடம் இருந்தேனும் நறுமணத்தை வாங்கி பூசிக் கொள்ள வேண்டும் என்று நறுமணம் தொடர்பாக புகைர் அறிவிக்கின்றார். 

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீயிலும் இடம் பெறுகிறது. இது போன்ற ஹதீஸை அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) யிடமிருந்து அம்ர் பின் சுலைம் அறிவிப்பதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது.)


«الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، وَالسِّوَاكُ وَيَمَسُّ مِنَ الطِّيبِ مَا قُدِّرَ لَهُ» إِلَّا أَنَّ بُكَيْرًا لَمْ يَذْكُرْ عَبْدَ الرَّحْمَنِ وَقَالَ فِي الطِّيبِ: «وَلَوْ مِنْ طِيبِ الْمَرْأَةِ»


Abu-Dawood-343

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

343. ஒருவர் ஜும்ஆ தினத்தன்று குளித்து, தனது ஆடைகளில் நல்லதை அணிந்து, அவரிடம் வாசனை திரவியம் இருக்குமானல் அதையும் பூசிக் கொண்டு ஜும்ஆவிற்கு வருகின்றார். மக்களை தாண்டிச் செல்லாமல் தன் மீது அல்லாஹ் கடமையாக்கியதை தொழுகின்றார். இவரது தொழுகை முடிந்து இமாம் வெளியாகும் வரை (யாருடனும் பேசாது) மவுனமாக இருந்தாரென்றால் இவரது இந்த நற்செயல்கள் இந்த ஜும்ஆவிற்கும் முந்தைய ஜும்ஆவிற்கும் இடையில் ஏற்பட்டு விட்ட பாவங்களுக்கு பரிகாரமாகி விடுகின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்கள் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி), அபூஹுரைரா (ரலி)

(ஜும்ஆவிலிருந்து ஜும்ஆ வரை ஏற்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் கால அளவில்) மூன்று நாட்கள் அதிகமாக்கி (பத்து நாட்கள் என்றும்)யும் ஒரு நன்மை செய்யும் போது அதற்கு பதிலாக அது போன்று பத்து நன்மைகள் கிடைக்கும் என்றும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் (இணைத்து) கூறியதாக முஹம்மது பின் ஸலமா கூறுகின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் : 

(ஹம்மாத்,

«مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَلَبِسَ مِنْ أَحْسَنِ ثِيَابِهِ، وَمَسَّ مِنْ طِيبٍ إِنْ كَانَ عِنْدَهُ، ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَلَمْ يَتَخَطَّ أَعْنَاقَ النَّاسِ، ثُمَّ صَلَّى مَا كَتَبَ اللَّهُ لَهُ، ثُمَّ أَنْصَتَ إِذَا خَرَجَ إِمَامُهُ حَتَّى يَفْرُغَ مِنْ صَلَاتِهِ كَانَتْ كَفَّارَةً لِمَا بَيْنَهَا وَبَيْنَ جُمُعَتِهِ الَّتِي قَبْلَهَا» – قَالَ: وَيَقُولُ أَبُو هُرَيْرَةِ: «وَزِيَادَةٌ ثَلَاثَةُ أَيَّامٍ» – وَيَقُولُ: «إِنَّ الْحَسَنَةَ بِعَشْرِ أَمْثَالِهَا»


Abu-Dawood-342

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

342. வயது வந்த ஒவ்வொருவரும் ஜும்ஆவிற்கு செல்வது கடைமையாகும். ஜும்ஆவிற்கு செல்லும் ஒவ்வொருவரின் மீதும் குளிப்பு கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹப்ஸா (ரலி) 

ஜும்ஆவின் பஜ்ர் நேரம் உதயமான பிறகு ஒருவர் குளித்து விட்டால் அது ஜும்ஆ குளிப்பிற்கு போதுமானதே! அவரது குளிப்பு கடமையான குளிப்பாக இருந்தாலும் சரியே! என்று இமாம் அபூதாவூத் (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.


«عَلَى كُلِّ مُحْتَلِمٍ رَوَاحٌ إِلَى الْجُمُعَةِ، وَعَلَى كُلِّ مَنْ رَاحَ إِلَى الْجُمُعَةِ الْغُسْلُ»


Abu-Dawood-341

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

341. ஜும்ஆ தினத்தன்று குளிப்பது வயது வந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி).


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»


Abu-Dawood-340

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 129

ஜுமுஆ தினத்தில் குளித்தல்.

340. ஜும்ஆ நாளன்று உமர் (ரலி) அவர்கள் (ஜும்ஆ) உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒருவர் (பள்ளியில்) நுழைந்தார். (அவரிடம்) நீங்கள் தொழுகையை விட்டும் (அதன் ஆரம்ப நேரத்தில் வராமல்) பின் தங்கி விடுகின்றீர்கள்? என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டதும், நான் (ஜும்ஆ) பாங்கை செவிமடுத்த மாத்திரத்தில் உடனே உலூச் செய்ததை தவிர நான் வேறு எந்த வகையிலும் தாமதமாகவில்லையே என்று வந்தவர் பதில் சொன்னார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், உலூ மட்டும் தான் செய்தீர்களா? உங்களில் ஒருவர் ஜும்ஆவிற்கு வர நாடினால் அவர் குளித்துக் கொள்ளட்டும் என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூற செவியுறவில்லையா? என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ بَيْنَا هُوَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ رَجُلٌ فَقَالَ عُمَرُ: أَتَحْتَبِسُونَ عَنِ الصَّلَاةِ؟ فَقَالَ الرَّجُلُ: مَا هُوَ إِلَّا أَنْ سَمِعْتُ النِّدَاءَ فَتَوَضَّأْتُ. فَقَالَ عُمَرُ: وَالْوُضُوءُ أَيْضًا، أَوَ لَمْ تَسْمَعُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا أَتَى أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ»


Abu-Dawood-338

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 128

தயம்மும் செய்து தொழுத பின்னர் ஒருவர் தண்ணீரைக் கண்டால் ?

338. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

இருவர் பயணம் சென்று கொண்டிருந்தனர். அப்போது (அவர்களுக்கு) தொழுகை நேரமானதும் அவர்களிடம் தண்ணீர் இல்லை. எனவே, அவ்விருவரும் பரிசுத்தமான மண்ணில் தயம்மம் செய்து, தொழுதார்கள். பிறகு அவ்விருவரும் அந்த (தொழுகைக்குரிய) நேரத்திலேயே தண்ணீரை பெற்று கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தொழுகையையும் உலூவையும் மீட்டிக் கொண்டார். இன்னொருவர் (அவ்வாறு) மீட்டவில்லை. பிறகு அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இதை தெரிவித்தார்கள். அப்போது அவர்கள் (இவ்வாறு) மீட்டாதவரை நோக்கி நீர் சுன்னத்திற்கு (நபி வழிக்கு) உடன் பட்டு விட்டீர்! உமது தொழுகை உமக்கு போதுமானதாகும் (திருப்பித் தொழ வேண்டியதில்லை) உலூச் செய்து, மீட்டித் தொழதவரை நோக்கி உமக்கு இருமடங்கு கூலிகள் உள்ளன! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ(ரலி)

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் : 

خَرَجَ رَجُلَانِ فِي سَفَرٍ، فَحَضَرَتِ الصَّلَاةُ وَلَيْسَ مَعَهُمَا مَاءٌ، فَتَيَمَّمَا صَعِيدًا طَيِّبًا فَصَلَّيَا، ثُمَّ وَجَدَا الْمَاءَ فِي الْوَقْتِ، فَأَعَادَ أَحَدُهُمَا الصَّلَاةَ وَالْوُضُوءَ وَلَمْ يُعِدِ الْآخَرُ، ثُمَّ أَتَيَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَا ذَلِكَ لَهُ فَقَالَ لِلَّذِي لَمْ يُعِدْ: «أَصَبْتَ السُّنَّةَ، وَأَجْزَأَتْكَ صَلَاتُكَ». وَقَالَ لِلَّذِي تَوَضَّأَ وَأَعَادَ: «لَكَ الْأَجْرُ مَرَّتَيْنِ»