Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-357

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 132

மாத விலக்கின் போது அணிந்த ஆடையை கழுவுதல்.

357. (மாதவிலக்கின் போது) தன்னுடைய ஆடையில் இரத்தம் பட்டு விடுமோ அந்த மாதவிலக்கான பெண்ணை பற்றி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அதை அவள் கழுவுவாள். அதனுடைய கரை போகாவிட்டால் மஞ்சள் நிறமான பொருள் எதையேனும் கொண்டு அதை மாற்றுவாளாக! 

மேலும் சொன்னார்கள் :

என்றும் எனக்குரிய ஆடையை நான் கழுவாமலேயே தொடர்ந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு இருக்கும் போது மூன்று மாதவிலக்காகி உள்ளேன் என்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : முஆதா (ரலி) அன்ஹா.


سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ الْحَائِضِ يُصِيبُ ثَوْبَهَا الدَّمُ قَالَتْ: «تَغْسِلُهُ فَإِنْ لَمْ يَذْهَبْ أَثَرُهُ فَلْتُغَيِّرْهُ بِشَيْءٍ مِنْ صُفْرَةٍ». قَالَتْ: «وَلَقَدْ كُنْتُ أَحِيضُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ حِيَضٍ جَمِيعًا لَا أَغْسِلُ لِي ثَوْبًا»


Abu-Dawood-356

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

356. நபி (ஸல்) அவர்களிடம் (எனது பாட்டனார்) வந்து நான் முஸ்லிமாகி விட்டேன் என்றார். உடனே அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் நிராகரிப்பு என்ற முடியை அகற்றி விடு! தலையை மழித்துக் கொள்க என்று கூறினார்கள். எனது பாட்டனாருடன் இருந்த இன்னொருவருக்கு நிராகரிப்பு என்னும் முடியை களைந்து கத்னா செய்து கொள்வீராக என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எனது பாட்டனார் அல்லது ஒருவர் எனக்கு அறிவித்தார். 

அறிவிப்பவர் : உஸைம்.


أَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: قَدْ أَسْلَمْتُ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلْقِ عَنْكَ شَعْرَ الْكُفْرِ» يَقُولُ: احْلِقْ قَالَ: وأَخْبَرَنِي آخَرُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِآخَرَ مَعَهُ: «أَلْقِ عَنْكَ شَعْرَ الْكُفْرِ وَاخْتَتِنْ»


Abu-Dawood-355

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 131

இஸ்லாத்தை தழுவியவர் குளிப்பது.

355. நான் இஸ்லாத்தை தழுவ எண்ணி நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் எனக்கு தண்ணீர் மற்றும் இலந்தை இலையைக் கொண்டு குளிக்கும் படி கட்டளையிட்டனர். 

அறிவிப்பவர் : கைஸ் பின் ஆஸிம் (ரலி)

(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, நஸயீயிலும் இடம் பெற்றுள்ளது.)


«أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيدُ الْإِسْلَامَ فَأَمَرَنِي أَنْ أَغْتَسِلَ بِمَاءٍ وَسِدْرٍ»


Abu-Dawood-354

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

354. யார் உலூச் செய்கின்றாரோ அது நல்லது தான். யார் குளிக்கின்றாரோ அது மிகச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : சமுரா (ரலி).


«مَنْ تَوَضَّأَ يَوْمَ الْجُمُعَةِ فَبِهَا وَنِعْمَتْ، وَمَنِ اغْتَسَلَ فَهُوَ أَفْضَلُ»


Abu-Dawood-353

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

353. ஈராக் நாட்டவர்கள் சிலர் இப்னு அப்பாஸ் (ரலி)யிடம் வந்து இப்னு அப்பாஸே ஜும்ஆ நாளன்று குளிப்பு கடமை என்றா கருதுகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) பின் வருமாறு பதில் கூறினார்கள்:

யார் குளிக்கின்றாரோ அவருக்கு அது தூய்மையானதும், சிறந்ததும் ஆகும். யார் குளிக்கவில்லையோ அவருக்கு அது கடமையில்லை. குளிப்பு எப்படி ஆரம்பமானது என்று நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். மக்கள் கடுமையான வறுமையின் பிடியில் இருந்தார்கள். கம்பளியை அணிந்து கொண்டும் தங்கள் முதுகுகளில் சுமைகளை சுமந்து கொண்டும் இருந்தனர். அவர்களது (அன்றைய) பள்ளிவாசல் நெருக்கடியானதாகவும் முகடு தாழ்வானதாகவும் இருந்தது. அது (பேரீத்த மர நாரினால் வேயப்பட்ட) கூரை தான். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெப்பமிருந்த ஒரு நாள் புறப்பட்டு வந்தார்கள். மக்களும் அந்த கம்பளி ஆடைகளில் வியர்த்துப் போய் இருந்தனர். அவர்களிடம் இருந்து துர்வாடை கிளம்பி அதன் காரணமாக ஒருவர் இன்னொருவரை சங்கடமடைய செய்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வாடையை நுகர நேரிட்டதும், மக்களே! இந்த (ஜும்ஆ) நாள் வந்து விட்டால்

أَنَّ أُنَاسًا مِنْ أَهْلِ الْعِرَاقِ جَاءُوا فَقَالُوا: يَا ابْنَ عَبَّاسٍ أَتَرَى الْغُسْلَ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبًا؟ قَالَ: لَا، وَلَكِنَّهُ أَطْهَرُ، وَخَيْرٌ لِمَنِ اغْتَسَلَ، وَمَنْ لَمْ يَغْتَسِلْ فَلَيْسَ عَلَيْهِ بِوَاجِبٍ، وَسَأُخْبِرُكُمْ كَيْفَ بَدْءُ الْغُسْلِ كَانَ النَّاسُ مَجْهُودِينَ يَلْبَسُونَ الصُّوفَ وَيَعْمَلُونَ عَلَى ظُهُورِهِمْ، وَكَانَ مَسْجِدُهُمْ ضَيِّقًا مُقَارِبَ السَّقْفِ – إِنَّمَا هُوَ عَرِيشٌ – فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَوْمٍ حَارٍّ وَعَرِقَ النَّاسُ فِي ذَلِكَ الصُّوفِ حَتَّى ثَارَتْ مِنْهُمْ رِيَاحٌ آذَى بِذَلِكَ بَعْضُهُمْ بَعْضًا، فَلَمَّا وَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تِلْكَ الرِّيحَ قَالَ: «أَيُّهَا النَّاسُ إِذَا كَانَ هَذَا الْيَوْمَ فَاغْتَسِلُوا، وَلْيَمَسَّ أَحَدُكُمْ أَفْضَلَ مَا يَجِدُ مِنْ دُهْنِهِ وَطِيبِهِ» قَالَ ابْنُ عَبَّاسٍ: ثُمَّ جَاءَ اللَّهُ بِالْخَيْرِ وَلَبِسُوا غَيْرَ الصُّوفِ، وَكُفُوا الْعَمَلَ وَوُسِّعَ مَسْجِدُهُمْ، وَذَهَبَ بَعْضُ الَّذِي كَانَ يُؤْذِي بَعْضُهُمْ بَعْضًا مِنَ الْعَرَقِ


Abu-Dawood-352

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 130

ஜுமுஆ தொழுகையும் குளிப்பை விடுவதற்கு சலுகையும்.

352. மக்கள் கடுமையான உழைப்பில் ஈடுபட்டு விட்டு (வியர்வை நாற்றத்துடன்) அப்படியே ஜும்ஆவிற்கு வரும் வழக்கத்தில் இருந்தனர். அப்போது அவர்களை நோக்கி நீங்கள் குளித்து விட்டு (ஜும்ஆவிற்கு) வந்தால் நன்றாக இருக்குமே என்று போதிக்கப்பட்டது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(குறிப்பு : இது போன்ற ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.)


كَانَ النَّاسُ مُهَّانَ أَنْفُسِهِمْ، فَيَرُوحُونَ إِلَى الْجُمُعَةِ بِهَيْئَتِهِمْ، فَقِيلَ لَهُمْ: «لَوِ اغْتَسَلْتُمْ»


Abu-Dawood-351

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

351. யார் ஜும்ஆ நாளன்று கடமையான குளிப்பை போல் குளித்து விட்டு (முதல் நேரத்தில்) செல்கின்றாரோ அவர் ஒட்டகையை தர்மம் செய்தவர் போல் ஆவார். யார் இரண்டாம் நேரத்தில் செல்கின்றாரோ அவர் ஒரு மாட்டை தர்மம் செய்தவர் போல் ஆவார். யார் மூன்றாம் நேரத்தில் செல்கின்றாரோ அவர் ஓர் ஆட்டை தர்மம் செய்தவர் போல் ஆவார். யார் நான்காம் நேரத்தில் செல்கின்றாரோ அவர் ஒரு கோழியை தர்மம் செய்தவர் போல் ஆவார். யார் ஐந்தாம் நேரத்தில் செல்கின்றாரோ அவர் ஒரு முட்டை தர்மம் செய்தவர் போல் ஆவார். இமாம் (உரை நிகழ்த்த) வந்துவிடும் போது உரையை கேட்பதற்காக மலக்குகள் வந்து விடுகின்றனர். 

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.


«مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ، ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الْإِمَامُ حَضَرَتِ الْمَلَائِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ»


Abu-Dawood-350

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

350. தனது தலையையும் கழுவி உடலையும் கழுவினார் என்று கஸல வக்தஸலவுக்கு சயீத் என்பார் விளக்கம் அளிக்கிறார்.


فِي «غَسَّلَ وَاغْتَسَلَ». قَالَ: قَالَ سَعِيدٌ: «غَسَّلَ رَأْسَهُ وَغَسَلَ جَسَدَهُ»


Abu-Dawood-349

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

349. (ஹதீஸ் எண்: 345 ல் இடம் பெறும்) ஃகஸல வக்தஸல என்ற இந்த சொல்லைப் பற்றி மக்ஹூலிடம் கேட்டேன். தனது தலையையும் உடலையும் கழுவினார் (குளித்தார்) என்று பொருள் செய்தார். 

அறிவிப்பவர்: அலீ பின் ஹவ்ஷப்.


سَأَلْتُ مَكْحُولًا عَنْ هَذَا الْقَوْلِ «غَسَّلَ وَاغْتَسَلَ» فَقَالَ: «غَسَّلَ رَأْسَهُ وَغَسَلَ جَسَدَهُ»


Abu-Dawood-347

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

347. ஜும்ஆ நாளன்று ஒருவர் குளித்து தன் மனைவியிடத்தில் வாசனைத் திரவியம் இருக்குமானால், அத்திரவியத்தை பூசிக் கொள்கின்றார். தனது ஆடைகளில் நல்லதை அணிகின்றார். (பள்ளியில் நுழைந்ததும்) மக்களைத் தாண்டவும் இல்லை, சொற்பொழிவு நடக்கும் போது அச் சொற்பொழிவை வீணாக்கவும் இல்லை என்றால் (இந்த நற்செயல்கள்) இரண்டு ஜும்ஆக்களுக்கு இடையில் ஏற்பட்ட பாவங்களுக்கு பரிகாரம் ஆகின்றன. எவர் சொற்பொழிவை வீணடித்து, மக்களை தாண்டிச் சென்று விடுகின்றாரோ அவருக்கு (அந்த ஜும்ஆ) லுஹர் தொழுகையாக ஆகிவிடுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ர் பின் ஆஸ் (ரலி).


«مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَمَسَّ مِنْ طِيبِ امْرَأَتِهِ إِنْ كَانَ لَهَا، وَلَبِسَ مِنْ صَالِحِ ثِيَابِهِ، ثُمَّ لَمْ يَتَخَطَّ رِقَابَ النَّاسِ، وَلَمْ يَلْغُ عِنْدَ الْمَوْعِظَةِ كَانَتْ كَفَّارَةً لِمَا بَيْنَهُمَا، وَمَنْ لَغَا وَتَخَطَّى رِقَابَ النَّاسِ كَانَتْ لَهُ ظُهْرًا»


Next Page » « Previous Page