Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-367

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 134

பெண்களின் ஆடையை அணிந்து தொழலாமா ?

367. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாங்கள் எங்களுடைய உடலில் மூடிக் கொள்ளும் ஆடைகளில் தொழமாட்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸில் ஷுமர் அல்லது லுஹுப் என்று தனது தந்தை ஷகீக் அறிவிப்பதாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைத்துல்லாஹ் தெரிவிக்கின்றார். லுஹுப் என்றால் ஒரு ஆடைக்கு மேல் மூடப்படும் இன்னொரு ஆடை என்பதாகும்.

ஷுமர் என்றால் இன்னொரு ஆடையின்றி உடலை ஒட்டி மூடப்படும் ஆடையாகும் ஆக இரு வார்த்தைகளும் கிட்டதட்ட ஒரே பொருளையே தருகின்றன.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّ فِي شُعُرِنَا، أَوْ فِي لُحُفِنَا» قَالَ عُبَيْدُ اللَّهِ: شَكَّ أَبِي


Abu-Dawood-366

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 133

உடலுறவின் போது அணிந்திருந்த ஆடையுடன் தொழுவது.

366. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த ஆடையில் உடலுறவு கொள்கிறார்களோ அந்த ஆடையிலேயே தொழுவார்களா? என்று தனது சகோதரியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியுமான உம்மு ஹபீபா (ரலி) அன்ஹா அவர்களிடம் கேட்டார்கள். ஆம்! அதில் அசுத்தத்தை காணவில்லை என்றால் என்று பதில் சொன்னார்கள் என்று முஆவியா பின் ஹதைஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


أَنَّهُ سَأَلَ أُخْتَهُ أُمَّ حَبِيبَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّ فِي الثَّوْبِ الَّذِي يُجَامِعُهَا فِيهِ؟ فَقَالَتْ: «نَعَمْ إِذَا لَمْ يَرَ فِيهِ أَذًى»


Abu-Dawood-365

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

365. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஹவ்லத் பின்த் யஸார் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரே ஒரு ஆடை மட்டும் உள்ளது. அதை அணிந்திருக்கும் போதே மாதவிடாயும் ஏற்படுகின்றது. நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார். ‘நீங்கள் சுத்தமான பிறகு அதை கழுவி விட்டு அதிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்று அவர்கள் பதில் கூற, ‘இரத்தக்கரை போக வில்லையானால்?’ என்று கேட்டதற்கு, அவர்கள், ‘இரத்தக்கரையை கழுவதே போதுமானதாகும், அதன் கரை இருப்பதால் எந்த பிரட்சனையும் இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


أَنَّ خَوْلَةَ بِنْتَ يَسَارٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ لَيْسَ لِي إِلَّا ثَوْبٌ وَاحِدٌ وَأَنَا أَحِيضُ فِيهِ فَكَيْفَ أَصْنَعُ؟ قَالَ: «إِذَا طَهُرْتِ فَاغْسِلِيهِ، ثُمَّ صَلِّي فِيهِ». فَقَالَتْ: فَإِنْ لَمْ يَخْرُجِ الدَّمُ؟ قَالَ: «يَكْفِيكِ غَسْلُ الدَّمِ وَلَا يَضُرُّكِ أَثَرُه»


Abu-Dawood-364

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

364. எங்களில் ஒருத்திக்கு ஒரு சட்டை தான் இருக்கும். அதிலேயே அவர் மாதவிலக்காகி விடுவார். மேலும் அதிலேயே அவரை கடமையான குளிப்பும் அடைந்து கொள்ளும். பிறகு அதில் இரத்தத் துளியைத் கண்டு அதை தன் எச்சியாலேயே கசக்கி விட்டுக் கொள்வார் என்று அன்னை ஆயிஷா (ரலி) அன்ஹா கூறினார்கள்.

அறிவிப்பவர் : அதா (ரலி).


«قَدْ كَانَ يَكُونَ لِإِحْدَانَا الدِّرْعُ فِيهِ تَحِيضُ قَدْ تُصِيبُهَا الْجَنَابَةُ، ثُمَّ تَرَى فِيهِ قَطْرَةً مِنْ دَمٍ فَتَقْصَعُهُ بَرِيقِهَا»


Abu-Dawood-363

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

363. ஆடையில் பட்டுவிடும் மாதவிடாய் இரத்தத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, குச்சியை கொண்டு அதை தேய்த்து தண்ணீர் எலந்தை இலையைக் கொண்டு அதை கழுவுவாயகா! என்று சொன்னார்கள் என்று உம்மு கைஸ் பின்த் மிஹ்சன் (ரலி) அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாசரின் மகள் கவ்லா வந்து, 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! என்னிடம் ஒரு ஆடையை தவிர வேறில்லை. நான் அதிலேயே மாதவிலக்காகி விடுகின்றேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், நீ துப்புரவானதும் அதை கழுவி அதிலேயே தொழுது கொள்க! என்று சொன்னார்கள். அவர் (தண்ணீர் வைத்து கழுவிய பின்) இரத்தம் போகவில்லை என்றால் (என்ன செய்வது) என்று கேட்டதும், இரத்தத்தை கழுவியது உனக்கு போதுமானது. அதன் கரை உன்னை பாதிக்காது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார். 

(குறிப்பு : இந்த ஹதீஸ் பலவீனமாகும்)


سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ دَمِ الْحَيْضِ يَكُونُ فِي الثَّوْبِ قَالَ: «حُكِّيهِ بِضِلْعٍ، وَاغْسِلِيهِ بِمَاءٍ وَسِدْرٍ»


Abu-Dawood-361

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

361. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! எங்களில் ஒருத்தியின் ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகின்றீர்கள்? என்று ஒரு பெண் கேட்டபோது உங்களில் ஒருத்திக்கு மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால் அதை தேய்த்து, பிறகு தண்ணீர் கொண்டு தெளித்து பிறகு அந்த ஆடையிலேயே தொழுது கொள்வீராக! என்று பதில் சொன்னார்கள் என்று அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


سَأَلَتِ امْرَأَةٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ إِحْدَانَا إِذَا أَصَابَ ثَوْبَهَا الدَّمُ مِنَ الْحَيْضَةِ كَيْفَ تَصْنَعُ؟ قَالَ: «إِذَا أَصَابَ إِحْدَاكُنَّ الدَّمُ مِنَ الْحَيْضِ فَلْتَقْرُصْهُ، ثُمَّ لِتَنْضَحْهُ بِالْمَاءِ، ثُمَّ لِتُصَلِّ»


Abu-Dawood-360

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

360. துப்புரவை அடைந்ததும் எங்களில் ஒருத்தி தனது ஆடையை என்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் கேட்க நான் செவிமடுத்தேன். அதற்கு அவர்கள் தனது ஆடையை அவர் பார்ப்பாராக! அதில் இரத்தத்தை கண்டால் கொஞ்சம் தண்ணீரை கொண்டு கசக்கி விடுவாராக! இரத்தத்தை காணாத பகுதியில் தண்ணீரை தெளித்து அதிலேயே அவர் தொழுது கொள்வாராக! என்று பதில் சொன்னார்கள் என்று அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்.


سَمِعْتُ امْرَأَةً تَسْأَلُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ تَصْنَعُ إِحْدَانَا بِثَوْبِهَا إِذَا رَأَتِ الطُّهْرَ أَتُصَلِّي فِيهِ؟ قَالَ: «تَنْظُرُ فَإِنْ رَأَتْ فِيهِ دَمًا فَلْتَقْرُصْهُ بِشَيْءٍ مِنْ مَاءٍ، وَلْتَنْضَحْ مَا لَمْ تَرَ وَلْتُصَلِّ فِيهِ»


Abu-Dawood-359

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

359. நான் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது மாதவிலக்கின் போது அணிந்திருக்கும் ஆடையில் தொழுவது பற்றி ஒரு குரைஷிப் பெண் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு உம்முஸலமா (ரலி) அவர்கள் பதில் சொன்னார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விடும். அப்போது எங்களில் ஒருவர், தனது மாதவிலக்கான காலத்தில் (தொழாமல்) இருப்பார். பிறகு துப்புறவானதும் எந்த ஆடை அணிந்திருக்கும்போது மாதவிலக்கு ஏற்பட்டதோ அந்த ஆடையை பார்ப்பார். அதில் இரத்தம் பட்டிருந்தால் அதை கழுவி, அந்த ஆடையை அணிந்து கொண்டே தொழுது விடுவார். அதில் எதுவும் படவில்லை என்றால் (கழுவாது) அதை அப்படியே விட்டு விடுவோம். இது தொழுவதை விட்டும் எங்களை தடுத்து விடாது. 

பின்னி போட்ட பெண்ணை பொருத்தவரை எங்களில் ஒருவர் சடை போட்டு பின்னியிருப்பார். அவர் குளிக்கும் போது அதை அவிழ்த்து விடுவதில்லை. எனினும், தனது தலையை மூன்று முறை தனது இரு சிங்கைகளால் தண்ணீர் அள்ளி விடுவார். முடியில் அடிக்காம்புகளில் ஈரப்பதத்தை கண்டவுடன் நன்கு அதை தேய்த்து விடுவார். பிறகு தனது உடல்

دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ فَسَأَلَتْهَا امْرَأَةٌ مِنْ قُرَيْشٍ عَنِ الصَّلَاةِ فِي ثَوْبِ الْحَائِضِ، فَقَالَتْ أُمُّ سَلَمَةَ: «قَدْ كَانَ يُصِيبُنَا الْحَيْضُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَلْبَثُ إِحْدَانَا أَيَّامَ حَيْضِهَا ثُمَّ تَطَّهَّرُ، فَتَنْظُرُ الثَّوْبَ الَّذِي كَانَتْ تَقْلِبُ فِيهِ، فَإِنْ أَصَابَهُ دَمٌ غَسَلْنَاهُ وَصَلَّيْنَا فِيهِ، وَإِنْ لَمْ يَكُنْ أَصَابَهُ شَيْءٌ تَرَكْنَاهُ وَلَمْ يَمْنَعْنَا ذَلِكَ مِنْ أَنْ نُصَلِّيَ فِيهِ، وَأَمَّا الْمُمْتَشِطَةُ فَكَانَتْ إِحْدَانَا تَكُونُ مُمْتَشِطَةً فَإِذَا اغْتَسَلَتْ لَمْ تَنْقُضْ ذَلِكَ، وَلَكِنَّهَا تَحْفِنُ عَلَى رَأْسِهَا ثَلَاثَ حَفَنَاتٍ، فَإِذَا رَأَتِ الْبَلَلَ فِي أُصُولِ الشَّعْرِ دَلَكَتْهُ، ثُمَّ أَفَاضَتْ عَلَى سَائِرِ جَسَدِهَا»


Abu-Dawood-358

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

358. எங்களிடம் ஒரே ஒரு ஆடையை தவிர வேறு எதுவும் இருக்காது. அதில் மாத விலக்காகி விடு. இரத்தத்திலிருந்து ஏதேனும் கொஞ்சம் பட்டு விட்டால் தனது எச்சியால் அதை ஈரமாக்கி அந்த எச்சிலேயே அதை அழுத்தமாக தேய்த்து விடு.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).


«مَا كَانَ لِإِحْدَانَا إِلَّا ثَوْبٌ وَاحِدٌ تَحِيضُ فِيهِ، فَإِنْ أَصَابَهُ شَيْءٌ مِنْ دَمٍ بَلَّتْهُ بِرِيقِهَا، ثُمَّ قَصَعَتْهُ بِرِيقِهَا»


Next Page » « Previous Page