Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-240

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

240. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றுவதாக இருந்தால் ஹிலாபை கொண்டு வரச் செய்வார்கள். பிறகு தன் கைகளால் அள்ளி தனது தலை (முழுவதும்)யில் ஊற்றுவார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி)

ஹலாப் ஒரு நட்டகாகயில் சுரக்கும் பாலை கொள்கின்ற பாத்திரமாகும்.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ دَعَا بِشَيْءٍ مِنْ نَحْوِ الْحِلَابِ، فَأَخَذَ بِكَفَّيْهِ فَبَدَأَ بِشِقِّ رَأْسِهِ الْأَيْمَنِ، ثُمَّ الْأَيْسَرِ، ثُمَّ أَخَذَ بِكَفَّيْهِ، فَقَالَ بِهِمَا عَلَى رَأْسِهِ»


Abu-Dawood-239

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 98

கடமையான குளிப்பை நிறைவேற்றும் முறை.

239. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் கடமையான குளிப்பு பற்றி பேசி கொண்டிருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நான் எனது தலையில் மூன்று தடவை (நீரை) ஊற்றுவேன் என்று கூறி மேலும் தனது இரு கைகளில் எப்படி ஊற்றுவது என்று சைகை செய்து காட்டினார்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம் (ரலி).


أَنَّهُمْ ذَكَرُوا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْغُسْلَ مِنَ الجَنَابَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا أَنَا فَأُفِيضُ عَلَى رَأْسِي ثَلَاثًا». وَأَشَارَ بِيَدَيْهِ كِلْتَيْهِمَا


Abu-Dawood-238

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 97

குளிப்பதற்கு போதுமான தண்ணீர் அளவு.

238. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை ஒரு பரக அளவு பாத்திரத்தில் நிறைவேற்றுவார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி)

இமாம் அபூதாவூத் அவர்கள் குளிப்பிடுகின்றார்கள் :

ஒரு பர்க அளவு (நீர்) கொள்ளும் ஒரே பாத்திரத்தில் நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் குளிப்போம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்று இந்த ஹதீஸில் ஜுஹ்ரி வாயிலாக மஃமர் அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் :

மாலிக் அவர்களின் (முதலிலுள்ள) ஹதீஸை போன்று இப்னு உஐனா அவர்களும் அறிவிக்கின்றார்.

மேலும் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.

பரக் என்பது 16 ராத்தல்களாகும்.

குறிப்பு: வழக்கொழிந்து விட்ட இந்த ராத்தல் முறையை வைத்து நாம் பரக் என்பதற்கு

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَغْتَسِلُ مِنْ إِنَاءٍ وَاحِدٍ – هُوَ الْفَرَقُ – مِنَ الجَنَابَةِ»


Abu-Dawood-237

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 96

ஆண்களைப் போன்று பெண்களும் ஈரத்தைக் கண்டால் ?

237. ஆசியா உம்முஹுலைம் அனஸ் பின் மாலிக் அவர்களின் தாயார் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே ! உண்மையை கூற அல்லாஹ் வெட்கமடைய மாட்டான். ஒரு பெண் தூக்கத்தில் ஆண் காண்பதையே கண்டால் அவள் குளிக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று வினவியபோது, ஆம்! அவள் நீரைக் கண்டால் குளிக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறி அன்னையார் அவர்கள் தொடர்ந்து அறிவிக்கிறார்கள், நான் அவர்களை (உம்முஹுலைம்) நோக்கி சீ! ஒரு பெண்ணும் இதை காண்பாளா? என்று கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை நோக்கி, ஆயிஷாவே! உனது வலக்கரம் மண்ணை தழுவட்டும் பின் எவ்வாறு (தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே உருவ) ஒற்றுமை தோன்றுகிறது? என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி)

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

ஜுஹ்ரி அவர்களிடமிருந்து மாலிக் அவர்கள் மூலம் ஜுபைதி, உகைல், யூனுஸ், ஜுஹ்ரி அவர்களுடைய சகோதரன் மகனும், ஜுஹ்ரி

أَنَّ أُمَّ سُلَيْمٍ الْأَنْصَارِيَّةَ هِيَ أُمُّ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ أَرَأَيْتَ الْمَرْأَةَ إِذَا رَأَتْ فِي النَّوْمِ مَا يَرَى الرَّجُلُ أَتَغْتَسِلُ أَمْ لَا؟ قَالَتْ عَائِشَةُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ. فَلْتَغْتَسِلْ إِذَا وَجَدَتِ الْمَاءَ». قَالَتْ عَائِشَةُ: فَأَقْبَلْتُ عَلَيْهَا، فَقُلْتُ: أُفٍّ لَكِ وَهَلْ تَرَى ذَلِكَ الْمَرْأَةُ؟ فَأَقْبَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «تَرِبَتْ يَمِينُكِ يَا عَائِشَةُ، وَمِنْ أَيْنَ يَكُونُ الشَّبَهُ؟»


Abu-Dawood-236

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 95

இரவில் தூங்கி எழுந்து ஆடையில் ஈரத்தை காணுதல்.

236. ஆனால் ஆடையில் ஈரத்தைக் காண்கிறார். (ஒரு மனிதர் ஒரு மாதிரியான கனவு கண்டு விந்து வெளிப்பட்டதாக அவருக்கு நினைவு இல்லை.) (அவர் குளிக்க வேண்டுமா?) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது, அவர் குளிக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ஒருவர் (ஒரு மாதிரியான) கனவு கண்டதாக நினைவு கொள்கிறார். ஆனால் அவர் ஈரத்தை காணவில்லை என்றால் (அவர் குளிக்க வேண்டுமா?) என்று வினவப்பட்டபோது அவர், குளிக்க வேண்டியதில்லை என்று பதிலளித்தார்கள். அப்போது உம்மு ஸுலைம் (ரலி) அன்ஹா அவர்கள் ஒரு பெண் இதை (ஈரத்தை) காண்கிறாள் என்றால் அவள் மீது குளிப்பு கடமையாகுமா? என்று கேட்போது ஆம் பெண்கள் ஆண்களை (இது விஷயத்தில்) ஒத்தவர்கள் தான் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ يَجِدُ الْبَلَلَ وَلَا يَذْكُرُ احْتِلَامًا. قَالَ: «يَغْتَسِلُ»، وَعَنِ الرَّجُلِ يَرَى أَنَّهُ قَدْ احْتَلَمَ وَلَا يَجِدُ الْبَلَلَ. قَالَ: «لَا غُسْلَ عَلَيْهِ» فَقَالَتْ: أُمُّ سُلَيْمٍ الْمَرْأَةُ تَرَى ذَلِكَ أَعَلَيْهَا غُسْلٌ؟ قَالَ: «نَعَمْ. إِنَّمَا النِّسَاءُ شَقَائِقُ الرِّجَالِ»


Abu-Dawood-235

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

235. இகாமத் சொல்லப்பட்டு மக்கள் அணியில் நின்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இல்லத்திலிருந்து) வெளி வந்து தனது இடத்தில் வந்து நின்றதும் தான் குளிக்கவில்லை என்று அவர்களுக்கு ஞாபகம் வந்தது. உடனே மக்களை நோக்கி உங்களுடைய இடத்தில் இருந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். பிறகு தனது வீட்டிற்கு திரும்பி சென்று குளித்து விட்டு தனது தலையிலிருந்து நீர் சொட்டியவாறு அணியில் நின்று சொண்டிருந்த எங்களிடம் வந்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

இதன் அறிவிப்பாளரான இப்னு ஹர்ப் என்பாரின் உரை நடையாகும். அய்யாஷ் என்பார் தனது அறிவிப்பில் அவர்கள் குளித்து விட்டு எங்களிடம் வருகின்ற வரை நாங்கள் அவர்களை நின்றவாறே எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என்று கூறுகிறார்.


أُقِيمَتِ الصَّلَاةُ، وَصَفَّ النَّاسُ صُفُوفَهُمْ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا قَامَ فِي مَقَامِهِ ذَكَرَ أَنَّهُ لَمْ يَغْتَسِلْ فَقَالَ لِلنَّاسِ: «مَكَانَكُمْ»، ثُمَّ رَجَعَ إِلَى بَيْتِهِ، فَخَرَجَ عَلَيْنَا يَنْطُفُ رَأْسُهُ، وَقَدِ اغْتَسَلَ وَنَحْنُ صُفُوفٌ وَهَذَا لَفْظُ ابْنُ حَرْبٍ، وَقَالَ عَيَّاشٌ فِي حَدِيثِهِ «فَلَمْ نَزَلْ قِيَامًا نَنْتَظِرُهُ حَتَّى خَرَجَ عَلَيْنَا وَقَدِ اغْتَسَلَ»


Abu-Dawood-234

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

234. இந்த ஹதீஸ் மேலுள்ள அதே இஸ்நாத் பொருளைக் கொண்டே இடம் பெறுகிறது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யசீத் பின் ஹாரூன். இந்த ஹதீஸின் ஆரம்பத்தில் (நுழைந்தார்கள்) என்பதை அடுத்து தக்பீர் கூறினார்கள் என்றும், அதன் கடைசியில் அவர்கள் தொழுகையை முடித்த போது நானும் மனிதன் தான். நான் குளிப்புக் கடமையாக இருந்தேன் என்று சொன்னார்கள் என்றும் அறிவிக்கின்றார்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபூஸலமா வாயிலாக ஜுஹ்ரி அவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது அவர்கள் தான் தொழுமிடத்தில் நின்று அவர்கள் தக்பீர் சொல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது அவர்கள் (தொழுகையை விட்டும்) திரும்பி விட்டார்கள். பிறகு அப்படியே இருங்கள் என்று சொன்னார்கள் என்று குறிப்பிடுகின்றார். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். பிறகு கையினால் மக்களுக்கு உட்காருங்கள் என்று சைகை செய்து விட்டு, சென்று குளித்தார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை முர்ஸலாக முஹம்மத் அவர்கள் வாயிலாக அயூப், இப்னு அவ்ன், ஹிஷாம் ஆகியோர் அறிவிக்கின்றார்கள். 

இதே போன்று

وَقَالَ: فِي أَوَّلِهِ: «فَكَبَّرَ». وَقَالَ فِي آخِرِهِ: ” فَلَمَّا قَضَى الصَّلَاةَ قَالَ: «إِنَّمَا أَنَا بَشَرٌ، وَإِنِّي كُنْتُ جُنُبًا».


Abu-Dawood-233

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 94

குளிப்புக் கடமையானவர் மறதியாக மக்களுக்கு தொழுகை நடத்துதல்.

233. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பஜ்ர் தொழுகையில் நுழைந்தார்கள். அப்போது நீங்கள் உங்களுடைய இடங்களில் இருந்து கொள்ளுங்கள் என்று சைகை செய்தார்கள். பிறகு தனது தலையிலிருந்து நீர் சொட்டியவாறு வந்து அவர்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி).


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «دَخَلَ فِي صَلَاةِ الْفَجْرِ، فَأَوْمَأَ بِيَدِهِ أَنْ مَكَانَكُمْ، ثُمَّ جَاءَ وَرَأْسُهُ يَقْطُرُ فَصَلَّى بِهِمْ»


Abu-Dawood-232

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 93

குளிப்புக் கடமையானவர் பள்ளியில் பிரவேசிக்கத் தடை.

232. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களின் வீட்டு வாயில்கள் (பள்ளிக்குள் வந்து போக வசதியாக பள்ளியை முன்னோக்கியவாறு) பள்ளியோடு இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இந்த (வீட்டு) வாயில்களை பள்ளியை விட்டும் (வேறு திசையை) நோக்கி மாற்றி அமையுங்கள் என்று கட்டளையிட்டார்கள். பிறகு நபி (ஸல்) (வீட்டுக்குள் அல்லது பள்ளிக்குள்) நுழைந்து விட்டனர். தங்களுக்கு (இந்த உத்தரவில்) சலுகைக் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து அவர்கள்எதையுமே செய்யாதிருந்தனர். இதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த வீட்டு வாயில் பள்ளியை விட்டும் (வேறு திசையை நோக்கி) மாற்றி அமையுங்கள். ஏனெனில் பள்ளியை மாதவிடாய் ஆனவளுக்கும், குளிப்பு கடமையானவளுக்கும் (நுழைவதற்கு) நான் அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

இமாம் அபூதாவூத் என்பவர் குறிப்பிடுகிறார்கள் :

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்லத் என்பவர் புலைத் அல்ஆமிரி ஆவார்.


جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوُجُوهُ بُيُوتِ أَصْحَابِهِ شَارِعَةٌ فِي الْمَسْجِدِ، فَقَالَ: «وَجِّهُوا هَذِهِ الْبُيُوتَ عَنِ الْمَسْجِدِ». ثُمَّ دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَصْنَعِ الْقَوْمُ شَيْئًا رَجَاءَ أَنْ تَنْزِلَ فِيهِمْ رُخْصَةٌ، فَخَرَجَ إِلَيْهِمْ بَعْدُ فَقَالَ: «وَجِّهُوا هَذِهِ الْبُيُوتَ عَنِ الْمَسْجِدِ، فَإِنِّي لَا أُحِلُّ الْمَسْجِدَ لِحَائِضٍ وَلَا جُنُبٍ» قَالَ أَبُو دَاوُدَ: هُوَ فُلَيْتٌ الْعَامِرِيُّ


Abu-Dawood-231

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

231. நான் குளிப்புக் கடமையாகி இருக்கும் போது மதீனாவின் ஒரு பாதையின் ஒன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை சந்தித்தார்கள். எனவே நான் நழுவி சென்று விட்டேன். குளித்து விட்டு பிறகு வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீ எங்கு சென்றாய் என்று வினவியபோது நான் குளிப்புக் கடமையாகி இருந்தேன். அதனால் சுத்தமில்லாமல் உங்களுடன் கலந்து உட்கார விரும்பவில்லை என்று பதில் சென்னேன். அவர்கள் அல்லாஹ் தூய்மையானவன்! ஒரு முஸ்லிம் அசுத்தமாக மாட்டார் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

பக்ரிடமிருந்து ஹுமைதிடமிருந்து என்பதற்கு பதிலாக எனக்கு பக்ரிடமிருந்து ஹுமைதிடமிருந்து என்பதற்கு பதிலாக எனக்கு பக்ர் அறிவித்தார் என்று பிஷ்ர் அவர்கள் குறிப்பிடுவதாக பிஷ்ர் அவர்களுடைய ஹதீஸில் உள்ளது (பிஷ்ர் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராவார்.)


لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَرِيقٍ مِنْ طُرُقِ الْمَدِينَةِ وَأَنَا جُنُبٌ، فَاخْتَنَسْتُ فَذَهَبْتُ فَاغْتَسَلْتُ، ثُمَّ جِئْتُ فَقَالَ: «أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ؟» قَالَ: قُلْتُ: إِنِّي كُنْتُ جُنُبًا فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ عَلَى غَيْرِ طَهَارَةٍ. فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ، إِنَّ الْمُسْلِمَ لَا يَنْجُسُ» وَقَالَ فِي حَدِيثِ بِشْرٍ، حَدَّثَنَا حُمَيْدٌ، حَدَّثَنِي بَكْرٌ


Next Page » « Previous Page