Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-3199

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

3199. இறந்தவருக்கு நீங்கள் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ»


Abu-Dawood-3202

ஹதீஸின் தரம்: More Info

3202. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவை ஒரு முஸ்லிமான மனிதருக்காக எங்களுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தும் போது அவர்கள் பின்வரும் துஆவை கூறியதை செவியேற்றேன்.

அல்லாஹும்ம இன்ன ஃபுலானப்ன ஃபுலானின் ஃபீ திம்மதி(க்)க. வஹப்லி ஜிவாரி(க்)க ஃப(க்)கிஹி மின் ஃபித்ன(த்)தில் கப்ரி வஅதாபின்னாரி. வஅன்(த்)த அஹ்லுல் வஃபாயி வல்ஹம்தி. அல்லாஹும்ம ஃபக்ஃபிர்லஹு வர்ஹம்ஹு இன்ன(க்)க அன்(த்)தல் கஃபூருர் ரஹீம்.

பொருள்: இறைவா! இன்னாரின் மகனான இவர் உனது பொறுப்பில் இருக்கிறார். கப்ரின் வேதனையை விட்டு இவரைப் பாதுகாப்பாயாக! நரகின் வேதனையை விட்டும் காப்பாயாக! நீயே வாக்குறுதிகளை நிறைவேற்றுபவன். புகழுக்குரியவன். இறைவா! இவரை மன்னித்து அருள் புரிவாயாக! நீயே மன்னிப்பவன். அருள் புரிபவன்.

அறிவிப்பவர் : வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)


صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ، فَسَمِعْتُهُ يَقُولُ: ” اللَّهُمَّ إِنَّ فُلَانَ بْنَ فُلَانٍ فِي ذِمَّتِكَ، فَقِهِ فِتْنَةَ الْقَبْرِ – قَالَ عَبْدُ الرَّحْمَنِ: مِنْ ذِمَّتِكَ وَحَبْلِ جِوَارِكَ، فَقِهِ مِنْ فِتْنَةِ الْقَبْرِ – وَعَذَابِ النَّارِ، وَأَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَمْدِ، اللَّهُمَّ فَاغْفِرْ لَهُ وَارْحَمْهُ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ “،

قَالَ عَبْدُ الرَّحْمَنِ: عَنْ مَرْوَانَ بْنِ جَنَاحٍ

 


Abu-Dawood-3201

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3201. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். அதில் பின்வரும் துஆவை ஓதினார்கள்.

“அல்லாஹும் மஃக்ஃபிர் லி ஹய்யினா, வ மய்யி(த்)தினா, வ ஸஃகீரினா, வ கபீரினா, வ தகரினா, வ உன்ஸானா, வ ஷாஹிதினா, வ ஃகாயிபினா. அல்லாஹும்ம மன் அஹ்யை(த்)தஹூ மின்னா ஃப அஹ்யிஹீ அலல் ஈமான். வமன் தவஃப்பை(த்)தஹூ மின்னா ஃப தவஃப்பஹு அலல் இஸ்லாம். அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹூ, வலா துழில்லனா பஃதஹ்”.

(பொருள்: இறைவா! எங்களில் உயிருடனிருப்பவர்களையும், மரணித்தவர்களையும், சிறுவர்களையும், பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், பெண்களையும் இங்கே வந்திருப்போரையும், வராதவர்களையும் மன்னித்து விடுவாயாக! இறைவா எங்களில் உயிரோடு இருப்பவர்களை ஈமானுடன் வாழச் செய்வாயாக! எங்களில் இறந்தவர்களை இஸ்லாமிய அடிப்படையில் இறக்கச் செய்வாயாக! இறைவா! இந்த மய்யித்தின் கூலியைத் தடுத்து விடாதே! இவருக்குப் பிறகு எங்களை வழி தவறச் செய்து விடாதே!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَنَازَةٍ، فَقَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا، وَمَيِّتِنَا، وَصَغِيرِنَا، وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِيمَانِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِسْلَامِ، اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تُضِلَّنَا بَعْدَهُ»


Abu-Dawood-3198

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3198. நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின்னால் நின்று ஜனாஸாத் தொழுதேன். அப்போது அவர்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். பிறகு ‘இது நபிவழி என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)


صَلَّيْتُ مَعَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ، فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ، فَقَالَ: «إِنَّهَا مِنَ السُّنَّةِ»


Abu-Dawood-3183

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3183. ஹதிஸ் எண்-3182 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

இதில் அபூபக்ரா (ரலி) அவர்கள், மக்கள் மீது கோவேறுக் கழுதையை ஏவினார்கள். அவர்களை நோக்கிச் சாட்டையால் சொடுக்கினார்கள் என்று இடம் பெற்றுள்ளது.


فِي جَنَازَةِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ، وَقَالَ: فَحَمَلَ عَلَيْهِمْ بَغْلَتَهُ وَأَهْوَى بِالسَّوْطِ


Abu-Dawood-3181

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

பிரேதத்தை விரைவாக கொண்டு செல்வது.

3181. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜனாஸாவை (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.’

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«أَسْرِعُوا بِالْجَنَازَةِ فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُونَهَا إِلَيْهِ، وَإِنْ تَكُ سِوَى ذَلِكَ فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ»


Abu-Dawood-3182

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3182. அப்துர்ரஹ்மான் பின் ஜவ்ஷன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரஹ்) அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொண்டோம். நாங்கள் மெதுவாக நடந்து சென்றுக்கொண்டிருந்தோம். அப்போது (இடையில்) அபூபக்ரா (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் சேர்ந்தார்கள்.

அவர்கள், (மக்களை நோக்கிச்) சாட்டையை உயர்த்தி, “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஜனாஸாவை பின்தொடந்து செல்லும்) போது ஓட்டமாக ஓடும் அளவுக்கு விரைந்து சென்றதை பார்த்திருக்கின்றோம்” என்று கூறினார்கள்.


أَنَّهُ كَانَ فِي جَنَازَةِ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ وَكُنَّا نَمْشِي مَشْيًا خَفِيفًا، فَلَحِقَنَا أَبُو بَكْرَةَ فَرَفَعَ سَوْطَهُ، فَقَالَ: «لَقَدْ رَأَيْتُنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَرْمُلُ رَمَلًا»


Abu-Dawood-3177

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் :

வாகனத்தில் ஜனாஸாவைப் பின்தொடர்தல்.

3177. நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவில் இருந்த போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏற மறுத்தார்கள். (அடக்கம் செய்து) திரும்பிய போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏறிக் கொண்டார்கள்.

அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘வானவர்கள் நடந்து வந்தனர். அவர்கள் நடக்கும் போது நான் வாகனத்தில் ஏறவில்லை. அவர்கள் சென்றதும் நான் வாகனத்தில் ஏறிக் கொண்டேன்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أُتِيَ بِدَابَّةٍ وَهُوَ مَعَ الْجَنَازَةِ فَأَبَى أَنْ يَرْكَبَهَا، فَلَمَّا انْصَرَفَ أُتِيَ بِدَابَّةٍ فَرَكِبَ، فَقِيلَ لَهُ، فَقَالَ: «إِنَّ الْمَلَائِكَةَ كَانَتْ تَمْشِي، فَلَمْ أَكُنْ لِأَرْكَبَ وَهُمْ يَمْشُونَ، فَلَمَّا ذَهَبُوا رَكِبْتُ»


Abu-Dawood-3180

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3180. வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் ஜனாஸாவின் பின்னால் அல்லது முன்னால் அல்லது வலது, இடதுபுறமாக அருகில் (விரும்பியவாறு) செல்லலாம்.

விழு கட்டிகளுக்கும் தொழுகை நடத்தப்பட்டு, அதன் பெற்றோர்களின் பாவமன்னிப்புக்காகவும், அல்லாஹ்வின் அருளுக்காகவும் துஆச் செய்ய வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)


«الرَّاكِبُ يَسِيرُ خَلْفَ الْجَنَازَةِ، وَالْمَاشِي يَمْشِي خَلْفَهَا، وَأَمَامَهَا، وَعَنْ يَمِينِهَا، وَعَنْ يَسَارِهَا قَرِيبًا مِنْهَا، وَالسِّقْطُ يُصَلَّى عَلَيْهِ، وَيُدْعَى لِوَالِدَيْهِ بِالْمَغْفِرَةِ وَالرَّحْمَةِ»


Abu-Dawood-3159

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3159. தல்ஹா பின் அல்பரா (ரலி) அவர்கள் நோயுற்றார்கள். அவரை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். ‘இவருக்கு மரணம் வந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன். இவர் மரணித்தவுடன் எனக்குச் சொல்லி அனுப்புங்கள். ஏனெனில் எந்த ஒரு முஸ்லிமின் உடலும் (வீட்டில்) வைத்திருக்கக் கூடாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹுஸைன் பின் வஹ்வஹ்


أَنَّ طَلْحَةَ بْنَ الْبَرَاءِ، مَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ، فَقَالَ: «إِنِّي لَا أَرَى طَلْحَةَ إِلَّا قَدْ حَدَثَ فِيهِ الْمَوْتُ فَآذِنُونِي بِهِ وَعَجِّلُوا فَإِنَّهُ، لَا يَنْبَغِي لِجِيفَةِ مُسْلِمٍ أَنْ تُحْبَسَ بَيْنَ ظَهْرَانَيْ أَهْلِهِ»


Next Page » « Previous Page