Category: புஹாரி

Bukhari

Bukhari-6386

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 53 மணமகனுக்காகப் பிரார்த்திப்பது

6386. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களின் (ஆடை) மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளத்தை நபி(ஸல்) அவர்கள் கண்டபோது ‘விஷயம் என்ன?’ அல்லது ‘என்ன(இது)?’ என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள், ஒரு பேரீச்சங்கொட்டை எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன்’ என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘பாரகல்லாஹு லக்க’ (அல்லாஹ் உங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவானாக!) என்று பிரார்த்தித்துவிட்டு, ‘ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா-மணவிருந்து அளியுங்கள்’ என்று கூறினார்கள்.

Book : 80


رَأَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ، فَقَالَ: «مَهْيَمْ، أَوْ مَهْ» قَالَ: قَالَ: تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ، فَقَالَ: «بَارَكَ اللَّهُ لَكَ، أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»


Bukhari-6385

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 51 பள்ளத்தாக்கில் இறங்கும் போது ஓதும் பிரார்த்தனை. இது குறித்து ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ் வந்துள்ளது.64 பாடம் : 52 பயணம் புறப்பட விரும்பும் போது, அல்லது பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் பிரார்த்தனை. இது குறித்து அனஸ் (ரலி) அவர் களிடமிருந்து யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.65

6385. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் புனிதப் போரிலிருந்து, அல்லது ஹஜ்ஜிலிருந்து, அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது ஒவ்வொரு மேடான பகுதியில் ஏறும்போதெல்லாம் மூன்று முறை ‘அல்லாஹுஅக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்வார்கள். பிறகு (பின்வருமாறு) கூறுவார்கள். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல்முல்க்கு வலஹுல் ஹம்து வஹ்வ அலா குல்லி ஷைஇன் கதீர். ஆயிபூன தாயிபூன ஆபிதூன லிரப்பினா ஹாமிதூன, ஸதக்கல்லாஹு வஅதஹு வ நஸர அப்தஹு வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ். (பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும்

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَفَلَ مِنْ غَزْوٍ أَوْ حَجٍّ أَوْ عُمْرَةٍ يُكَبِّرُ عَلَى كُلِّ شَرَفٍ مِنَ الأَرْضِ ثَلاَثَ تَكْبِيرَاتٍ، ثُمَّ يَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ. صَدَقَ اللَّهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ»


Bukhari-6384

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 50

கணவாயில் ஏறும் போது ஓதும் பிரார்த்தனை

6384. அபூமூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (கைபர்) பயணத்தில் இருந்தோம். நாங்கள் மேடான பகுதியில் ஏறும்போது ‘அல்லாஹுஅக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று (சப்தமிட்டுக்) கூறலானோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘மக்களே! உங்களைக் கட்டுப் படுத்திக் கொள்ளுங்கள் (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்!) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. மாறாக, செவியுறுவோனையும் பார்ப்பவனையுமே அழைக்கின்றீர்கள்’ என்றார்கள். பிறகு என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் (மனதுக்குள்) ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ (நல்லறங்கள்) புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்று கூறிக்கொண்டிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு கைஸே! லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ என்று சொல்வீராக! ‘ஏனெனில், அது சொர்க்கத்தின்

كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَكُنَّا إِذَا عَلَوْنَا كَبَّرْنَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّهَا النَّاسُ ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ، فَإِنَّكُمْ لاَ تَدْعُونَ أَصَمَّ وَلاَ غَائِبًا، وَلَكِنْ تَدْعُونَ سَمِيعًا بَصِيرًا» ثُمَّ أَتَى عَلَيَّ وَأَنَا أَقُولُ فِي نَفْسِي: لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَقَالَ: ” يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ، قُلْ: لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَإِنَّهَا كَنْزٌ مِنْ كُنُوزِ الجَنَّةِ ” أَوْ قَالَ: «أَلاَ أَدُلُّكَ عَلَى كَلِمَةٍ هِيَ كَنْزٌ مِنْ كُنُوزِ الجَنَّةِ؟ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ»


Bukhari-6383

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 49 அங்கசுத்தி (உளூ) செய்துவிட்டு ளதம் தோழருக்காக நபி (ஸல்) அவர்கள்ன பிரார்த்தித்தது.

6383. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். பிறகு தம் இரண்டு கரங்களையும் உயர்த்தி, ‘இறைவா! அபூ ஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பளிப்பாயாக! மறுமை நாளில் மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரை ஆக்கிடுவாயாக’ என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் பார்த்தேன்

கணவாயில் ஏறும்போது ஓதும் பிரார்த்தனை

Book : 80


دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَاءٍ فَتَوَضَّأَ بِهِ، ثُمَّ رَفَعَ يَدَيْهِ فَقَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِعُبَيْدٍ أَبِي عَامِرٍ» وَرَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ، فَقَالَ: «اللَّهُمَّ اجْعَلْهُ يَوْمَ القِيَامَةِ فَوْقَ كَثِيرٍ مِنْ خَلْقِكَ مِنَ النَّاسِ»


Bukhari-6382

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 48

(இரண்டில்) நல்லதைத் தேர்ந்தெடுக்க ஓதும் பிரார்த்தனை

6382. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை, (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத்தருவதைப் போன்று கற்றுத்தருபவர்களாய் இருந்தார்கள்.

(அந்த முறையாவது:) நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்ளுங்கள்.

பிறகு அல்லாஹ்விடம், “அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக்க பி இல்மிக்க, வ அஸ்தக்திருக்க பி குத்ரத்திக்க, வ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்கல் அழீம். ஃபஇன்னக்க தக்திரு வலா அக்திரு, வதஅலமு வலா அஉலமு. வஅன்த்த அல்லாமுல் ஃகுயூப். அல்லாஹும்ம இன் குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ ‘ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆகிபத்தி அம்ரீ’ / ‘ஃபீ ஆஜிலி அம்ரீ வ ஆஜிலிஹி’ / ஃபக்துர்ஹு லீ.

வ இன் குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ ‘ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆக்கிபத்தி அம்ரீ’ / ‘ஃபீ ஆஜிலி அம்ரீ, வ ஆஜிலிஹி’ / ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ, வஸ்ரிஃப்னீ அன்ஹு, வக்துர் லியல் கைர ஹைஸு கான, ஸும்ம ரள்ளினீ பிஹி” என்று பிரார்த்தித்து, “உங்கள் தேவை இன்னதெனக் குறிப்பிடுங்கள்” என்று கூறினார்கள்.

(பொருள்: இறைவா! நீ அறிந்துள்ளபடி

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الأُمُورِ كُلِّهَا، كَالسُّورَةِ مِنَ القُرْآنِ: ” إِذَا هَمَّ بِالأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ ثُمَّ يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ العَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ، وَأَنْتَ عَلَّامُ الغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي – أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاقْدُرْهُ لِي، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي – أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ رَضِّنِي بِهِ، وَيُسَمِّي حَاجَتَهُ


Bukhari-6380 & 6381

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

வளத்துடன் குழந்தைகள் பெருகிடப் பிரார்த்திப்பது

6380. & 6381. அனஸ்(ரலி) அறிவித்தார்.

(என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘அனஸ் தங்களின் சேவகர், (அவருக்காகப் பிரார்த்தியுங்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கிடுவாயாக! அவருக்கு நீ வழங்கியவற்றில் சுபிட்சத்தை ஏற்படுத்துவாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்.

(இரண்டில்) நல்லதைத் தேர்ந்தெடுக்க ஓதும் பிரார்த்தனை

அத்தியாயம்: 80


قَالَتْ أُمُّ سُلَيْمٍ: أَنَسٌ خَادِمُكَ، قَالَ: «اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ، وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ»


Bukhari-6378 & 6379

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 47 சுபிட்சத்துடன் செல்வம் பெருகிடப் பிரார்த்திப்பது.

6378. & 6379. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அனஸ் தங்களின் சேவகராவார். அவருக்காகப் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கிடுவாயாக! அனஸுக்கு நீ வழங்கிய(எல்லா) வற்றிலும் சுபிட்சத்தை ஏற்படுத்துவாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்.

இதைக் போன்றே அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடமிருந்து ஹிஷாம் இப்னு ஸைத்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.

Book : 80


يَا رَسُولَ اللَّهِ، أَنَسٌ خَادِمُكَ، ادْعُ اللَّهَ لَهُ، قَالَ: «اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ، وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ» وَعَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، مِثْلَهُ


Bukhari-6377

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 46 வறுமையினால் ஏற்படும் சோதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.

6377. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்திப்பவர்களாய் இருந்தார்கள்; அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃபித்னத்திந் நாரி, வ அதாபிந் நாரி, வ ஃபித்னத்தில் கப்றிஇ வ அதாபில் கப்றி, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃபக்ர், அல்லாஹும்ம மஸீஹித் தஜ்ஜால், அல்லாஹும்மஃக் ஸில் கல்பீ பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமாநக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மிஷ்ரிக்கி வல் மஃக்ரிப். அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸலி, வல்மஃஸமி, வல்மஃக்ரம்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் நரகத்தின் சோதனையிலிருந்தும், நரகத்தின் வேதனையிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும், செல்வச் சோதனையின் தீமையிலிருந்தும், வறுமைச் சோதனையின் தீமையிலிருந்தும், வறுமைச் சோதனையின் தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! உன்னிடம் நான் (மகாபொய்யன்) மஸீஹுத்

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ، وَفِتْنَةِ القَبْرِ وَعَذَابِ القَبْرِ، وَشَرِّ فِتْنَةِ الغِنَى وَشَرِّ فِتْنَةِ الفَقْرِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، اللَّهُمَّ اغْسِلْ قَلْبِي بِمَاءِ الثَّلْجِ وَالبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الكَسَلِ، وَالمَأْثَمِ وَالمَغْرَمِ»


Bukhari-6376

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 45 செல்வத்தினால் ஏற்படும் சோதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.

6376. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (பின்வருவனவற்றிலிருந்து அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள்: அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃபித்னத்திந் நாரி, வ மின் அதாபிந் நார். வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில்

கப்ற், வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற், வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் ஃகினா, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் ஃபக்ர், வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்.

பொருள்: இறைவா! நரகத்தின் சோதனை யிலிருந்தும் நரகத்தின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மண்ணறையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். செல்வத்தின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். வறுமையின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். வறுமையின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக்

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَمِنْ عَذَابِ النَّارِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ القَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الغِنَى، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الفَقْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ»


Bukhari-6375

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6375. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸலி, வல்ஹரமி, வல்மஃக்ரமி, வல்மஃஸம். அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபிந் நாரி, வ ஃபித்னத்திந் நாரி, வ ஃபித்னத்தில் கப்றி, வ அதாபில் கப்றி, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃம்னா, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃபக்ரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால், அல்லாஹும்மஃக்ஸில் கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ். வபாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷரிக்கீ வல்மஃக்ரிப்’ என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் கடனிலிலிருந்தும் பாவத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! உன்னிடம் நரகத்தின் வேதனை, நரகத்தின் சோதனை, மண்ணறையின் சோதனை, மண்ணறையின் வேதனை, செல்வத்தின் தீமை, வறுமையின் தீமை, (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் தீமை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன்.

இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும்

«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الكَسَلِ وَالهَرَمِ، وَالمَغْرَمِ وَالمَأْثَمِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ وَفِتْنَةِ النَّارِ، وَفِتْنَةِ القَبْرِ وَعَذَابِ القَبْرِ، وَشَرِّ فِتْنَةِ الغِنَى، وَشَرِّ فِتْنَةِ الفَقْرِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ»


Next Page » « Previous Page