Category: புஹாரி

Bukhari

Bukhari-6219

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6219. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து நாள்களில் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் ‘இஃதிகாஃப்’ இருந்து கொண்டிருந்தபோது அவர்களைச் சந்திப்பதற்காக நான் (பள்ளி வாசலுக்குச்) சென்றேன். (அந்த) இரவில் சிறிது நேரம் பேசிவிட்டு நான் திரும்பிச் செல்ல எழுந்தபோது, என்னை அனுப்பி வைப்பதற்காக என்னுடன் நபி(ஸல்) அவர்களும் எழுந்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களின் (மற்றொரு) துணைவியாரான உம்மு ஸலமா(ரலி) அவர்களின் இல்லத்தை ஒட்டியிருந்த பள்ளிவாசலின் வாயில் அருகில் வந்தபோது அன்சாரிகளில் இருவர் எங்களைக் கடந்து சென்றனர். அவர்கள் இருவரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சலாம் கூறிவிட்டுப் போய்க் கொண்டேயிருந்தனர். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இருவரையும் பார்த்து, ‘சற்று பொறுங்கள்! (என்னுடன் இருக்கும்) இந்தப் பெண் ஸஃபிய்யா பின்த் ஹுயை தான்’ என்றார்கள். அந்த இருவரும் (வியப்புடன்) ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்), இறைத்தூதர் அவர்களே!’ என்றனர். நபி(ஸல்) அவர்கள் சொன்ன வார்த்தை அவர்கள் இருவருக்கும் பளுவாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள்

أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزُورُهُ، وَهُوَ مُعْتَكِفٌ فِي المَسْجِدِ، فِي العَشْرِ الغَوَابِرِ مِنْ رَمَضَانَ، فَتَحَدَّثَتْ عِنْدَهُ سَاعَةً مِنَ العِشَاءِ، ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ، فَقَامَ مَعَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْلِبُهَا، حَتَّى إِذَا بَلَغَتْ بَابَ المَسْجِدِ، الَّذِي عِنْدَ مَسْكَنِ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَرَّ بِهِمَا رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ، فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ نَفَذَا، فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى رِسْلِكُمَا، إِنَّمَا هِيَ صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ» قَالاَ: سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ، وَكَبُرَ عَلَيْهِمَا مَا قَالَ: «إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ ابْنِ آدَمَ مَبْلَغَ الدَّمِ، وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا»


Bukhari-6217 & 6218

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 120 (ஆழ்ந்த சிந்தனையில் உள்ள) ஒருவர் தமது கையிலுள்ள பொருளால் நிலத்தைக் கீறுவது.

6217. & 6218. அலீ(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (‘பகீஉல் ஃகர்கத்’ எனும் பொது மையவாடியில்) ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது அவர்கள் ஒரு தடியால் தரையைக் கீறிய வண்ணம் (ஆழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். பின்னர், ‘தம் இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா எனத் தீர்மானிக்கப்படாத ஒருவரும் உங்களில் இல்லை’ என்று கூறினார்கள்.

அப்போது மக்கள் (சிலர்), ‘நாங்கள் (இதையே) நம்பி (நல்லறங்கள் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார் பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது’ என்று கூறிவிட்டு ‘(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கிறவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்’ எனும் (திருக்குர்ஆன் 92:5-7 ஆகிய) வசனங்களை ஓதிக் காட்டினார்கள். 250

Book : 78


كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ، فَجَعَلَ يَنْكُتُ الأَرْضَ بِعُودٍ، فَقَالَ: «لَيْسَ مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ فُرِغَ مِنْ مَقْعَدِهِ مِنَ الجَنَّةِ وَالنَّارِ» فَقَالُوا: أَفَلاَ نَتَّكِلُ؟ قَالَ: ” اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ، {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى} [الليل: 5] ” الآيَةَ


Bukhari-6216

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 119 (ஆழ்ந்த யோசனையில் உள்ள) ஒருவர் நீரிலும் களிமண்ணிலும் குச்சியால் தட்டுவது.

6216. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றில் இருந்தேன். நபி(ஸல்) அவர்களின் கையில் தடி ஒன்று இருந்தது. (ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த) அவர்கள் அந்தத் தடியால் நீருக்கும் களிமண்ணுக்கும் இடையே (தரையில்) அடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் வந்து (வாயிற் கதவைத்) திறக்கும்படி கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்காகத் திறந்துவிடுங்கள்; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்’ என்றார்கள். நான் சென்றேன். அங்கே அபூ பக்ர்(ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்காக (வாயிற்கதவைத்) திறந்தேன். அவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக (நபி(ஸல்) அவர்கள் கூறிய) நற்செய்தியைத் தெரிவித்தேன். பிறகு ஒருவர் வந்து (கதவைத்) திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் அனுமதி கேட்க) நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்குத் திறந்துவிடுங்கள்; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்’ என்றார்கள்.

أَنَّهُ كَانَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَائِطٍ مِنْ حِيطَانِ المَدِينَةِ، وَفِي يَدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُودٌ يَضْرِبُ بِهِ بَيْنَ المَاءِ وَالطِّينِ، فَجَاءَ رَجُلٌ يَسْتَفْتِحُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ» فَذَهَبْتُ فَإِذَا أَبُو بَكْرٍ، فَفَتَحْتُ لَهُ وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ، ثُمَّ اسْتَفْتَحَ رَجُلٌ آخَرُ فَقَالَ: «افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ» فَإِذَا عُمَرُ، فَفَتَحْتُ لَهُ وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ، ثُمَّ اسْتَفْتَحَ رَجُلٌ آخَرُ، وَكَانَ مُتَّكِئًا فَجَلَسَ، فَقَالَ: «افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ، عَلَى بَلْوَى تُصِيبُهُ، أَوْ تَكُونُ» فَذَهَبْتُ فَإِذَا عُثْمَانُ، فَقُمْتُ فَفَتَحْتُ لَهُ وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ، فَأَخْبَرْتُهُ بِالَّذِي قَالَ، قَالَ: اللَّهُ المُسْتَعَانُ


Bukhari-6215

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6215. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(ஒரு நாள்) நான் (என் சிறிய தாயார்) மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் இரவு தங்கினேன். அவர்களிடம் நபி(ஸல்) அவர்களும் இருந்தார்கள். ‘இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி’ அல்லது ‘அதில் சிறிது நேரம்’ ஆனபோது நபி(ஸல்) அவர்கள் (படுக்கையிலிருந்து எழுந்து) அமர்ந்து வானத்தைப் பார்த்தவாறு ‘நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு – பகல் மாறி, மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன’ எனும் (திருக்குர்ஆன் 03:190 வது) இறைவசனத்தை ஓதினார்கள். 248

Book :78


بِتُّ فِي بَيْتِ مَيْمُونَةَ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا، فَلَمَّا كَانَ ثُلُثُ اللَّيْلِ الآخِرُ، أَوْ بَعْضُهُ، قَعَدَ فَنَظَرَ إِلَى السَّمَاءِ، فَقَرَأَ: {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ وَاخْتِلاَفِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الأَلْبَابِ}


Bukhari-6214

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 118 வானத்தை அண்ணாந்து பார்த்தல்245 அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப் பட்டிருக்கின்றது என்று. மேலும், வானத்தை (அவர்கள் பார்க்க வேண்டாமா?) அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கின்றது என்று. (88:17, 18) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள்.246

6214. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

பிறகு (சுமார் மூன்று வருடம்) எனக்கு வேத அறிவிப்பு வருவது நின்று போய்விட்டது. இதற்கிடையில் (ஒரு நாள்) நான் நடந்து போய்க் கொண்டிருந்தேன். அப்போது வானிலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். உடனே வானத்தை அண்ணாந்து பார்த்தேன். அங்கு ஹிரா (குகையில்) என்னிடம் வந்த அதே வானவர் (ஜிப்ரீல்) வானத்துக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டிருந்தார்.

என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 247

Book : 78


«ثُمَّ فَتَرَ عَنِّي الوَحْيُ، فَبَيْنَا أَنَا أَمْشِي، سَمِعْتُ صَوْتًا مِنَ السَّمَاءِ، فَرَفَعْتُ بَصَرِي إِلَى السَّمَاءِ ، فَإِذَا المَلَكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ، قَاعِدٌ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ»


Bukhari-6213

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 117 இருக்கும் ஒன்றை இல்லை என்று கூறுவது; அது சரியில்லை என்பதைக் குறிக்க.242 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இரு மண்ணறை களைக் காட்டி ‘(இவற்றில் அடக்கம் செய்யப்பட்டுள்ள) இவர்கள் இருவரும் பெரிய பாவத்திற்காக வேதனை செய்யப்பட வில்லை; (இருப்பினும்,)அதுவும் பெரிய பாவம்தான்’ என்று சொன்னார்கள்.243

6213. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சோதிடர்கள் குறித்துச் சிலர் கேட்டனர். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘சோதிடர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருளே அல்ல’ என்று பதிலளித்தார்கள். அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவ்வாறாயின், சோதிடர்கள் சில வேளைகளில் ஒன்றைப் பற்றி அறிவிக்க அது உண்மையாகி விடுகிறதே (அது எப்படி?)’ என்று வினவினர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அந்த உண்மையான வார்த்தைகளை ஜின் (வானவரிடமிருந்து) ஒட்டுக் கேட்டு வந்து தம் (சோதிட) நண்பனின் காதில் சேவல் கொக்கரிப்பது போல் போட்டு விடுகிறது. சோதிடர்கள் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகின்றனர்’ என்று கூறினார்கள்.244

سَأَلَ أُنَاسٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الكُهَّانِ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسُوا بِشَيْءٍ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، فَإِنَّهُمْ يُحَدِّثُونَ أَحْيَانًا بِالشَّيْءِ يَكُونُ حَقًّا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تِلْكَ الكَلِمَةُ مِنَ الحَقِّ، يَخْطَفُهَا الجِنِّيُّ، فَيَقُرُّهَا فِي أُذُنِ وَلِيِّهِ قَرَّ الدَّجَاجَةِ، فَيَخْلِطُونَ فِيهَا أَكْثَرَ مِنْ مِائَةِ كَذْبَةٍ»


Bukhari-6212

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6212. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை எதிரிகள் படையெடுத்து வருவதாக) மதீனாவில் பீதி நிலவியது. உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா(ரலி) அவர்களின் குதிரை ஒன்றில் ஏறி (விவரமறிந்து வரத் துணிவுடன்) புறப்பட்டார்கள். (திரும்பி வந்து) ‘(பீதி ஏற்படுத்தும்) எதையும் நாம் இந்தக் குதிரையைக் கண்டோம்’ என்றார்கள். 241

Book :78:78


كَانَ بِالْمَدِينَةِ فَزَعٌ، فَرَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا لِأَبِي طَلْحَةَ، فَقَالَ: «مَا رَأَيْنَا مِنْ شَيْءٍ، وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا»


Bukhari-6211

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6211. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு ‘அன்ஜஷா’ என்றழைக்கப்பட்ட ‘பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர்’ ஒருவர் இருந்தார். அவர் அழகிய குரல் வளம் கொண்டவராக இருந்தார். (அவர் ஒரு முறை ஒட்டகத்தில் பெண்கள் இருக்க பாடிக்கொண்டிருந்த போது) அவரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘அன்ஜஷா! நிதானம்! கண்ணாடிக் குடுவைகளை உடைத்துவிடாதே!’ என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மென்மையான பெண்களைக் கருத்தில் கொண்டே நபி(ஸல்) அவர்கள் (கண்ணாடிக் குடுவைகள் என்று சிலேடையாகக்) கூறினார்கள்.

Book :78


كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَادٍ يُقَالُ لَهُ أَنْجَشَةُ، وَكَانَ حَسَنَ الصَّوْتِ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُوَيْدَكَ يَا أَنْجَشَةُ، لاَ تَكْسِرِ القَوَارِيرَ» قَالَ قَتَادَةُ: يَعْنِي ضَعَفَةَ النِّسَاءِ


Bukhari-6210

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6210. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது ‘அன்ஜஷா’ என்றழைக்கப்பட்ட ஓர் அடிமை பாட்டுப் பாடி (ஒட்டகத்திலிருந்த) பெண்களை அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘அன்ஜஷா’ நிதானமாக ஓட்டிச்செல். கண்ணாடிக் குடுவைகளை அதாவது பெண்களை உடைத்துவிடாதே’ என்றார்கள்.

Book :78


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي سَفَرٍ، وَكَانَ غُلاَمٌ يَحْدُو بِهِنَّ يُقَالُ لَهُ أَنْجَشَةُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُوَيْدَكَ يَا أَنْجَشَةُ سَوْقَكَ بِالقَوَارِيرِ» قَالَ أَبُو قِلاَبَةَ: يَعْنِي النِّسَاءَ


Bukhari-6209

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 116 சிலேடையாகப் பேசுவது பொய் ஆகாது.238 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் (நோயுற்றிருந்து) இறந்துவிட்டார். (இது தெரியாமல்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம் துணைவியாரிடம்), ‘பையன் எவ்வாறிருக்கிறான்?’ என்று கேட்டார்கள். அதற்கு (அவர்களுடைய துணைவியார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள், ‘அவனது மூச்சு அமைதியாக உள்ளது. அவன் (நன்கு) ஓய்வெடுத்துக் கொண்டுவிட்டான் என்றே நம்புகிறேன்’ என்று பதிலளித்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் தம் மனைவி கூறியது உண்மைதான் என்று எண்ணிக் கொண்டார்கள்.239

6209. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது பாட்டுப்பாடி ஒட்டக மோட்டுபவர் ஒருவர் (அன்ஜஷா என்பவர்) பாடினார். அப்போது (அவரிடம்) நபி(ஸல்) அவர்கள், ‘அன்ஜஷா! உனக்குக் கேடுதான்! மெல்லப்போ. கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்து விடாதே!’ என்றார்கள்.240

Book : 78


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسِيرٍ لَهُ، فَحَدَا الحَادِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْفُقْ يَا أَنْجَشَةُ، وَيْحَكَ بِالقَوَارِيرِ»


Next Page » « Previous Page