Category: புஹாரி

Bukhari

Bukhari-6188

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6188. அபுல் காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால் என்னுடைய (அபுல் காசிம் எனும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளாதீர்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 214

Book :78


«سَمُّوا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي»


Bukhari-6186

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 105

அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான பெயர்.211

6186. ஜாபிர் (ரலி) அறிவித்தார்.

எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் ‘காசிம்’ என்று பெயர் சூட்டினார். நாங்கள் (அவரிடம்), ‘உம்மை நாங்கள் அபுல் காசிம் (காசிமின் தந்தை) என்ற குறிப்புப் பெயரால் அழைத்து, மேன்மைப்படுத்திடமாட்டோம். (நபியவர்களுக்கு ‘அபுல் காசிம்’ எனும் பெயர் இருப்பதே காரணம்)’ என்று சொன்னோம். எனவே, அவர் நபி(ஸல்) அவர்களிடம் (சென்று, இதைத்) தெரிவித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உம்முடைய மகனுக்கு அப்துர் ரஹ்மான் எனப் பெயர் சூட்டுக!’ என்று கூறினார்கள்.212

Book : 78


وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ القَاسِمَ، فَقُلْنَا: لاَ نَكْنِيكَ أَبَا القَاسِمِ وَلاَ كَرَامَةَ، فَأَخْبَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «سَمِّ ابْنَكَ عَبْدَ الرَّحْمَنِ»


Bukhari-6185

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 104 ‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்’ என்று கூறுவது. அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘எங்கள் தந்தையரும் எங்கள் அன்னையரும் தங்களுக்கு அர்ப்பணமா கட்டும்’ என்று சொன்னார்கள்.209

6185. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நானும் அபூ தல்ஹா(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களுடன் (கைபரிலிருந்து மதீனாவை) முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். நபி(ஸல்) அவர்கள் தம்முடனிருந்த (தம் துணைவியாரான) ஸஃபிய்யா(ரலி) அவர்களைத் தம் வாகனத்தில் பின்னால் அமர்த்தியிருந்தார்கள். (சிறிது தூரம் கடந்து) பாதையில் ஓரிடத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தபோது (நபியவர்களின்) அந்த ஒட்டகம் இடறி விழுந்தது. நபி(ஸல்) அவர்களும் அவர்களின் துணைவியாரும் கீழே வீழ்த்தப்பட்டனர். அபூ தல்ஹா(ரலி) அவர்கள் தங்களின் ஒட்டகத்திலிருந்து தாவிக் குதித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் நபியே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! தங்களுக்கு (காயம்) ஏதும் ஏற்பட்டதா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை; ஆயினும், நீ இந்தப் பெண்ணைக் கவனி!’ என்று

أَنَّهُ أَقْبَلَ هُوَ وَأَبُو طَلْحَةَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَفِيَّةُ، مُرْدِفُهَا عَلَى رَاحِلَتِهِ، فَلَمَّا كَانُوا بِبَعْضِ الطَّرِيقِ عَثَرَتِ النَّاقَةُ، فَصُرِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالمَرْأَةُ، وَأَنَّ أَبَا طَلْحَةَ – قَالَ: أَحْسِبُ – اقْتَحَمَ عَنْ بَعِيرِهِ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاكَ، هَلْ أَصَابَكَ مِنْ شَيْءٍ؟ قَالَ: «لاَ، وَلَكِنْ عَلَيْكَ بِالْمَرْأَةِ» فَأَلْقَى أَبُو طَلْحَةَ ثَوْبَهُ عَلَى وَجْهِهِ فَقَصَدَ قَصْدَهَا، فَأَلْقَى ثَوْبَهُ عَلَيْهَا، فَقَامَتِ المَرْأَةُ، فَشَدَّ لَهُمَا عَلَى رَاحِلَتِهِمَا فَرَكِبَا، فَسَارُوا حَتَّى إِذَا كَانُوا بِظَهْرِ المَدِينَةِ – أَوْ قَالَ: أَشْرَفُوا عَلَى المَدِينَةِ – قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ» فَلَمْ يَزَلْ يَقُولُهَا حَتَّى دَخَلَ المَدِينَةَ


Bukhari-6184

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 103 ‘என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்’ என்று சொல்வது.206 இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.207

6184. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் தவிர வேறெவருக்கும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தாய் தந்தையரை அர்ப்பணிப்பதாகக் கூறியதை நான் கேட்டதில்லை. (ஸஅத் அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், ‘அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகாட்டும்’ என்று கூறியதைக் கேட்டேன். இது உஹுதுப் போர் நாளில் நடைபெற்றதாகவே எண்ணுகிறேன். 208

Book : 78


مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفَدِّي أَحَدًا غَيْرَ سَعْدٍ، سَمِعْتُهُ يَقُولُ: «ارْمِ فَدَاكَ أَبِي وَأُمِّي» أَظُنُّهُ يَوْمَ أُحُدٍ


Bukhari-6183

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 102 ‘கண்ணியத்திற்குரியது (‘அல்கர்ம்’) இறைநம்பிக்கையாளரின் இதயமே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.204 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மையில் திவாலானவன் யாரெனில், மறுமை நாளில் திவாலாகுபவனேயாவான். மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே (உண்மையில்) வீரன் ஆவான். மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆட்சியதிகாரம் அல்லாஹ்விற்கே உரியது. இவ்வாறு ஆட்சியதிகாரத்தின் எல்லையை நபியவர்கள் இறைவனுடன் முற்றுப்பெறச் செய்துள்ள அதே வேளையில் அரசர்கள் குறித்துப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகின்றான்: அரசர்கள் ஒரு நகரத்துக்குள் (படை யெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அவர்கள் அழித்துவிடுகிறார்கள். (27:34)

6183. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மக்கள் (திராட்சைப் பழத்திற்கு) ‘அல்கர்ம்’ (கண்ணியமானது) என்று சொல்கின்றனர். உண்மையில் இறைநம்பிக்கையாளரின் இதயமே ‘அல்கர்ம்’ (கண்ணியத்திற்குரியது) ஆகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

«وَيَقُولُونَ الكَرْمُ، إِنَّمَا الكَرْمُ قَلْبُ المُؤْمِنِ»