Category: புஹாரி

Bukhari

Bukhari-6136

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6136. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :78


«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ»


Bukhari-6135

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 85 விருந்தினரைக் கண்ணியப்படுத்துவதும் தாமே அவர்களுக்குப் பணிவிடை செய்வதும். அல்லாஹ் கூறுகின்றான்: இப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா? (51:24) அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: ‘விருந்தினர்’ என்பதை (அரபியில்) ‘ஸவ்ர்’ என்றும், ‘ளைஃப்’ என்றும் கூறுவர். வேர்ச்சொல்லான இது ஒருமை, பன்மை அனைத்துக்கும் பொருந்தும். ‘ரிழா’ (திருப்தி), ‘அத்ல்’ (நீதி) ஆகிய சொற்களைப் போல. ‘ஃகவ்ர்’ (வற்றுதல்) எனும் சொல், ஆண்பால் (மாஉ-தண்ணீர்), பெண்பால் (பிஃர்-கிணறு), ஒருமை, இருமை, பன்மை ஆகிய அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும்.

6135. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். விருந்தினருக்கு அளிக்கும் கொடை என்பது, ஒரு பகல் ஒர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேலுள்ள (உபசரிப்பான)து தர்மமாக அமையும் (உபசரிக்கும்) அவரைச் சிரமப்படுத்தும் அளவுக்கு அவரிடம் தங்குவது விருந்தாளிக்கு அனுமதிக்கப்பட்டதன்று.

«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، جَائِزَتُهُ يَوْمٌ وَلَيْلَةٌ، وَالضِّيَافَةُ ثَلاَثَةُ أَيَّامٍ، فَمَا بَعْدَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ، وَلاَ يَحِلُّ لَهُ أَنْ يَثْوِيَ عِنْدَهُ حَتَّى يُحْرِجَهُ»، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ: مِثْلَهُ، وَزَادَ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ»


Bukhari-6134

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 84 விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமை

6134. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டதே! (அது உண்மைதானா?) என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று பதிலளித்தேன். (அதற்கு) நபி(ஸல்) அவர்கள், ‘அவ்வாறு செய்யாதீர்! (சிறிது நேரம்) தொழுவிராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! (சில நாள்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாள்கள் நோன்பைவிட்டுவிடுவீராக! ஏனெனில், உம்முடைய உடலுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய கண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம் துணைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு. உம்முடைய வயது நீளக்கூடும். (அப்போது உம்மால் தொடர் நோன்பும் தொடர் வழிபாடும் சாத்தியப் படாமல் போகலாம். எனவே) ஒவ்வொரு மாதமும் (ஏதேனும்) மூன்று நாள்கள் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும். ஏனெனில், ஒவ்வொரு நற்செயலுக்கும் பிரதியாக அது போன்ற பத்து மடங்கு

دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَقُومُ اللَّيْلَ وَتَصُومُ النَّهَارَ» قُلْتُ: بَلَى، قَالَ: «فَلاَ تَفْعَلْ، قُمْ وَنَمْ، وَصُمْ وَأَفْطِرْ، فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّكَ عَسَى أَنْ يَطُولَ بِكَ عُمُرٌ، وَإِنَّ مِنْ حَسْبِكَ أَنْ تَصُومَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلاَثَةَ أَيَّامٍ، فَإِنَّ بِكُلِّ حَسَنَةٍ عَشْرَ أَمْثَالِهَا، فَذَلِكَ الدَّهْرُ كُلُّهُ» قَالَ: فَشَدَّدْتُ فَشُدِّدَ عَلَيَّ، فَقُلْتُ: فَإِنِّي أُطِيقُ غَيْرَ ذَلِكَ، قَالَ: «فَصُمْ مِنْ كُلِّ جُمُعَةٍ ثَلاَثَةَ أَيَّامٍ» قَالَ: فَشَدَّدْتُ فَشُدِّدَ عَلَيَّ، قُلْتُ: أُطِيقُ غَيْرَ ذَلِكَ، قَالَ: «فَصُمْ صَوْمَ نَبِيِّ اللَّهِ دَاوُدَ» قُلْتُ: وَمَا صَوْمُ نَبِيِّ اللَّهِ دَاوُدَ؟ قَالَ: «نِصْفُ الدَّهْرِ»


Bukhari-6133

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 83 இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார். முஆவியா (ரலி) அவர்கள், ‘அனுபவ சாலியே அறிவாளியாவார்’ என்று சொன் னார்கள்.

6133. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இறைநம்பிக்கையாளர் ஒரே புறத்தில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 78


«لاَ يُلْدَغُ المُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ»


Bukhari-6132

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6132. அப்துல்லாஹ் இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்குத் தங்கப் பித்தான்கள் கொண்ட பட்டு அங்கிகள் சில அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அவற்றை அவர்கள் தம் தோழர்கள் சிலரிடையே பங்கிட்டார்கள். அவற்றிலிருந்து ஒன்றை மக்ரமா இப்னு நவ்ஃபல்(ரலி) அவர்களுக்காகத் தனியே எடுத்த வைத்தார்கள். மக்ரமா(ரலி) அவர்கள் வந்தபோது நபி(ஸல்) அவர்கள் (அந்த அங்கியுடன் வந்து) ‘உங்களுக்கக நான் இதை எடுத்து வைத்தேன்’ என்றார்கள்.

அய்யூப்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘அந்த ஆடையை எடுத்துவந்து அவரிடம் காட்டியவாறு’ என்றும், ‘மக்ரமா(ரலி) அவர்களின் சுபாவத்தில் சிறிது (கடுமை) இருந்தது’ என்றும் கூறப்பெற்றுள்ளது.

ஹாத்திம் இப்னு வர்தான்(ரஹ்) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பில், ‘நபி(ஸல்) அவர்களிடம் சில அங்கிகள் வந்தன’ என்று மிஸ்வர்(ரலி) அவர்களிடமிருந்தே (அறிவிப்பாளர் தொடர் முறிவுறாமல் முத்தஸிலாக) அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :78


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُهْدِيَتْ لَهُ أَقْبِيَةٌ مِنْ دِيبَاجٍ، مُزَرَّرَةٌ بِالذَّهَبِ، فَقَسَمَهَا فِي نَاسٍ مِنْ أَصْحَابِهِ، وَعَزَلَ مِنْهَا وَاحِدًا لِمَخْرَمَةَ، فَلَمَّا جَاءَ قَالَ: «قَدْ خَبَأْتُ هَذَا لَكَ» قَالَ أَيُّوبُ: «بِثَوْبِهِ وَأَنَّهُ يُرِيهِ إِيَّاهُ، وَكَانَ فِي خُلُقِهِ شَيْءٌ» رَوَاهُ حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، وَقَالَ حَاتِمُ بْنُ وَرْدَانَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ المِسْوَرِ: قَدِمَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبِيَةٌ


Bukhari-6131

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 82 மக்களுடன் கனிவாகப் பேசுவது ‘சிலருக்கு முன்னால் நாங்கள் (மனித நேய அடிப்படையில்) சிரித்துப் பேசுவோம். ஆனால், (அவர்களின் தீய செயல்களால்) அவர்களை எங்கள் மனம் சபித்துக் கொண்டிருக்கும்’ என அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது.147

6131. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் (எங்கள் வீட்டுக்குள் நுழைய) நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அவருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்; (இவர்) அந்தக் கூட்டத்தாரிலேயே (மிக) மோசமானவர்’ என்றார்கள். (வீட்டுக்குள்) அவர் வந்தபோது (எல்லாரிடமும் பேசுவது போல்) அவரிடமும் கனிவாகப் பேசினார்கள். (அவர் சென்றதும்) நான், ‘இறைத்தூதர் அவர்களே அந்த மனிதரைப் பற்றித் தாங்கள் ஒன்று சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆயிஷா! மக்கள் யாருடைய அருவருப்பான பேச்சுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக அவரிடமிருந்து ஒதுங்குகிறார்களோ அவரே இறைவனிடம் அந்தஸ்தில் மிகவும் மோசமானவர்’ என்று கூறினார்கள்.

أَنَّهُ اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ فَقَالَ: «ائْذَنُوا لَهُ، فَبِئْسَ ابْنُ العَشِيرَةِ – أَوْ بِئْسَ أَخُو العَشِيرَةِ -» فَلَمَّا دَخَلَ أَلاَنَ لَهُ الكَلاَمَ، فَقُلْتُ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ مَا قُلْتَ، ثُمَّ أَلَنْتَ لَهُ فِي القَوْلِ؟ فَقَالَ: «أَيْ عَائِشَةُ، إِنَّ شَرَّ النَّاسِ مَنْزِلَةً عِنْدَ اللَّهِ مَنْ تَرَكَهُ – أَوْ وَدَعَهُ النَّاسُ – اتِّقَاءَ فُحْشِهِ»