Category: புஹாரி

Bukhari

Bukhari-6126

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6126. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்வு செய்து கொள்ளும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறப்பெற்றால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கம் பட்சத்தில் எப்போதும் தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் அதிலிருந்து (விலகி) வெகு தொலைவில் நிற்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தமக்காக எதிலும் (யாரையும்) ஒரு பேதும் பழிவாங்கியதில்லை; இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகத் தண்டிக்க வேண்டுமென்று இருந்தலே தவிர (அப்போது மட்டும் பழிவாங்குவார்கள்.)

Book :78


«مَا خُيِّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَمْرَيْنِ قَطُّ إِلَّا أَخَذَ أَيْسَرَهُمَا، مَا لَمْ يَكُنْ إِثْمًا، فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ، وَمَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنَفْسِهِ فِي شَيْءٍ قَطُّ، إِلَّا أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللَّهِ، فَيَنْتَقِمَ بِهَا لِلَّهِ»


Bukhari-6125

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6125. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(மார்க்க விஷயங்களில்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள்; ஆறுதலாக நடந்து கொள்ளுங்கள்; வெறுப்பேற்றிவிடாதீர்கள்.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

Book :78


«يَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا، وَسَكِّنُوا وَلاَ تُنَفِّرُوا»


Bukhari-6124

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 80 ‘(மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; சிரமப்படுத்தாதீர்கள்’ எனும் நபிமொழி.139 நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு எளிதையும் சுலபத்தையுமே விரும்பி வந்தார்கள்.140

6124. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னையும் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களையும் (‘விடைபெறும்’ ஹஜ்ஜுக்க முன்பு யமன் நாட்டுக்கு) அனுப்பியபோது எங்கள் இருவரிடமும், ‘மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பேற்றி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள் (பிளவு பட்டுவிடாதீர்கள்)’ என்றார்கள்.

நான், ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் (பிறந்தகமான) யமன் நாட்டில் தேனில் ‘அல்பித்உ’ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் ‘மிஸ்ர்’ என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?)’ என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘போதை தரக்கூடிய

لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمُعَاذَ بْنَ جَبَلٍ، قَالَ لَهُمَا: «يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا، وَتَطَاوَعَا» قَالَ أَبُو مُوسَى: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا بِأَرْضٍ يُصْنَعُ فِيهَا شَرَابٌ مِنَ العَسَلِ، يُقَالُ لَهُ البِتْعُ، وَشَرَابٌ مِنَ الشَّعِيرِ، يُقَالُ لَهُ المِزْرُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ»


Bukhari-6123

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6123. ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

‘ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து தன்னை மணந்துகொள்ளுமாறு கூறினார். அப்போது அந்தப் பெண் (மணந்துகொள்ள) தங்களுக்கு நான் தேவையா? என்று கேட்டார். என அனஸ்(ரலி) கூறினார். அப்போது அனஸ்(ரலி) அவர்களின் புதல்வியார் ‘என்ன வெட்கங்கெட்டதனம்!’ என்று (ஆச்சரியத்துடன்) கேட்டதற்கு அனஸ்(ரலி) அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரிடம் தன்னை மணந்து கொள்ளும்படி கோரிய அந்தப் பெண் உன்னைவிடச் சிறந்தவராவார்’ என்றார்கள்

Book :78


جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعْرِضُ عَلَيْهِ نَفْسَهَا، فَقَالَتْ: هَلْ لَكَ حَاجَةٌ فِيَّ؟ فَقَالَتِ ابْنَتُهُ: مَا أَقَلَّ حَيَاءَهَا، فَقَالَ: «هِيَ خَيْرٌ مِنْكِ، عَرَضَتْ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَفْسَهَا»


Bukhari-6122

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6122. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘இறைநம்பிக்கையாளரின் நிலை பசுமையான ஒரு மரத்தைப் போன்றதாகும். அதன் இலை உதிர்வதில்லை; (அதன் இலைகள் ஒன்றோடொன்று உராய்வதில்லை’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்போது மக்கள், ‘அது இன்ன மரம்; அது இன்ன மரம் என்று கூறினார். அது பேரீச்சமரம் தான் என்று நான் கூற நினைத்தேன். நான் இளவயதுக்காரனாக இருந்ததால் வெட்கப்பட்(டுக் கொண்டு சொல்லாமல் இருந்து விட்)டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அது பேரீச்ச மரம்’ என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதைப் போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இப்னு உமர்(ரலி) அவர்கள், ‘நான் அது குறித்து என் தந்தை உமர்(ரலி) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள், ‘நீ அதைச் சொல்லியிருந்தால் அது எனக்கு இன்ன இன்னவற்றை விட உகப்பானதாய் இருந்திருக்கும்’ என்று கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

Book :78


«مَثَلُ المُؤْمِنِ كَمَثَلِ شَجَرَةٍ خَضْرَاءَ، لاَ يَسْقُطُ وَرَقُهَا وَلاَ يَتَحَاتُّ» فَقَالَ القَوْمُ: هِيَ شَجَرَةُ كَذَا، هِيَ شَجَرَةُ كَذَا، فَأَرَدْتُ أَنْ أَقُولَ: هِيَ النَّخْلَةُ، وَأَنَا غُلاَمٌ شَابٌّ فَاسْتَحْيَيْتُ، فَقَالَ: «هِيَ النَّخْلَةُ» وَعَنْ شُعْبَةَ، حَدَّثَنَا خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ ابْنِ عُمَرَ: مِثْلَهُ، وَزَادَ: فَحَدَّثْتُ بِهِ عُمَرَ فَقَالَ: لَوْ كُنْتَ قُلْتَهَا لَكَانَ أَحَبَّ إِلَيَّ مِنْ كَذَا وَكَذَا


Bukhari-6121

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 79 மார்க்க உண்மைகளைக் கேட்டறிவதற்கு வெட்கப்படலாகாது.

6121. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

உம்மு சுலைம்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! சத்தியத்தைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவளின் மீது குளிப்புக் கடமையாகுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம், அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளிப்பு அவளின் மீது கடமைதான்)’ என்று பதிலளித்தார்கள்.

Book : 78


جَاءَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ لاَ يَسْتَحِي مِنَ الحَقِّ، فَهَلْ عَلَى المَرْأَةِ غُسْلٌ إِذَا احْتَلَمَتْ؟ فَقَالَ: «نَعَمْ، إِذَا رَأَتِ المَاءَ»


Bukhari-6120

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 78 நாணம் இல்லையேல் நாடியதைச் செய்து கொள்.

6120. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது) மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான். ‘உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்’ என்பதும்.

என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

Book : 78


إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ الأُولَى: إِذَا لَمْ تَسْتَحْيِ فَاصْنَعْ مَا شِئْتَ


Bukhari-6119

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6119. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிகக் கூச்ச சுபாவம் உள்ளவர்களாய் இருந்தார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அபீ உத்பா(ரஹ்) அறிவித்தார்.

Book :78


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشَدَّ حَيَاءً مِنَ العَذْرَاءِ فِي خِدْرِهَا»


Bukhari-6118

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6118. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது தொடர்பாகத் தம் சகோதரரைக் கண்டித்துக் கொண்டிருந்தார். ‘நீ (அதிகமாக) வெட்கப்படுகிறாய். (இதனால் உனக்கு வரவேண்டிய நன்மைகள் பாதிக்கப்படுகின்றன.) வெட்கத்தால் உனக்கு நஷ்டம் தான்’ என்பது போல் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அவரைவிட்டுவிடு! நாணம் இறை நம்பிக்கையில் அடங்கும்’ என்றார்கள்.

Book :78


مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَجُلٍ، وَهُوَ يُعَاتِبُ أَخَاهُ فِي الحَيَاءِ، يَقُولُ: إِنَّكَ لَتَسْتَحْيِي، حَتَّى كَأَنَّهُ يَقُولُ: قَدْ أَضَرَّ بِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُ، فَإِنَّ الحَيَاءَ مِنَ الإِيمَانِ»


Bukhari-6117

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 77 நாணம்132

6117. அபுஸ் ஸவ்வார் அல்அதவீ(ரஹ்) அவர்கள் கூறினார்:

இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள், ‘நாணம் நன்மையே தரும்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று கூறினார்கள். அப்போது புஷைர் இப்னு கஅப்(ரஹ்) அவர்கள், ‘நாணத்தில் தான் கம்பீரம் உண்டு; நாணத்தில் தான் மன அமைதி உண்டு எனத் தத்துவ(ப் புத்தக)த்தில் எழுதப்பட்டுள்ளது’ என்று கூறினார். அப்போது அவரிடம் இம்ரான்(ரலி) அவர்கள் ‘நான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (கூறியது) பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் ஏட்டில் உள்ளவை குறித்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே! என்று கேட்டார்கள்.

Book : 78


«الحَيَاءُ لاَ يَأْتِي إِلَّا بِخَيْرٍ» فَقَالَ بُشَيْرُ بْنُ كَعْبٍ: ” مَكْتُوبٌ فِي الحِكْمَةِ: إِنَّ مِنَ الحَيَاءِ وَقَارًا، وَإِنَّ مِنَ الحَيَاءِ سَكِينَةً ” فَقَالَ لَهُ عِمْرَانُ: «أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتُحَدِّثُنِي عَنْ صَحِيفَتِكَ»


Next Page » « Previous Page