Category: நஸாயி

Nasaayi-857

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

857. நபி (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் மிஹ்ஜன் (ரலி) இருந்தார். அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் சென்று (தொழுது விட்டு) திரும்பி வந்தார்கள். மிஹ்ஜன் (ரலி) அதே சபையில் இருந்தார். “நீ தொழாமல் இருந்தது ஏன்? நீ முஸ்லிம் இல்லையா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மிஹ்ஜன் (ரலி), “அப்படியில்லை! நான் வீட்டிலேயே தொழுது விட்டேன்” என்று கூறினார். நீ வீட்டில் தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு) வந்தால் மக்களோடு சேர்ந்து தொழு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புஸ்ர் பின் மிஹ்ஜன்


أَنَّهُ كَانَ فِي مَجْلِسٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذَّنَ بِالصَّلَاةِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ رَجَعَ وَمِحْجَنٌ فِي مَجْلِسِهِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ؟ أَلَسْتَ بِرَجُلٍ مُسْلِمٍ؟» قَالَ: بَلَى. وَلَكِنِّي كُنْتُ قَدْ صَلَّيْتُ فِي أَهْلِي. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جِئْتَ فَصَلِّ مَعَ النَّاسِ وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ»


Nasaayi-666

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

666. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகை அழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகனான அல்லாஹ் மகிழ்ச்சியடைகின்றான். ”பாருங்கள் என் அடியானை! பாங்கும் இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து விட்டேன் என்று  அல்லாஹ் கூறுகின்றான்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)


يَعْجَبُ رَبُّكَ مِنْ رَاعِي غَنَمٍ فِي رَأْسِ شَظِيَّةِ الْجَبَلِ يُؤَذِّنُ بِالصَّلَاةِ وَيُصَلِّي، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا يُؤَذِّنُ وَيُقِيمُ الصَّلَاةَ يَخَافُ مِنِّي، قَدْ غَفَرْتُ لِعَبْدِي وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ


Nasaayi-855

ஹதீஸின் தரம்: Pending

855. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் அழகிய முறையில் உளூச் செய்து (பள்ளிக்குச்) சென்று அங்கே மக்கள் தொழுது முடித்து விட்டிருப்பதைக் காண்கிறாரோ அவருக்கு, அல்லாஹ் ஜமாஅத்துடன் தொழுத கூலியை வழங்குகிறான். ஏற்கனவே ஜமாஅத்துடன் தொழுதவர்களுக்கும் கூலியை குறைத்து விடாமல் வழங்குகிறான்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ خَرَجَ عَامِدًا إِلَى الْمَسْجِدِ فَوَجَدَ النَّاسَ قَدْ صَلَّوْا كَتَبَ اللَّهُ لَهُ مِثْلَ أَجْرِ مَنْ حَضَرَهَا وَلَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا»


Nasaayi-5042

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5042. அபூ பிஷ்ர் (ரஹ்) கூறியதாவது:

பத்து விஷயங்கள் நபிவழிகளில் அடங்கும். (அவையாவன:)

பல் துலக்குவது, மீசையைக் கத்தரிப்பது, வாய்கொப்புளித்தல், நாசிக்கு நீர் செலுத்துவது, தாடியை வளர்ப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, விருத்தசேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது போன்றவைகளாகும் என தல்க் பின் ஹபீப் (ரஹ்) கூறினார்.

 

நஸாயீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தியை, தல்க் பின் ஹபீபிடமிருந்து அபூபிஷ்ர், ஸுலைமான் அத்தைமீ போன்றோர் முர்ஸலாக அறிவித்துள்ளார்கள். இதுதான் சரியானது. தல்க் பின் ஹபீபிடமிருந்து முஸ்அப் பின் ஷைபா மர்ஃபூவாக அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ளப்படாது. காரணம் அவர் (ஹதீஸ் கலையில்) நிராகரிக்கப்பட்டவர்.


عَشْرَةٌ مِنَ السُّنَّةِ: السِّوَاكُ، وَقَصُّ الشَّارِبِ، وَالْمَضْمَضَةُ، وَالِاسْتِنْشَاقُ، وَتَوْفِيرُ اللِّحْيَةِ، وَقَصُّ الْأَظْفَارِ، وَنَتْفُ الْإِبْطِ، وَالْخِتَانُ، وَحَلْقُ الْعَانَةِ وَغَسْلُ الدُّبُرِ


Nasaayi-5041

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5041. ஸுலைமான் அத்தைமீ (ரஹ்) கூறியதாவது:

பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) பல் துலக்குவது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, நாசிக்கு நீர் செலுத்துவது போன்றவையாகும். மேலும் வாய்கொப்புளித்தல் இதில் அடங்குமா? என எனக்கு சந்தேகமாக உள்ளது என தல்க் பின் ஹபீப் (ரஹ்) கூறினார்.


عَشْرَةً مِنَ الْفِطْرَةِ: السِّوَاكَ، وَقَصَّ الشَّارِبِ، وَتَقْلِيمَ الْأَظْفَارِ، وَغَسْلَ الْبَرَاجِمِ، وَحَلْقَ الْعَانَةِ، وَالِاسْتِنْشَاقَ، وَأَنَا شَكَكْتُ فِي الْمَضْمَضَةِ


Nasaayi-5225

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5225. மீசையைக் கத்தரித்துக் கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது,  மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, விருத்தசேதனம் செய்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” خَمْسٌ مِنَ الْفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ، وَنَتْفُ الْإِبْطِ، وَتَقْلِيمُ الْأَظْفَارِ، وَالِاسْتِحْدَادُ، وَالْخِتَانُ


Nasaayi-5044

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5044. நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடியைக் களைவது, விருத்தசேதனம் செய்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும் என அபூ ஹுரைரா (ரலி)  கூறினார்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்மக்புரீ (ரஹ்)


خَمْسٌ مِنَ الْفِطْرَةِ: تَقْلِيمُ الْأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ، وَنَتْفُ الْإِبْطِ، وَحَلْقُ الْعَانَةِ، وَالْخِتَانُ


Nasaayi-5043

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5043. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இமாம் மாலிக் அவர்கள் இந்த செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளார்.


خَمْسٌ مِنَ الْفِطْرَةِ: الْخِتَانُ، وَحَلْقُ الْعَانَةِ، وَنَتْفُ الضَّبْعِ، وَتَقْلِيمُ الظُّفْرِ، وَتَقْصِيرُ الشَّارِبِ

«وَقَفَهُ مَالِكٌ»


Nasaayi-11

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விருத்தசேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டுவது, மீசையை எடுப்பது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


خَمْسٌ مِنَ الْفِطْرَةِ: الْخِتَانُ، وَحَلْقُ الْعَانَةِ، وَنَتْفُ الْإِبْطِ، وَتَقْلِيمُ الْأَظْفَارِ، وَأَخْذُ الشَّارِبِ


Nasaayi-10

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 10

நகங்களை வெட்டுதல்.

10. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மீசையைக் கத்தரிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டுவது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, விருத்தசேதனம் செய்துகொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


خَمْسٌ مِنَ الْفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ، وَنَتْفُ الْإِبْطِ، وَتَقْلِيمُ الْأَظْفَارِ، وَالِاسْتِحْدَادُ، وَالْخِتَانُ


Next Page » « Previous Page