Category: நஸாயி

Nasaayi-9

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 9

இயற்கையான வழிமுறைகள்:

‘கத்னா’ செய்தல்.

9 . இயற்கையான வழிமுறைகள் ஐந்தாகும். அவை: 1. ‘கத்னா’ செய்தல், 2. மறைவிடமுடி களைதல், 3. மீசை கத்திரித்தல், 4. நகங்களை வெட்டுதல், 5. அக்குள் முடிகளைதல்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


الْفِطْرَةُ خَمْسٌ: الِاخْتِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَقَصُّ الشَّارِبِ، وَتَقْلِيمُ الْأَظْفَارِ، وَنَتْفُ الْإِبْطِ


Nasaayi-5040

ஹதீஸின் தரம்: More Info

5040. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

 

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) அவர்கள், பத்தாவது விஷயத்தை நான் மறந்துவிட்டேன். அது வாய் கொப்புளிப்பதாய் இருக்கலாம் என்று கூறினார்கள்.


عَشْرَةٌ مِنَ الْفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ، وَقَصُّ الْأَظْفَارِ، وَغَسْلُ الْبَرَاجِمِ، وَإِعْفَاءُ اللِّحْيَةِ، وَالسِّوَاكُ، وَالِاسْتِنْشَاقُ، وَنَتْفُ الْإِبْطِ، وَحَلْقُ الْعَانَةِ، وَانْتِقَاصُ الْمَاءِ ”

قَالَ مُصْعَبٌ: وَنَسِيتُ الْعَاشِرَةَ إِلَّا أَنْ تَكُونَ الْمَضْمَضَةَ


Nasaayi-5226

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5226. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«أَحْفُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللِّحَى»


Nasaayi-5046

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5046. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தாடியை வளரவிடுங்கள், மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«أَعْفُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ»


Nasaayi-5045

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5045. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«أَحْفُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللِّحَى»


Nasaayi-15

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

15. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«أَحْفُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللِّحَى»


Nasaayi-1299

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

1299. உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் நான் பிரார்த்தனை செய்து கேட்கும் வாசகங்களை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 10 தடவை ஸுப்ஹானல்லாஹ் என்று கூறு! 10 தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறு! 10 தடவை அல்லாஹு அக்பர் என்று கூறு! பின்னர் உனது தேவையை (அல்லாஹ்விடம்) கேள்! அல்லாஹ், “சரி; சரி (நான் அதை விரைவில் நிறைவேற்றுகிறேன்) என்று கூறுவான்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


جَاءَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ : يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي كَلِمَاتٍ أَدْعُو بِهِنَّ فِي صَلَاتِي، قَالَ : ” سَبِّحِي اللَّهَ عَشْرًا، وَاحْمَدِيهِ عَشْرًا، وَكَبِّرِيهِ عَشْرًا، ثُمَّ سَلِيهِ حَاجَتَكِ، يَقُلْ : نَعَمْ نَعَمْ


Nasaayi-1355

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1355. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை கை விரல்களால்) எண்ணுவதை பார்த்தேன்.


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ»


Nasaayi-1348

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1348. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரண்டு நற்செயல்களை வழமையாக கடைப்பிடித்து வரும் முஸ்லிமான மனிதர் கண்டிப்பாக சுவர்க்கத்தில் நுழைவார். அவ்விரண்டும் (கடைப்பிடித்துவர ) எளிதானவை தான். ஆனால் அதை செய்பவர்கள் குறைவானவர்களே!

(அவ்விரண்டில் முதலாவது) உங்களில் ஒருவர், ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ் 10-பத்து தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 10-பத்து தடவையும், அல்லாஹு அக்பர் 10-பத்து தடவையும் கூறுவதாகும்.

இவைகள் (ஐந்து நேர தொழுகையின் மொத்த எண்ணிக்கை, நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பது ஆகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி ) 1500-ஆயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.

மேலும் (அவ்விரண்டில் இரண்டாவது) அவர் படுக்கையில் (தூங்கும் முன்) ஸுப்ஹானல்லாஹ் 33-தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33-தடவையும்,  அல்லாஹு அக்பர் 34-தடவையும் கூறுவதாகும். இவைகள் நாவில் நூறு தடவையாகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் 1000-ஆயிரம் நன்மைகளாகும்.(ஆக மொத்த நன்மைகள் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்)  என்று கூறிய  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  “உங்களில் யார் தான் (ஒரு நாளில்) இரவிலும், பகலிலும் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு தீமைகளை செய்வார்? எனக் கேட்டார்கள்.

இதை அறிவித்த அப்துல்லாஹ்

«خَلَّتَانِ لَا يُحْصِيهِمَا رَجُلٌ مُسْلِمٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ، وَهُمَا يَسِيرٌ، وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ» قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الصَّلَوَاتُ الْخَمْسُ، يُسَبِّحُ أَحَدُكُمْ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ عَشْرًا، وَيَحْمَدُ عَشْرًا، وَيُكَبِّرُ عَشْرًا، فَهِيَ خَمْسُونَ وَمِائَةٌ فِي اللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُ مِائَةٍ فِي الْمِيزَانِ»، وَأَنَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُهُنَّ بِيَدِهِ، «وَإِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ أَوْ مَضْجَعِهِ سَبَّحَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَحَمِدَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَكَبَّرَ أَرْبَعًا وَثَلَاثِينَ، فَهِيَ مِائَةٌ عَلَى اللِّسَانِ، وَأَلْفٌ فِي الْمِيزَانِ»، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَأَيُّكُمْ يَعْمَلُ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ أَلْفَيْنِ وَخَمْسَ مِائَةِ سَيِّئَةٍ؟» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ لَا نُحْصِيهِمَا؟ فَقَالَ: ” إِنَّ الشَّيْطَانَ يَأْتِي أَحَدَكُمْ وَهُوَ فِي صَلَاتِهِ، فَيَقُولُ: اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا، وَيَأْتِيهِ عِنْدَ مَنَامِهِ فَيُنِيمُهُ


Nasaayi-5142

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5142. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது :

ஒரு தடவை நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது, ஒரு பெண்மணி வந்து அல்லாஹ்வின் தூதரே! இந்த இரு தங்க காப்புகளை அணியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நெருப்பாலான இரு காப்புகளை நீ அணிந்துக் கொள்வாயா? என்று கூறினார்கள்.

அடுத்து அந்த பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! இந்த தங்க கழுத்தணியை அணியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நெருப்பாலான கழுத்தணியை நீ அணிந்துக் கொள்வாயா? என்று கூறினார்கள். அடுத்து அந்த பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! இந்த இரு தங்க காதணிகளை அணியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நெருப்பாலான இரு காதணிகளை நீ அணிந்துக் கொள்வாயா? என்று கூறினார்கள். அந்த பெண்மணி தான் அணிந்திருந்த இரு தங்கக் காப்புகளையும் கழட்டி எறிந்துவிட்டார்.

மேலும் அந்த பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண் அலங்காரம் செய்யாமல்  இருந்தால் கணவனிடத்தில் எந்த மதிப்பும் இல்லையே என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வெள்ளியினால் இரு காதணி செய்து அதற்கு  குங்குமப்பூ அல்லது அபீர் மூலம் தங்கத்தை போன்ற நிறமிட்டு அணிவதை யாரும் தடுக்கவில்லையே என்று கூறினார்கள்.

மேற்கண்ட வாசகம் இப்னு ஹர்பின் நூலில் உள்ள வாசகமாகும்.


كُنْتُ قَاعِدًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ، قَالَ: «سِوَارَانِ مِنْ نَارٍ» قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، طَوْقٌ مِنْ ذَهَبٍ قَالَ: «طَوْقٌ مِنْ نَارٍ» قَالَتْ: قُرْطَيْنِ مِنْ ذَهَبٍ، قَالَ: «قُرْطَيْنِ مِنْ نَارٍ» قَالَ: وَكَانَ عَلَيْهِمَا سِوَارَانِ مِنْ ذَهَبٍ، فَرَمَتْ بِهِمَا، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْمَرْأَةَ إِذَا لَمْ تَتَزَيَّنْ لِزَوْجِهَا صَلِفَتْ عِنْدَهُ، قَالَ: «مَا يَمْنَعُ إِحْدَاكُنَّ أَنْ تَصْنَعَ قُرْطَيْنِ مِنْ فِضَّةٍ، ثُمَّ تُصَفِّرَهُ بِزَعْفَرَانٍ أَوْ بِعَبِيرٍ»

اللَّفْظُ لِابْنِ حَرْبٍ


Next Page » « Previous Page