Category: நஸாயி

Nasaayi-1574

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1574. ஸிமாக் பின் ஹர்ப் (ரஹ்)அறிவித்தார்:

நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் உரையை நின்றவாறு நிகழ்த்துவார்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,  நபி (ஸல்) அவர்கள் உரையை நின்றவாறு நிகழ்த்தி பிறகு சிறிது உட்கார்ந்து பிறகு எழுந்து உரை நிகழ்த்துவார்கள்; என்று கூறினார்கள்.


سَأَلْتُ جَابِرًا أَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ قَائِمًا؟، فَقَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَخْطُبُ قَائِمًا، ثُمَّ يَقْعُدُ قَعْدَةً، ثُمَّ يَقُومُ»


Nasaayi-5

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பல் துலக்குவது வாய்க்குத் தூய்மையாகும்! இறைவனுக்குத் திருப்தியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ، مَرْضَاةٌ لِلرَّبِّ


Nasaayi-2559

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2559. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

வீண்விரயமும், பெருமையும் இல்லாமல் சாப்பிடுங்கள், தர்மம் செய்யுங்கள், (ஆடை) அணிந்துகொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«كُلُوا، وَتَصَدَّقُوا، وَالْبَسُوا فِي غَيْرِ إِسْرَافٍ، وَلَا مَخِيلَةٍ»


Nasaayi-3235

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3235. முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (இருக்கும் போது)  அவர்களிடம் சென்று எனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான் இல்லை என்று கூறினேன். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்’ என்று கூறினார்கள்.


خَطَبْتُ امْرَأَةً عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَظَرْتَ إِلَيْهَا؟» قُلْتُ: لَا، قَالَ: «فَانْظُرْ إِلَيْهَا، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا»


Nasaayi-1508

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1508 . நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பணிவாகவும், உள்ளச்சத்துடனும், அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது செய்யும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الِاسْتِسْقَاءِ، فَقَالَ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَبَذِّلًا، مُتَوَاضِعًا، مُتَضَرِّعًا، فَجَلَسَ عَلَى الْمِنْبَرِ فَلَمْ يَخْطُبْ خُطْبَتَكُمْ هَذِهِ، وَلَكِنْ لَمْ يَزَلْ فِي الدُّعَاءِ وَالتَّضَرُّعِ وَالتَّكْبِيرِ، وَصَلَّى رَكْعَتَيْنِ كَمَا كَانَ يُصَلِّي فِي الْعِيدَيْنِ»


Nasaayi-2108

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

2108. அர்ஃபஜா பின் அப்துல்லாஹ் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு வீட்டில் இருந்தேன். அங்கு உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களும் இருந்தார்கள். நான் ஒரு ஹதீஸ் சொல்ல விரும்பினேன். ஆனால் அங்கு நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் (வேறு) ஒருவரும் இருந்தார். அவர் ஹதீஸ் சொல்வதற்கு என்னை விட மிகவும் தகுதியானவர் போல் தோன்றியது.

(அவரிடம், உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்கள், “ரமளான் மாதம் குறித்து நீங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட ஹதீஸை எங்களுக்கு கூறுங்கள்” என்று கேட்க) அவர் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் மாதத்தில், வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன; மேலும் ஒவ்வொரு கெட்ட ஷைத்தானும் விலங்கிடப்படுகிறான்.

மேலும் (வானவர்களில்) ஒரு அழைப்பாளர், “நன்மையை தேடுவோரே! வாருங்கள். தீமையை தேடுவோரே! (அதை) தவிர்த்து விடுங்கள்” என்று ஒவ்வொரு இரவிலும் அழைக்கிறார்.


كُنْتُ فِي بَيْتٍ فِيهِ عُتْبَةُ بْنُ فَرْقَدٍ، فَأَرَدْتُ أَنْ أُحَدِّثَ بِحَدِيثٍ، وَكَانَ رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَأَنَّهُ أَوْلَى بِالْحَدِيثِ مِنِّي، فَحَدَّثَ الرَّجُلُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” فِي رَمَضَانَ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ النَّارِ، وَيُصَفَّدُ فِيهِ كُلُّ شَيْطَانٍ مَرِيدٍ، وَيُنَادِي مُنَادٍ كُلَّ لَيْلَةٍ: يَا طَالِبَ الْخَيْرِ هَلُمَّ، وَيَا طَالِبَ الشَّرِّ أَمْسِكْ


Nasaayi-1027

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ருகூவில் முதுகுத் தண்டை நேராக வைத்தல்.

1027. ருகூவிலும், ஸுஜூதிலும் தமது முதுகுத் தண்டை (வளைவின்றி) நேராக ஆக்காதவருக்கு தொழுகை கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அன்சாரி (ரலி)


«لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يُقِيمُ الرَّجُلُ فِيهَا صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ»


Nasaayi-3140

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நன்மையையும், புகழையும் எதிர்ப்பார்த்து அறப்போர் செய்தவர்.

3140. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ்விடம்) கூலியையும், (மக்களிடம்) புகழையும் எதிர்ப்பார்த்து அறப்போர் செய்பவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?; அவருக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு ஒன்றும் கிடைக்காது” என்று பதிலளித்தார்கள்.

அவர் இதையே திரும்ப திரும்ப மூன்று தடவை கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு ஒன்றும் கிடைக்காது” என்று பதிலளித்துவிட்டு, “அல்லாஹ்விற்காக கலப்பற்ற முறையில் மனத்தூய்மையுடனும், அவனது திருப்தி மட்டும் எதிர்ப்பார்த்து செய்யப்படும் நல்லறத்தைத் தவிர வேறு எதனையும் அல்லாஹ் ஏற்க மாட்டான்” என்று கூறினார்கள்.


جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَرَأَيْتَ رَجُلًا غَزَا يَلْتَمِسُ الْأَجْرَ وَالذِّكْرَ، مَالَهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» فَأَعَادَهَا ثَلَاثَ مَرَّاتٍ، يَقُولُ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا كَانَ لَهُ خَالِصًا، وَابْتُغِيَ بِهِ وَجْهُهُ»


Nasaayi-5607

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5607 . “அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«مَا أَسْكَرَ كَثِيرُهُ، فَقَلِيلُهُ حَرَامٌ»


Nasaayi-1578

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1578 . …செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மதாகிய எனது நடைமுறையாகும். காரியங்களில் மிகத்தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாக்கப்படும் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ يَقُولُ: «مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ»، ثُمَّ يَقُولُ: «بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ»، وَكَانَ إِذَا ذَكَرَ السَّاعَةَ احْمَرَّتْ وَجْنَتَاهُ، وَعَلَا صَوْتُهُ، وَاشْتَدَّ غَضَبُهُ كَأَنَّهُ نَذِيرُ جَيْشٍ يَقُولُ: صَبَّحَكُمْ مَسَّاكُمْ، ثُمَّ قَالَ: «مَنْ تَرَكَ مَالًا فَلِأَهْلِهِ، وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَإِلَيَّ أَوْ عَلَيَّ، وَأَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ»


Next Page » « Previous Page