Category: நஸாயி

Nasaayi-886

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

886. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் “அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா” (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், “நான்தான் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் இதைக் கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டதிலிருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.


بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: اللَّهِ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهُ بُكْرَةً وَأَصِيلًا. فَقَالَ رَسُولِ اللَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنَ الْقَائِلُ كَلِمَةَ كَذَا وَكَذَا؟» فَقَالَ رَجُلٌ مَنَ الْقَوْمِ: أَنَا يَا رَسُولُ اللَّهِ. قَالَ: «عَجِبْتُ لَهَا – وَذَكَرَ كَلِمَةَ مَعْنَاهَا – فُتِحَتْ لَهَا أَبْوَابُ السَّمَاءِ» قَالَ ابْنُ عُمَرَ: مَا تَرَكْتُهُ مُنْذُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُهُ


Nasaayi-885

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

தொழுகையின் ஆரம்ப வார்த்தை.

885. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் தொழ நின்றார். அப்போது அவர், “அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா” (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார்.

(தொழுகை முடிந்த பிறகு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த வார்த்தைகளை கூறியவர் யார்? என்று கேட்டார்கள். அந்த மனிதர் “நான்தான் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அந்த வார்த்தையை பெறுவதற்கு 12 வானவர்கள் போட்டியிட்டுக் கொண்டார்கள் என்று கூறினார்கள்.


قَامَ رَجُلٌ خَلْفَ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: اللَّهِ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا. فَقَالَ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَاحِبُ الْكَلِمَةِ؟» فَقَالَ رَجُلٌ: أَنَا يَا نَبِيُّ اللَّهِ. فَقَالَ: «لَقَدْ ابْتَدَرَهَا اثْنَا عَشَرَ مَلَكًا»


Nasaayi-3460

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3460. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அனைத்து சப்தங்களையும் செவியேற்கும் செவுப்புலன் கொண்ட அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! நபி (ஸல்) அவர்களிடம் கவ்லா பின்த் ஸஃலபா (ரலி) அவர்கள் வந்து தன் கணவனைப் பற்றி வாக்குவாதம் செய்தார். அவர் கூறியது எனக்கு சரியாக கேட்கவில்லை. (ஆனால் அல்லாஹ் விரைவாக) “தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்” எனும் (அல்குர்ஆன் 58:1) வசனத்தை இறக்கி அருளினான்.

அறிவிப்பவர்: உர்வா (ரஹ்)


الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَسِعَ سَمْعُهُ الْأَصْوَاتَ، لَقَدْ جَاءَتْ خَوْلَةُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشْكُو زَوْجَهَا، فَكَانَ يَخْفَى عَلَيَّ كَلَامُهَا، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا} [المجادلة: 1] ” الْآيَةَ


Nasaayi-907

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

907. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னாலும், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) போன்றோர் பின்னாலும் நான் (தொழ) நின்றுள்ளேன். அவர்களில் யாரும் (தொழுகையை ஆரம்பிக்கும் போது) பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை சத்தமாக ஓதி நான் கேட்டதில்லை.


«صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ رَضِيَ اللَّهِ عَنْهُمْ، فَلَمْ أَسْمَعْ أَحَدًا مِنْهُمْ يَجْهَرُ {بِبِسْمِ اللَّهُ الرَّحْمَنِ الرَّحِيمِ}»


Nasaayi-906

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

906.


«صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يُسْمِعْنَا قِرَاءَةَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، وَصَلَّى بِنَا أَبُو بَكْرٍ وَعُمَرُ فَلَمْ نَسْمَعْهَا مِنْهُمَا»


Nasaayi-903

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

903. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பின்னாலும், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) போன்றோர் பின்னாலும் நான் (தொழ) நின்றுள்ளேன். அவர்கள் ஒவ்வொருவரும் தொழுகையை ஆரம்பிக்கும் போது, “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர்.


صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَ أَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَافْتَتَحُوا بِ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]


Nasaayi-902

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(துணை) ஸூராவிற்கு முன் திருக்குர்ஆனின் தோற்றுவாயை (ஓதி) ஆரம்பித்தல்.

902. நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَسْتَفْتِحُونَ الْقِرَاءَةَ بِ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]


Nasaayi-5113

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5113.


«إِنَّ مِنْ خَيْرِ أَكْحَالِكُمُ الْإِثْمِدَ إِنَّهُ يَجْلُو الْبَصَرَ، وَيُنْبِتُ الشَّعَرَ»


Nasaayi-1432

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1432.


«إِنَّ فِي الْجُمُعَةِ سَاعَةً لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ عَزَّ وَجَلَّ شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ» قُلْنَا: يُقَلِّلُهَا يُزَهِّدُهَا،


Nasaayi-1431

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1431.


«إِنَّ فِي الْجُمُعَةِ سَاعَةً لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ فِيهَا شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ»


Next Page » « Previous Page