Category: நஸாயி

Nasaayi-4095

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4095. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார். யார் தன்னுடைய குடும்பத்தை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார். யார் தன்னுடைய மார்க்கத்திற்காக கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார். யார் தன்னை பாதுகாப்பதற்கு போரிட்டு கொல்லப்படுகிறோரோ அவரும் ஷஹீதாவார்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قُتِلَ دُونَ أَهْلِهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قُتِلَ دُونَ دِينِهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قُتِلَ دُونَ دَمِهِ فَهُوَ شَهِيدٌ»


Nasaayi-4094

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4094. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார். யார் தன்னை பாதுகாப்பதற்கு போரிட்டு கொல்லப்படுகிறோரோ அவரும் ஷஹீதாவார். யார் தன்னுடைய குடும்பத்தை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«مَنْ قَاتَلَ دُونَ مَالِهِ فَقُتِلَ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قَاتَلَ دُونَ دَمِهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قَاتَلَ دُونَ أَهْلِهِ فَهُوَ شَهِيدٌ»


Nasaayi-4091

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4091. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«مَنْ قَاتَلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»


Nasaayi-4090

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4090. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»


Nasaayi-2577

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2577.


«السَّاعِي عَلَى الْأَرْمَلَةِ، وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ»


Nasaayi-811

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

811


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَلَّلُ الصُّفُوفَ مِنْ نَاحِيَةٍ إِلَى نَاحِيَةٍ يَمْسَحُ مَنَاكِبَنَا وَصُدُورَنَا وَيَقُولُ: «لَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ». وَكَانَ يَقُولُ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصُّفُوفِ الْمُتَقَدِّمَةِ»


Nasaayi-646

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

646


«إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصَّفِّ الْمُقَدَّمِ، وَالْمُؤَذِّنُ يُغْفَرُ لَهُ بِمَدِّ صَوْتِهِ وَيُصَدِّقُهُ مَنْ سَمِعَهُ مِنْ رَطْبٍ وَيَابِسٍ، وَلَهُ مِثْلُ أَجْرِ مَنْ صَلَّى مَعَهُ»


Nasaayi-7

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 7

நோன்பாளி மாலையில் பல்துலக்க அனுமதி.

7 . அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் சமுதாயத்திற்கு சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற நிலை மட்டும் இல்லாவிட்டால், ஒவ்வொரு தொழுகைக்காகவும் அவர்கள் பல்துலக்க வேண்டும் என்று நான் ஆணையிட்டிருப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ»


Nasaayi-534

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

534.


«لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِتَأْخِيرِ الْعِشَاء عِنْدَ كُلِّ صَلَاةٍ»


Nasaayi-1374

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1374. நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்று தான் மரணித்தார்கள். அன்று தான் உலகத்தை அழிக்க சூர் ஊதப்படும். அன்று தான் எழுப்புதல் நிகழும். எனவே அன்றைய தினம் எனக்காக அதிகம் சலவாத் கூறுங்கள். நீங்கள் கூறும் சலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மக்கிப் போன நிலையில் எங்கள் சலவாத் எப்படி உங்களுக்கு எடுத்துக் காட்டப்படும் என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபிமார்களின் உடல்களை மண் சாப்பிடுவதை அல்லாஹ் தடுத்து விட்டான் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி)


«إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَامُ، وَفِيهِ قُبِضَ، وَفِيهِ النَّفْخَةُ، وَفِيهِ الصَّعْقَةُ، فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ، فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ»

قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ، وَقَدْ أَرَمْتَ أَيْ يَقُولُونَ قَدْ بَلِيتَ؟ قَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ السَّلَامُ»


Next Page » « Previous Page