Category: நஸாயி

Nasaayi-603

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

603. நான், (ஒரு தடவை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பின்னால் (லுஹர், அஸரை) எட்டு ரக்அத்களாக ஒரே நேரத்திலும், (மஃக்ரிப், இஷாவை) ஏழு ரக்அத்களாக ஒரே நேரத்திலும் தொழுதேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«صَلَّيْتُ وَرَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانِيًا جَمِيعًا وَسَبْعًا جَمِيعًا»


Nasaayi-602

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

602. நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்தில் இவ்வாறு செய்தார்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கருதினார்கள்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي بِالْمَدِينَةِ يَجْمَعُ بَيْنَ الصَّلَاتَيْنِ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَالْمَغْرِبِ وَالْعِشَاء مِنْ غَيْرِ خَوْفٍ وَلَا مَطَرٍ». قِيلَ لَهُ: لِمَ؟ قَالَ: «لِئَلَّا يَكُونَ عَلَى أُمَّتِهِ حَرَجٌ»


Nasaayi-601

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

உள்ளூரில் இரு தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்.

601. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ பயணத்திலோ அவர்கள் இருக்கவில்லை.


«صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا، وَالْمَغْرِبَ وَالْعِشَاء جَمِيعًا مِنْ غَيْرِ خَوْفٍ وَلَا سَفَرٍ»


Nasaayi-590

ஹதீஸின் தரம்: More Info

590. ஜஅஃபர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், பஸராவில் (இருக்கும் போது) ஒரு வேலையின் காரணமாக முதல் தொழுகை லுஹரையும், அஸர் தொழுகையையும் (இடையில் கூடுதல் தொழுகைகள் ஏதும் தொழாமல்) சேர்ந்தாற்போல் தொழுதார்கள். அவ்வாறே மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளை (இடையில் கூடுதல் தொழுகைகள் ஏதும் தொழாமல்) சேர்ந்தாற்போல் தொழுதார்கள்.

மேலும் அவர்கள், தான் மதீனாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் முதல் தொழுகையான லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் (இடையில் கூடுதல் தொழுகைகள் ஏதும் தொழாமல்) சேர்ந்தாற்போல் எட்டு ரக்அத்களாக தொழுததாகவும் கூறினார்கள்.


«أَنَّهُ صَلَّى بِالْبَصْرَةِ الْأُولَى، وَالْعَصْرَ لَيْسَ بَيْنَهُمَا شَيْءٌ، وَالْمَغْرِبَ وَالْعِشَاء لَيْسَ بَيْنَهُمَا شَيْءٌ فَعَلَ ذَلِكَ مِنْ شُغْلٍ». وَزَعَمَ ابْنُ عَبَّاسٍ «أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ الْأُولَى، وَالْعَصْرَ ثَمَانِ سَجَدَاتٍ لَيْسَ بَيْنَهُمَا شَيْءٌ»


Nasaayi-589

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

589. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன், மதீனாவில் எட்டு ரக்அத் (கொண்ட லுஹர், அஸர் ஆகிய தொழுகை)களை ஒரே நேரத்தில் தொழுதிருக்கிறேன்; ஏழு ரக்அத் (கொண்ட மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகை)களை ஒரே நேரத்தில் தொழுதிருக்கிறேன்.

அதில் லுஹர் தொழுகையைத் தாமதப்படுத்தி அஸரின் ஆரம்ப நேரத்திலும், மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி இஷாவின் ஆரம்ப நேரத்திலும் தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸைத் (ரஹ்)


«صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ ثَمَانِيًا جَمِيعًا وَسَبْعًا جَمِيعًا،

أَخَّرَ الظُّهْرَ وَعَجَّلَ الْعَصْرَ، وَأَخَّرَ الْمَغْرِبَ وَعَجَّلَ الْعِشَاء»


Nasaayi-1366

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒரு மனிதரிடம் “நீ தொழுதுவிட்டீரா? என்று கேட்கப்பட, அவர் “இல்லை” என்று கூறலாமா?

1366. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக் குல இறைமறுப்பாளர்களை ஏசிக்கொண்டே (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையத் தொடங்கும்வரை என்னால் அஸ்ர் தொழுகை தொழ முடியாமல் போய்விட்டது” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அதை (இதுவரை) தொழவில்லை” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவிலுள்ள) புத்ஹான் எனும் பள்ளத்தாக்கில் இறங்கினோம். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். நாங்களும் அங்கத் தூய்மை செய்தோம். (அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த பிறகு அஸ்ர் தொழுதார்கள். அதன் பிறகு மஃக்ரிப் தொழுதார்கள்…


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَوْمَ الْخَنْدَقِ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ جَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ، وَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا كِدْتُ أَنْ أُصَلِّيَ حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَوَاللَّهِ مَا صَلَّيْتُهَا»، فَنَزَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بُطْحَانَ «فَتَوَضَّأَ لِلصَّلَاةِ وَتَوَضَّأْنَا لَهَا، فَصَلَّى الْعَصْرَ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ»


Nasaayi-871

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

871. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூவு செய்து கொண்டிருந்த போது நான் (பள்ளிக்கு) வந்தேன். தொழுகையின் வரிசையில் சேருவதற்கு முன்னே ருகூவு செய்து (பிறகு நடந்து வந்து வரிசையில் சேர்ந்து) கொண்டேன்.

(தொழுகையை முடித்த பிறகு) நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹஸன் (ரஹ்)


أَنَّ أَبَا بَكْرَةَ حَدَّثَهُ، أَنَّهُ دَخَلَ الْمَسْجِدَ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاكِعٌ فَرَكَعَ دُونَ الصَّفِّ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «زَادَكَ اللَّهُ حِرْصًا وَلَا تَعُدْ»


Nasaayi-920

ஹதீஸின் தரம்: Pending

920.


صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْضَ الصَّلَوَاتِ الَّتِي يُجْهَرُ فِيهَا بِالْقِرَاءَةِ فَقَالَ: «لَا يَقْرَأَنَّ أَحَدٌ مِنْكُمْ إِذَا جَهَرْتُ بِالْقِرَاءَةِ إِلَّا بِأُمِّ الْقُرْآنِ»


Nasaayi-911

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

911.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ فَصَاعِدًا»


Nasaayi-910

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

910.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ»


Next Page » « Previous Page