Category: நஸாயி
Nasaayi-968
968. அபூராஃபிஉ நுஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் இஷாத் தொழுகையைத் தொழுதேன். அவர்கள் “இதஸ்ஸமாஉன் ஷக்கத்…” (எனத் தொடங்கும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி, (சஜ்தா வசனம் வந்த) உடன் அதில் சஜ்தாச் செய்தார்கள். நான் அவர்களிடம், “இது என்ன?” நாங்கள் இதற்கு சஜ்தாச் செய்ததில்லையே! என்று கூறினேன். அதற்கு அவர்கள், “நான் அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுதபோது தொழுகையிலேயே) இ(ந்த அத்தியாயத்தை ஓதிய)தற்காகச் சஜ்தாச் செய்திருக்கிறேன். அவர்களை நான் சந்திக்கும்வரை (அதாவது நான் இறக்கும்வரை) அ(தை ஓதிய)தற்காக நான் சஜ்தாச் செய்துகொண்டுதான் இருப்பேன்” என்று சொன்னார்கள்.
صَلَّيْتُ خَلْفَ أَبِي هُرَيْرَةَ صَلَاةَ الْعِشَاء يَعْنِي الْعَتَمَةَ «فَقَرَأَ سُورَةَ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ فَسَجَدَ فِيهَا». فَلَمَّا فَرَغَ قُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ هَذِهِ – يَعْنِي سَجْدَةً – مَا كُنَّا نَسْجُدُهَا. قَالَ: «سَجَدَ بِهَا أَبُو الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا خَلْفَهُ» فَلَا أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Nasaayi-967
967. “இதஸ்மாஉன் ஷக்கத்” (84), “இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க” (96) ஆகிய அத்தியாயங்களை ஓதி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சஜ்தாச் செய்துள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«سَجَدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، وَاقْرَأْ بِاسْمِ رَبِّكَ»
Nasaayi-966
966. அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும், அவ்விருவரையும்விட சிறந்தவரான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், இதஸ்மாஉன் ஷக்கத்” (84), “இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க” (96) ஆகிய அத்தியாயங்களை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
«سَجَدَ أَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَمَنْ هُوَ خَيْرٌ مِنْهُمَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، وَاقْرَأْ بِاسْمِ رَبِّكَ»
Nasaayi-965
965. அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் இதஸ்ஸமாவுன் ஷக்கத் அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள்.
அவ்விருவரையும்விட சிறந்தவரான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், இதஸ்ஸமாவுன் ஷக்கத் அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
«سَجَدَ أَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ وَمَنْ هُوَ خَيْرٌ مِنْهُمَا»
Nasaayi-963
963. நாங்கள் “இதஸ்மாஉன் ஷக்கத்” (84), “இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க” (96) ஆகிய அத்தியாயங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சஜ்தாச் செய்தோம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«سَجَدْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، وَاقْرَأْ بِاسْمِ رَبِّكَ»،
Nasaayi-962
962. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இதஸ்ஸமாவுன் ஷக்கத் அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
«سَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ»
Nasaayi-961
பாடம்:
இதஸ்மாஉன் ஷக்கத் எனும் (84ஆவது) அத்தியாயத்தின் வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்தல்.
961. அபூஹுரைரா (ரலி) அவர்கள் (தொழுகையில்) எங்களுக்கு “இதஸ்ஸமாஉன் ஷக்கத்” எனும் (84ஆவது) அத்தியாயத்தை ஓதி அதில் (சஜ்தா வசனம் (21) வந்ததும்) சஜ்தாச் செய்தார்கள். அவர்கள் தொழுது முடித்துத் திரும்பிய பின் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஓதியபோது சஜ்தாச் செய்தார்கள்” எனத் தெரிவித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)
أَنَّ أَبَا هُرَيْرَةَ، «قَرَأَ بِهِمْ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ فَسَجَدَ فِيهَا»، فَلَمَّا انْصَرَفَ أَخْبَرَهُمْ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ فِيهَا»
Nasaayi-1817
1817. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுது வருபவரை, நரகம் தீண்டாது.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)
அபூஅப்துர்ரஹ்மான்-நஸாயீ இமாம் கூறுகிறார்:
இந்த அறிவிப்பாளர்தொடர் தவறாகும். ஸயீத் பின் அப்துல்அஸீஸ் அவர்களிடமிருந்து மர்வான் அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடரே உண்மையானதாகும்.
«مَنْ صَلَّى أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعًا بَعْدَهَا لَمْ تَمَسَّهُ النَّارُ»،
Nasaayi-1816
1816. ஸுலைமான் பின் மூஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஹம்மது பின் அபூஸுஃப்யான் (ரஹ்) அவர்களுக்கு மரணம் நெருங்கியபோது அவருக்கு அது கடுமையான மனவருத்தத்தை ஏற்படுத்தியது.
அப்போது அவர், “லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரின் உடலை, அல்லாஹ் நரகத்திற்கு தடைசெய்து விடுகிறான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக எனது சகோதரியும்; அபூஸுஃப்யான் அவர்களின் மகளுமான உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்று கூறினார்.
لَمَّا نَزَلَ بِهِ الْمَوْتُ أَخَذَهُ أَمْرٌ شَدِيدٌ، فَقَالَ: حَدَّثَتْنِي أُخْتِي أُمُّ حَبِيبَةَ بِنْتُ أَبِي سُفْيَانَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعٍ بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ تَعَالَى عَلَى النَّارِ»
சமீப விமர்சனங்கள்