Category: நஸாயி

Nasaayi-458

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

458. (நஜ்துப் பகுதியைச் சேர்ந்த) கிராமவாசி ஒருவர் தலைவிரி கோலத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ள தொழுகை பற்றிக் கூறுங்கள்’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(நாளொன்றுக்கு) ஐவேளை தொழுகைகள் (உன் மீது கடமையாகும்); நீயாக விரும்பிக் கூடுதலாக ஏதேனும் தொழுது கொண்டால் தவிர’ என்றார்கள். அவர், ‘அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ள நோன்பு பற்றிக் கூறுங்கள்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘ரமளான் மாதம் முழுவதும் நீ நோன்பு நோற்பது உன் மீது கடமையாகும்); நீயாக விரும்பிக் கூடுதலாக ஏதேனும் நோன்பு நோற்றால் தவிர’ என்றார்கள்.

தொடர்ந்து அவர், அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ள ஸகாத் பற்றிக் கூறுங்கள்’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஸகாத் உள்பட) இஸ்லாமிய சன்மார்க்க நெறிகளை அவருக்குத் தெரிவித்தார்கள். அவர், ‘உங்களைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீது சத்தியமாக! நான் (இவற்றில்) எதனையும் கூடுதலாகச் செய்யமாட்டேன். அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ளவற்றில் எதனையும் நான் குறைக்கவுமாட்டேன்’ என்று கூறிவிட்டுத் திரும்பிச் செல்லலா)னார்.

அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இவர் (தாம் கூறியபடி) உண்மையாக நடந்தால் ‘வெற்றியடைவார்’ அல்லது இவர் (கூறியபடி) உண்மையாக நடந்தால் சொர்க்கத்தில்

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ نَسْمَعُ دَوِيَّ صَوْتِهِ وَلَا نَفْهَمُ مَا يَقُولُ حَتَّى دَنَا، فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الْإِسْلَامِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ». قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُنَّ؟ قَالَ: «لَا. إِلَّا أَنْ تَطَّوَّعَ». قَالَ: وَصِيَامُ شَهْرِ رَمَضَانَ. قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: «لَا. إِلَّا أَنْ تَطَّوَّعَ». وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ. قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لَا. إِلَّا أَنْ تَطَّوَّعَ». فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا وَلَا أَنْقُصُ مِنْهُ. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ إِنْ صَدَقَ»


Nasaayi-2188

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2188. ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது பொறித்த ஆட்டுக்கறி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவர்கள், உண்ணுங்கள் என்று கூறினார்கள். சிலர் விலகிச் சென்று நாங்கள் நோன்பு வைத்துள்ளோம் என்று கூறினர். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காஸிம்-நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார் என்றுக் கூறினார்கள்.


كُنَّا عِنْدَ عَمَّارٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: كُلُوا، فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، قَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Nasaayi-4280

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4280. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாய்களும் உங்களைப் போன்ற (உயிருள்ள) சமுதாயங்களில் ஒரு சமுதாயமாக இல்லாவிட்டால் அவைகளை கொல்ல உங்களுக்கு கட்டளையிட்டிருப்பேன். என்றாலும் (மனிதர்களுக்கு தொல்லைதரும்) கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள்.

எந்த கூட்டத்தினர் (தமது இல்லத்தில்) நாய் வளர்க்கின்றனரோ அவர்களுடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு “கீராத்”(கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ, கால்நடைகளைக் காவல் காப்பதற்காகவோ வைத்திருக்கும் நாயைத் தவிர.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)


«لَوْلَا أَنَّ الْكِلَابَ أُمَّةٌ مِنَ الْأُمَمِ لَأَمَرْتُ بِقَتْلِهَا فَاقْتُلُوا مِنْهَا الْأَسْوَدَ الْبَهِيمَ، وَأَيُّمَا قَوْمٍ اتَّخَذُوا كَلْبًا لَيْسَ بِكَلْبِ حَرْثٍ، أَوْ صَيْدٍ، أَوْ مَاشِيَةٍ، فَإِنَّهُ يَنْقُصُ مِنْ أَجْرِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ»


Nasaayi-2899

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2899. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) “(மக்காவின்) கஃபா” பள்ளிவாசலைத் தவிர.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا، أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ، إِلَّا الْكَعْبَةَ»


Nasaayi-694

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

694. மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடைசி நபியாவார்கள். அவர்களின் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியும் கடைசியாகும் என்று அபூ ஹுரைரா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: அபூஸலமா (ரஹ்), அபூ அப்துல்லாஹ் ஸல்மான் (ரஹ்)

அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் மற்றொரு மாணவர் அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள், இந்த செய்தியை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்ததை நான் கேட்டுள்ளேன் என்று நான் சாட்சி கூறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு: மஸ்ஜிதுந் நபவீ கடைசி பள்ளிவாசல் என்பதின் பொருள், சிறப்புமிக்க மூன்று பள்ளிவாசல்களில் கடைசி பள்ளிவாசல் என்பதாகும் என்று சிலர் கூறியுள்ளனர்.


«صَلَاةٌ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ مِنَ الْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ؛ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آخِرُ الْأَنْبِيَاءِ , وَمَسْجِدَهُ آخِرُ الْمَسَاجِدِ»

قَالَ أَبُو سَلَمَةَ وَأَبُو عَبْدِ اللَّهِ: لَمْ نَشُكَّ أنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَقُولُ عَنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَمَنَعَنَا أنْ نَسْتَثْبِتَ أَبَا هُرَيْرَةَ فِي ذَلِكَ الْحَدِيثِ , حَتَّى إِذَا تُوُفِّيَ أَبُو هُرَيْرَةَ ذَكَرْنَا ذَلِكَ وَتَلَاوَمْنَا أَنْ لَا نَكُونَ كَلَّمْنَا أَبَا هُرَيْرَةَ فِي ذَلِكَ حَتَّى يُسْنِدَهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ كانَ سَمِعَهُ مِنْهُ , فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ جَالَسْنَا عَبْدَ اللَّهِ بْنَ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ , فَذَكَرْنَا ذَلِكَ الْحَدِيثَ , وَالَّذِي فرَّطْنَا فِيهِ مِنْ نَصِّ أَبِي هُرَيْرَةَ فَقَالَ لَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ: أَشْهَدُ أَنِّي سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِنِّي آخِرُ الْأَنْبِيَاءِ , وَإِنَّهُ آخِرُ الْمَسَاجِدِ»


Nasaayi-2897

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2897. “எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) “மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளிவாசலைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«صَلَاةٌ فِي مَسْجِدِي أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ»


Nasaayi-4050

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4050. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடிமை (தன் எசமானர்களிடமிருந்து) ஓடிப் போய்விட்டால் அவனுடைய எந்தத் தொழுகையும் ஏற்றுக் கொள்ளப்படாது. (தொழுகையின் நன்மை கிடைக்காது.) அவன் அந்த நிலையில் மரணித்தால் இறைமறுப்பாளனாகவே மரணிப்பான்.

அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

 

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் ஒரு அடிமை ஓடிவிட்டான். அவர்கள் அவனைப் பிடித்து அவனின் கழுத்தைத் துண்டித்துவிட்டார்கள்.


إِذَا أَبَقَ الْعَبْدُ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ، وَإِنْ مَاتَ مَاتَ كَافِرًا،

وَأَبَقَ غُلَامٌ لِجَرِيرٍ فَأَخَذَهُ فَضَرَبَ عُنُقَهُ


Nasaayi-4049

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4049. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடிமை தன் எசமானர்களிடமிருந்து ஓடிப் போய்விட்டால் அவன் அவர்களிடம் திரும்பி வரும் வரை அவனுடைய எந்தத் தொழுகையும் ஏற்றுக் கொள்ளப்படாது. (தொழுகையின் நன்மை கிடைக்காது.)

அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«إِذَا أَبَقَ الْعَبْدُ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ حَتَّى يَرْجِعَ إِلَى مَوَالِيهِ»


Nasaayi-3227

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3227. ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) அந்தஸ்த்தும் மதிப்பும் உள்ள ஒரு பெண் எனக்குக் கிடைத்துள்ளாள். ஆனால் அவள் குழந்தையை பெற்றெடுக்கமாட்டாள். அவளை நான் திருமணம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (வேண்டாமென்று) அவரைத் தடுத்துவிட்டார்கள். இரண்டாவது முறையும் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போதும் தடுத்தார்கள். மூன்றாவது முறை அவர் வந்த போதும் நபி (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்தார்கள்.

அதிகம் குழந்தையைப் பெற்றெடுக்கும், அதிகம் விரும்பும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் (மறுமை நாளில்) உங்களின் மூலமாகத் தான் மாபெரும் சமுதாயத்திற்குரிய (நபியாக) நான் திகழுவேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யசார் (ரலி)


جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي أَصَبْتُ امْرَأَةً ذَاتَ حَسَبٍ وَمَنْصِبٍ، إِلَّا أَنَّهَا لَا تَلِدُ، أَفَأَتَزَوَّجُهَا؟ فَنَهَاهُ، ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ، فَنَهَاهُ، ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ، فَنَهَاهُ، فَقَالَ: «تَزَوَّجُوا الْوَلُودَ الْوَدُودَ، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ»


Nasaayi-4212

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4212.


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْعَقِيقَةِ فَقَالَ: «لَا يُحِبُّ اللَّهُ عَزَّ وَجَلَّ الْعُقُوقَ»، وَكَأَنَّهُ كَرِهَ الِاسْمَ، قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّمَا نَسْأَلُكَ أَحَدُنَا يُولَدُ لَهُ، قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يَنْسُكَ عَنْ وَلَدِهِ، فَلْيَنْسُكْ عَنْهُ عَنِ الْغُلَامِ شَاتَانِ مُكَافَأَتَانِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ» قَالَ دَاوُدُ سَأَلْتُ زَيْدَ بْنَ أَسْلَمَ عَنِ الْمُكَافَأَتَانِ قَالَ: «الشَّاتَانِ الْمُشَبَّهَتَانِ تُذْبَحَانِ جَمِيعًا»


Next Page » « Previous Page