Category: நஸாயி

Nasaayi-3655

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3655.

அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எது சிறந்த தர்மம்?’ என்று கேட்டேன். ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅது பின் உபாதா (ரலி)


أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمَّهُ تُوُفِّيَتْ أَفَيَنْفَعُهَا إِنْ تَصَدَّقْتُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَإِنَّ لِي مَخْرَفًا فَأُشْهِدُكَ أَنِّي قَدْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا


Nasaayi-3654

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3654. அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எது சிறந்த தர்மம்?’ என்று கேட்டேன். ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅது பின் உபாதா (ரலி)


أَنَّ سَعْدًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي مَاتَتْ وَلَمْ تُوصِ، أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»


Nasaayi-1986

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1986.


أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي الصَّلَاةِ عَلَى الْمَيِّتِ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا»


Nasaayi-2029

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கப்ரை, காரையால் பூசுவது.

2029. கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

 


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَجْصِيصِ الْقُبُورِ»


Nasaayi-2028

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கப்ரின் மீது கட்டடம் எழுப்புவது (தடை)

2028. கப்றுகளை காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும், அதன் மீது கட்டடம் எழுப்புவதையும், அதன் மீது மற்றவர்கள் அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَقْصِيصِ الْقُبُورِ، أَوْ يُبْنَى عَلَيْهَا، أَوْ يَجْلِسَ عَلَيْهَا أَحَدٌ»


Nasaayi-2027

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கப்ரின் மீது (தோண்டிய மண்ணை விட) அதிகப்படுத்துதல்.

2027. கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லது அதில் அதிகப்படுத்துவதையும் அல்லது அதை (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும்; அதன் மீது எழுதுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுலைமான் பின் மூஸா, “கப்ரின் மீது எழுதுவதையும்” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று கூடுதலாக அறிவித்துள்ளார்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْنَى عَلَى الْقَبْرِ، أَوْ يُزَادَ عَلَيْهِ، أَوْ يُجَصَّصَ» زَادَ سُلَيْمَانُ بْنُ مُوسَى: «أَوْ يُكْتَبَ عَلَيْهِ»


Nasaayi-1325

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1325. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களின் வலது கன்னத்தின் வெண்மை (நன்றாக) தெரியும் அளவிற்கு வலது புறம் திரும்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று ஸலாம் கொடுப்பார்கள்.

அவ்வாறே, அவர்களின் இடது கன்னத்தின் வெண்மை (நன்றாக) தெரியும் அளவிற்கு இடது புறம் திரும்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று ஸலாம் கொடுப்பார்கள்.

அறிவிப்பவர் : அபுல் அஹ்வஸ் (ரஹ்)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ الْأَيْمَنِ، وَعَنْ يَسَارِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ الْأَيْسَرِ


Nasaayi-1324

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1324. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பின்னால் இருந்து அவர்களின் கன்னத்தின் வெண்மை காணும் அளவிற்கு வலது புறமும் இடதுபுறமும்  திரும்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று ஸலாம் கொடுப்பார்கள்.

அறிவிப்பவர் : அபுல் அஹ்வஸ் (ரஹ்)


أَنَّهُ ” كَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ مِنْ هَاهُنَا، وَبَيَاضُ خَدِّهِ مِنْ هَاهُنَا


Nasaayi-1323

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1323. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கன்னத்தின் வெண்மை (நன்றாக) தெரியும் அளவிற்கு வலது புறம் திரும்பி ஸலாம் கொடுப்பார்கள். அவ்வாறே கன்னத்தின் வெண்மை (நன்றாக) தெரியும் அளவிற்கு இடதுபுறம் திரும்பி ஸலாம் கொடுப்பார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுல் அஹ்வஸ் (ரஹ்)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ خَدِّهِ، وَعَنْ يَسَارِهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ خَدِّهِ»


Nasaayi-1322

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1322. நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் வலது புறமும், இடது புறமும் திரும்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்’ என்று கூறும்போது அவர்களின் கன்னத்தின் வெண்மை தெரியும். அதை இப்போதும் பார்ப்பதுபோன்று இருக்கிறது என அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுல் அஹ்வஸ் (ரஹ்)


«كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ خَدِّهِ عَنْ يَمِينِهِ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، وَعَنْ يَسَارِهِ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ»


Next Page » « Previous Page