பாடம்: 149
இமாமாக நின்று தொழுவிப்பவர் தமக்கு மட்டும் (நலன் வேண்டி) பிரார்த்திப்பது விரும்பத்தக்கதன்று என்பது குறித்து வந்துள்ளவை.
357 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் இல்லத்திற்குள் -அவரது அனுமதியின்றி- பார்ப்பது கூடாது. அவ்வாறு பார்த்துவிட்டால், (அனுமதியின்றி) நுழைந்துவிட்டவர் ஆகிவிடுவார். ஒரு கூட்டத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பவர் (பிரார்த்திக்கும்போது) அனைவருக்கும் சேர்த்து பிரார்த்திக்காமல் தமக்கு மட்டும் பிரார்த்திக்கலாகாது. அவ்வாறு அவர் செய்தால், அவர்களுக்கு அவர் துரோகமிழைத்தவர் ஆவார். மேலும், சிறுநீரை அடக்கிக் கொண்டு (யாரும்) தொழுகையில் ஈடுபட வேண்டாம்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அபூஹுரைரா (ரலி), அபூஉமாமா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ், ஹஸன்’ தரத்தில் அமைந்ததாகும்.
மேற்கண்ட ஹதீஸ் அபூஉமாமா (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் யஸீத் பின் ஷுரைஹ், ஸவ்பான் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரே சிறந்ததாகவும், பிரபலமானதாகவும் தெரிகிறது.
«لَا يَحِلُّ لِامْرِئٍ أَنْ يَنْظُرَ فِي جَوْفِ بَيْتِ امْرِئٍ حَتَّى يَسْتَأْذِنَ، فَإِنْ نَظَرَ فَقَدْ دَخَلَ، وَلَا يَؤُمَّ قَوْمًا فَيَخُصَّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ، وَلَا يَقُومُ إِلَى الصَّلَاةِ وَهُوَ حَقِنٌ»
சமீப விமர்சனங்கள்