தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1846

---


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திருமணம் எனது வழிமுறையாகும். எனது வழிமுறையை எவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்.

அதிகம் விரும்பும், அதிகம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் (மறுமை நாளில்) உங்களின் மூலமாகத் தான் மாபெரும் சமுதாயத்திற்குரிய (நபியாக) நான் திகழுவேன்.

(திருமணம் செய்வதற்கு) வசதியுள்ளவர் திருமணம் செய்துகொள்ளட்டும்; யார் அதற்கான வசதி வாய்ப்புகளை பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். ஏனெனில் நோன்பு அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(இப்னுமாஜா: 1846)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ قَالَ: حَدَّثَنَا آدَمُ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«النِّكَاحُ مِنْ سُنَّتِي، فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي فَلَيْسَ مِنِّي، وَتَزَوَّجُوا، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ، وَمَنْ كَانَ ذَا طَوْلٍ فَلْيَنْكِحْ، وَمَنْ لَمْ يَجِدْ فَعَلَيْهِ بِالصِّيَامِ، فَإِنَّ الصَّوْمَ لَهُ وِجَاءٌ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1846.
Ibn-Majah-Alamiah-1836.
Ibn-Majah-JawamiulKalim-1836.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு மாஜா இமாம்

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அஸ்ஹர்

3 . ஆதம் பின் அபூஇயாஸ்

4 . ஈஸா பின் மைமூன்

5 . காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர்

6 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-33081-ஈஸா பின் மைமூன் பின் தலீதான் (ஈஸா பின் மைமூன் அல்வாஸிதீ) என்பவர் பலவீனமானவர் என்றும் விடப்பட்டவர் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் விமர்சித்துள்ளனர்.

ஆனால் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் இந்தப் பெயரில் இருவர் உள்ளனர். ஈஸா பின் மைமூன் பின் தலீதான் என்பவர் பலமானவர் என்ற கருத்தில் கூறியுள்ளார்…

முஹம்மத் பின் கஃப் என்பவரிடமிருந்து அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பவரே பலவீனமானவர். மற்றொருவர் பலமானவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் கூறியுள்ளதை இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் (இப்னுல் ஜுனைத்), அப்பாஸ் அத்தூரீ ஆகியோர் அறிவித்துள்ளனர்.

سؤالات ابن الجنيد للإمام يحيى بن معين – الفاروق (ص: 90)
132 – سَمِعْتُ يَحْيَى بن مَعِيْنٍ يَقُولُ: عِيْسَى بن مَيْمُون، الذي يُحَدِّث عن الْقَاسِم، عن عَائِشَةَ عَنِ الْنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَعْظَمُ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مَؤْنَةً “. يُقَالُ لَهُ: ابن تَلِيْدَان، وهو من آل أَبِي قُحَافَةَ، لَيْسَ بِهِ بَأْس، وهو الذي يُحَدِّث عنه حَمَّاد بن سَلَمَة. قَالَ: حَدَّثَنِي ابن سَخْبَرَةَ، هو هَذَا، ولم يرو هَذَا عن مُحَمَّدِ بن كَعْبٍ شَيْئًا.


133 – والذي يُحَدِّث عن مُحَمَّدِ بن كَعْبٍ، لَيْسَ بِشَيْءٍ، يَعْنِي آخر يُحَدِّث عن مُحَمَّدِ بن كَعْبٍ، لَيْسَ بِشَيْءٍ.


تاريخ ابن معين (رواية الدوري) ط-أخرى (2/ 130)
3950 – قال يَحْيَى: عِيسَى بن مَيْمُون، الذي يروي: “أعظم النكاح بركة أيسره مؤنة”، يقال له: ابن تَلِيدَان، وهو من ولد أبي قحافة، ويروى عن حَمَّاد بن سَلَمَة، يقول: ابن سَخْبَرة، وهو هذا.
قال يَحْيَى: وابن سَخْبَرة هذا، يروي عنه وَكِيع، وأبو نُعَيْم، وليس به بأس.

3951 – وعِيسَى الذي يروي: “أعلنوا النكاح”، ويروي حديث مُحَمَّد بن كَعْب القرظي، هو الضعيف، ليس بشيء.

1 . குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் அதிக பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன், (மூஸா) இப்னு தலீதான் என்றும் குறிப்பிடப்படுவார். இவர் அபூகுஹாபாவின் வழித்தோன்றல் ஆவார். இவர் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கும் போது இப்னு ஸக்பரா-இப்னுத் துஃபைல் ஸக்பரா என்று இவரைக் கூறுவார். வகீவு, அபூநுஐம் ஆகியோர் யார் வழியாக அறிவிக்கிறார்களோ அந்த ஈஸா தான் இவர். இவரிடம் குறைபாடு இல்லை.

இவர் முஹம்மத் பின் கஅப் என்பவரிடமிருந்து எதையும் அறிவிக்கவில்லை.

2 . திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்’ என்ற ஹதீஸை அறிவிப்பவரும், முஹம்மத் பின் கஅப் என்பவர் வழியாக ஹதீஸை அறிவிப்பவருமான மற்றொரு ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத, பலவீனமானவர் ஆவார்.

(நூல்கள்: ஸுஆலாது இப்னுல் ஜுனைத்-132, 133, தாரீகு இப்னு மயீன்-அத்தூரீ-3950, 3951)


الضعفاء الصغير للبخاري ت زايد (ص86):
266 – ‌عِيسَى ‌بن ‌مَيْمُون الْمدنِي عَن مُحَمَّد بن كَعْب مُنكر الحَدِيث


التاريخ الأوسط (ط الرشد) (3/ 581)
884- عيسى بن ميمون المدني مولى القاسم بن مُحمد القرشي صاحب مناكير، عن مُحَمد بن كعب.

என்றாலும் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், முஹம்மத் பின் கஅப் என்பவரிடமிருந்து அறிவிக்கும், காஸிம் பின் முஹம்மத் அவர்களின் அடிமையான ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்று பெயரைக் குறிப்பிட்டு இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார்.

(பார்க்க: அள்ளுஅஃபாஉஸ் ஸஃகீர்-266, இதே நூல்-தாரீகுல் அவ்ஸத்-884)


الجرح والتعديل لابن أبي حاتم (6/ 287):
1595 – ‌عيسى ‌بن ‌ميمون المدنى ويعرف بالواسطى روى عن محمد بن كعب القرظي سمعت أبى يقول ذلك،

قال أبو محمد هو من ولد ابى قحافة ويقال له ابن تليدان فيما حكاه عباس الدوري عن يحيى بن معين،

وروى عن القاسم بن محمد روى عنه حماد بن سلمة فسماه ابن سخبرة

وروى عنه عمر بن علي بن مقدم ووكيع وابو نعيم وعثمان بن عمر فصحف في اسمه عثمان بن عمر فقال أبو عيسى المدني،

نا عبد الرحمن نا أحمد بن سنان قال سمعت عبد الرحمن بن مهدي يقول استعديت على ‌عيسى ‌بن ‌ميمون في هذه الاحاديث عن القاسم بن محمد في النكاح وغيره فقال لا اعود،

ثنا عبد الرحمن نا عباس بن محمد الدوري قال – سمعت يحيى بن معين يقول ‌عيسى ‌بن ‌ميمون صاحب القاسم عن عائشة ليس بشئ.

نا عبد الرحمن نا محمد بن إبراهيم قال سمعت عمرو بن على يقول ‌عيسى ‌بن ‌ميمون المدينى متروك الحديث،

نا عبد الرحمن قال سألت ابى عن ‌عيسى ‌بن ‌ميمون المدنى الذى يروى عن القاسم بن محمد فقال هو متروك الحديث،

نا عبد الرحمن قال سألت أبا زرعة عن ‌عيسى ‌بن ‌ميمون فقال ضعيف الحديث.

இவரே இப்னு தலீதான் என்றும், ஈஸா பின் மைமூன் அல்வாஸிதீ என்றும் இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் இவரைப் பற்றி அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ், அபூஸுர்ஆ போன்ற அறிஞர்கள் விடப்பட்டவர் என்றும், பலவீனமானவர் என்றும் கூறியுள்ளதாக இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள் அறிவித்துள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-1595, 6/287)

இவருக்கு பின்னால் வந்த அறிஞர்களும் இதன்படியே ஈஸா பின் மைமூன் அல்வாஸிதீ, அல்மதனீ-இப்னு ஸக்பரா என்பவரை விடப்பட்டவர் என்று கூறியுள்ளனர். பெரும்பாலான அறிஞர்கள் விமர்சித்திருப்பது ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்பவரைத் தான் என்று தெரிகிறது.


உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்களின் இருவகையான பதிப்புகள்:

முதலாவது பதிப்பு:

الضعفاء الكبير للعقيلي (3/ 387):
1427 -‌‌ عِيسَى بْنُ مَيْمُونٍ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ. حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى السَّاجِيُّ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ مَهْدِيٍّ، قَالَ اسْتَعْدَيْتُ عَلَى عِيسَى بْنِ مَيْمُونٍ فَقُلْتُ: هَذِهِ الْأَحَادِيثُ الَّتِي يُحَدِّثُ بِهَا عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ، فَقَالَ: لَا أَعُودُ. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا عَبَّاسٌ قَالَ: قُلْتُ لِيَحْيَى: عِيسَى بْنُ مَيْمُونٍ؟ قَالَ: لَيْسَ حَدِيثُهُ بِشَيْءٍ. وَحَدَّثَنِي آدَمُ بْنُ مُوسَى قَالَ: سَمِعْتُ الْبُخَارِيَّ قَالَ: عِيسَى بْنُ مَيْمُونٍ عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، مُنْكَرُ الْحَدِيثِ

فَأَمَّا حَدِيثُهُ عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، فَحَدَّثْنَاهُ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ الْمَدَنِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَعْبٍ الْقُرَظِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «إِنَّ لِكُلِّ شَيْءٍ شَرَفًا، وَشَرَفُ الْمَجْلِسِ مَا اسْتُقْبِلَ بِهِ الْقِبْلَةُ» وَذَكَرَ الْحَدِيثَ

وَأَمَّا عَنِ الْقَاسِمِ، فَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «كَفَى بِهَا نِعْمَةً إِذَا تَجَالَسَ الرَّجُلَانِ أَوْ تَخَالَطَا أَوْ تَصَاحَبَا أَوْ تَجَاوَرَا أَوْ تَشَارَكَا أَنْ يَتَفَرَّقَا وَكُلُّ وَاحِدٍ مِنْهُمَا يَقُولُ لِصَاحِبِهِ جَزَاكَ اللَّهُ خَيْرًا» وَلَا يُعْرَفُ هَذَا الْحَدِيثُ الْآخَرُ إِلَّا بِعِيسَى، وَأَمَّا الْأَوَّلُ فَقَدْ تَابَعَهُ مَنْ هُوَ نَحْوُهُ فِي الضَّعْفِ


இரண்டாவது பதிப்பு:

الضعفاء الكبير للعقيلي ط-أخرى (4/ 510)
1433- عيسى بن مَيمون، عن القاسِم بن مُحَمد, ومحمد بن كَعب القُرَظيِّ:
4689- حَدثنا زَكَريا بن يَحيَى الساجي، قال: حَدثنا أَحمد بن سِنان، قال: سمعتُ عَبد الرَّحمَن بن مَهدي، قال استَعدَيت على عيسى بن مَيمون، فَقلتُ: هَذه الأَحاديث الَّتي تُحَدِّث بِها عن القاسِم بن مُحمد، عن عائِشة، فقال: لا أَعُودُ….

فَأَما حَديثه عن مُحَمد بن كَعب:
4692- فَحَدثناه مُحمد بن إِسماعيل، قال: حَدثنا شَبابَة، قال: حَدثنا عيسى بن مَيمون المَدَني، قال: حَدثنا مُحمد بن كَعب القُرَظي، قال: حَدثنا عَبد الله بن عَباس، أَنَّ رَسول الله صَلى الله عَليه وسَلم، قال: إِن لكُل شَيء شَرَفًا، وشَرَف المَجلس ما استُقبِل به القِبلَة, وذَكَر الحَديث.

وأَما عن القاسِم:
4693- فَحَدثنا مُحمد بن إِسماعيل، قال: حَدثنا الحَسن بن عَلي، قال: حَدثنا يَزيد بن هارون، قال: أَخبَرنا عيسى بن مَيمون، عن القاسِم، عن عائِشة، قالَت: قال رسول الله صَلى الله عَليه وسَلم: كَفَى بِها نِعمَةً إِذا تَجالَس الرَّجُلان، أَو تَخالَطا، أَو تَصاحَبا، أَو تَجاورا، أَو تَشارَكا, أَن يَتَفَرَّقا وكُل واحِد منهُما يقول لصاحِبه: جَزاك الله خَيرًا.
ولا يُعرَف هَذا الحَديث الآخَر إِلاَّ بِعيسى، وأَما الأَوَّل فَقد تابَعَه مَن هو نَحوه في الضَّعفِ.

இரண்டாவது பதிப்பில், உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் ஈஸா பின் மைமூன் என்பவர் இருவரிடமிருந்து அறிவித்துள்ளார் என்று அவ்விருவரின் பெயர்களையும், அவர்களின் செய்திகளையும் தனித்தனியாக குறிப்பிட்டுள்ளார்.

1 . முஹம்மத் பின் கஅப் அல்குரழீ

2 . காஸிம்

ஆனால் முதல் பதிப்பில், காஸிம் பின் முஹம்மத் பின் கஅப் என்று எழுத்துப் பிழையாக உள்ளது. இது எழுத்துப்பிழை என்பதை, உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் அடுத்தடுத்து இருவரின் செய்திகளை கூறுவதிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

எனவே காஸிம் என்பவரை காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர், காஸிம் பின் முஹம்மத் பின் கஅப் என்ற இருவராக பிரிக்கத் தேவையில்லை…


…இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செஆய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1846,


இந்தக் கருத்தில் வரும் சரியான செய்திகள்:

பார்க்க: புகாரி-1905, 5063, முஸ்லிம்-2714, அபூதாவூத்-2050, …


மேலும் பார்க்க: அஹ்மத்-12613.

1 comment on Ibn-Majah-1846

  1. நாம் ஆய்வு செய்த வகையில் இந்த ஹதீஸை தாரகுத்னீ மட்டும் பதிவு செய்துள்ளார்கள்.

    ☞⁠ தரம்:
    إسناده ضعيف جدا

    ☞⁠காரணம்:
    فيه الحسن بن عمارة و فيه عبد الله بن سعيد أبو الخصيب , و سليمان بن عبد العزيز مجهولان

    📌தாரகுத்னீ:

    ٣٦٧١ – نا أَبُو عَلِيٍّ الْحُسَيْنُ بْنُ الْقَاسِمِ بْنِ جَعْفَرٍ الْكَوْكَبِيُّ , نا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ أَبُو الْخَصِيبِ , نا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الْعَزِيزِ , نا الْحَسَنُ بْنُ عُمَارَةَ , نا أَبُو جَعْفَرٍ الْمَنْصُورُ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ , عَنِ ابْنِ عَبَّاسٍ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ”

    اجْتَنِبُوا فِي النِّكَاحِ أَرْبَعَةً: الْجُنُونَ , وَالْجُذَامَ , وَالْبَرَصَ

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.