அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு ஆடு சமைக்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்கு அதன் முன்னங்கால் ஒன்றை எடுத்துத் தாருங்கள்” என்று கூறினார்கள். (நபித்தோழர் ஒருவர்) அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள் மீண்டும், “எனக்கு அதன் முன்னங்கால் ஒன்றை எடுத்துத் தாருங்கள்” என்று கூறினார்கள். அதையும் அவர் கொடுத்தார்.
பிறகு நபி (ஸல்) அவர்கள், “எனக்கு அதன் முன்னங்கால் ஒன்றை எடுத்துத் தாருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அந்த நபித்தோழர், “அல்லாஹ்வின் தூதரே! ஆட்டுக்கு இரண்டு முன்னங்கால்கள் தானே உள்ளன!” என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், “(உறுதியாக) நீ அதைத் தேடியிருந்தால், (இன்னொன்றையும்) கண்டிருப்பாய்” என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 10706)حَدَّثَنَا الضَّحَّاكُ، حَدَّثَنَا ابْنُ عَجْلَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ،
أَنَّ شَاةً، طُبِخَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطِنِي الذِّرَاعَ» فَنَاوَلَهَا إِيَّاهُ، فَقَالَ: «أَعْطِنِي الذِّرَاعَ» فَنَاوَلَهَا إِيَّاهُ، ثُمَّ قَالَ: «أَعْطِنِي الذِّرَاعَ» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا لِلشَّاةِ ذِرَاعَانِ قَالَ: «أَمَا إِنَّكَ لَوِ الْتَمَسْتَهَا لَوَجَدْتَهَا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-10288.
Musnad-Ahmad-Shamila-10706.
Musnad-Ahmad-Alamiah-10288.
Musnad-Ahmad-JawamiulKalim-10479.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . ளஹ்ஹாக் பின் மக்லத்-அபூஆஸிம்
3 . முஹம்மத் பின் அஜ்லான்-இப்னு அஜ்லான்
4 . அஜ்லான் (அவர் தந்தை)
5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41097-இப்னு அஜ்லான், ராவீ-28282-அஜ்லான் ஆகியோர் நடுத்தரமானவர்கள்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/877, 1/671)
எனவே இது ஹஸன் தர செய்தியாகும்.
இந்தச் செய்தியை இப்னு அஜ்லான் அவர்களிடமிருந்து ளஹ்ஹாக் பின் மக்லத், ஸஃப்வான் பின் ஈஸா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
1 . ளஹ்ஹாக் பின் மக்லத் அவர்கள் முஹம்மத் பின் அஜ்லான் —> அஜ்லான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
2 . ஸஃப்வான் பின் ஈஸா அவர்களிடமிருந்து அறிவிக்கும் அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ், உக்பா பின் முக்ரம் ஆகியோர் ஸஃப்வான் பின் ஈஸா —> முஹம்மத் பின் அஜ்லான் —> அஜ்லான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
3 . ஸஃப்வான் பின் ஈஸா அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் பஷ்ஷார் அவர்கள் மட்டுமே முஹம்மத் பின் அஜ்லான் —> ஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
இவற்றில் மிகப் பலமான இருவர் அறிவித்துள்ள முஹம்மத் பின் அஜ்லான் —> அஜ்லான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரே சரியானதாகும்.
முஹம்மத் பின் பஷ்ஷார் அவர்கள் அறிவிக்கும் முஹம்மத் பின் அஜ்லான் —> ஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடர் தவறானது. இதை முஹம்மத் பின் பஷ்ஷார் அவர்கள் சரியாக அறிவித்திருந்தாலும் இதில் விமர்சனம் உள்ளது.
الثقات لابن حبان (7/ 386):
… عِنْدَهُ صحيفَة عَنْ سعيد المَقْبُري بَعْضهَا عَنْ أَبِيه عَنْ أَبِي هُرَيْرَةَ وَبَعضهَا عَنْ أَبِي هُرَيْرَةَ نَفسه
قَالَ يَحْيَى الْقَطَّان سَمِعت مُحَمَّد بْن عجلَان يَقُول
كَانَ سعيد المَقْبُري يحدث عَنْ أَبِيه عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَن أَبِي هُرَيْرَةَ فاختلط على فجعلتها كلهَا عَنْ أَبِي هُرَيْرَة
قَالَ أَبُو حَاتِم رضي الله عنه وَقد سمع سعيد المَقْبُري من أَبِي هُرَيْرَةَ وَسمع عَنْ أَبِيه عَنْ أَبِي هُرَيْرَةَ فَلَمَّا اخْتَلَط عَليّ بْن عجلَان صَحِيفَته وَلم يُمَيّز بَينهمَا اخْتَلَط فِيهَا وَجعلهَا كلهَا عَنْ أَبِي هُرَيْرَةَ
وَلَيْسَ هَذَا مِمَّا يهى الْإِنْسَان بِهِ لِأَن الصَّحِيفَة كلهَا فِي نَفسهَا صَحِيحَة فَمَا قَالَ بْن عجلَان عَنْ سعيد عَنْ أَبِيه عَنْ أَبِي هُرَيْرَةَ فَذَاك مِمَّا حمل عَنْهُ قَدِيما قبل اخْتِلَاط صَحِيفَته عَلَيْهِ وَمَا قَالَ عَنْ سعيد عَنْ أَبِي هُرَيْرَةَ فبعضها مُتَّصِل صَحِيح وَبَعضهَا مُنْقَطع لِأَنَّهُ أسقط أَبَاهُ مِنْهَا فَلَا يجب الِاحْتِجَاج عِنْد الِاحْتِيَاط إِلَّا بِمَا يروي الثِّقَات المتقنون عَنْهُ عَنْ سعيد عَنْ أَبِيه عَنْ أَبِي هُرَيْرَةَ
وَإِنَّمَا كَانَ يهي أمره ويضعف لَو قَالَ فِي الْكل سعيد عَنْ أَبِي هُرَيْرَةَ فَإِنَّهُ لَو قَالَ ذَلِك لَكَانَ كَاذِبًا فِي الْبَعْض لِأَن الْكل لم يسمعهُ سعيد عَنْ أَبِي هُرَيْرَةَ فَلَو قَالَ ذَلِك لَكَانَ الِاحْتِجَاج بِهِ سَاقِطا على حسب مَا ذَكرْنَاهُ
இப்னு அஜ்லான் அவர்கள் தன்னிடம் உள்ள நூலில் ஸயீத் பின் கைஸான்-அல்மக்புரீ அவர்களின் செய்திகளை பதிவு செய்திருந்தார்.
ஸயீத் அல்மக்புரீ அவர்கள் சில ஹதீஸ்களை அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக அறிவித்துள்ளார். சில ஹதீஸ்களை அவரின் தந்தை-அபூஸயீத் —> அபூஹுராரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். சில ஹதீஸ்களை ஒருமனிதர் —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். நூலில் பாதிப்பு ஏற்பட்டதால் இதில் எனக்கு குழப்பம் ஏற்பட்டு அனைத்தையும் ஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா (ரலி) என்று அறிவித்துவிட்டேன் என்று இப்னு அஜ்லானே கூறியதாக யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அல்கத்தான் கூறியுள்ளார்.
இதைப் பற்றி சில தகவலை குறிப்பிட்ட இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவர் ஸயீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் சிலவை முத்தஸிலாகவும் இருக்கலாம். சிலவை முன்கதிஃயாகவும் இருக்கலாம்.
எனவே இப்னு அஜ்லான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் பலமானவர்கள் ஸயீத் அல்மக்புரீ —> அவரின் தந்தை —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்தால் அதை ஏற்கலாம். ஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்தால் பேணுதல் அடிப்படையில் ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸிகாத்-7/386)
பார்க்க: ராவிபெயர்-முஹம்மத் பின் அஜ்லான்.
இந்தச் செய்தியின் நிகழ்வோடு சம்பந்தப்பட்டவர் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களாக இருக்கலாம். அல்லது வேறு நபித்தோழராக இருக்கலாம். இரண்டு வகையாக இதை இப்னு அஜ்லான் அறிவித்துள்ளார் என்பதால் இதை அவர் நன்றாக மனனமிடவில்லை என்று தெரிகிறது. இது இந்தச் செய்தியின் தரத்தை பாதிக்காது.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- முஹம்மத் பின் அஜ்லான் —> அஜ்லான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-10706, முஸ்னத் பஸ்ஸார்-8345, 8346, இப்னு ஹிப்பான்-6484,
- முஹம்மத் பின் அஜ்லான் —> ஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: குப்ரா நஸாயீ-6625,
இந்தச் செய்தி வேறு சில நபித்தோழர்கள் வழியாகவும் வந்துள்ளது….
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-3839,
சமீப விமர்சனங்கள்